Pages

Monday, January 31, 2011

மீனவ நண்பன்

Monday, January 31, 2011

மீனவ நண்பன்


தலைவா...!

உங்களை கடலில் தூக்கிப்போட்டால்

கட்டுமரமாக மிதப்பீர்களாமே...

ஆனால் நாங்கள் கடலில்

பட்டுப்போன மரமாக

வீசப்படுகிறோம்.

எங்கள் இனங்கள் பிணங்களாய்

மிதக்கின்றன..

நீங்கள் எத்தனை கோடி வேண்டுமானாலும்

சுருட்டிக்கொள்ளுங்கள்...

அது அரசியல்வாதிகளின் அடிப்படை உரிமை
 
ஆனால்

எங்கள் உரிமைகளுக்கு ஒரு கோடியாவது காண்பியுங்கள்..

கூட்டணிக்கட்சித்தலைவர்களுக்கு

இதயத்தில் இடம் கொடுத்தது போதும்..

எங்கள் உயிர் உடலில் தங்க

ஒரு இடம் கொடுங்கள்..

ஓட்டுக்காக இலவசங்களை அள்ளி

வீசுகிறீர்கள்...

எங்கள் உயிர் எங்கள் வசம் தங்க

ஒரு ஏற்பாடு செய்யுங்கள்..

எம் ஜி ஆர் படத்தில் நடித்தே மீனவ நண்பன் ஆனார்...

நீங்கள் அரசியல் மேடையில் நடித்து

மீனவ எதிரி ஆகி விடாதீர்..

கடைசியாக ஒரு வார்த்தை...

இலங்கைத்தமிழர்களைத்தான் காக்க முடியவில்லை..

இங்கே இருக்கிற தமிழர்களையாவது.........
 
 
 

Saturday, January 29, 2011







Spectrum Raja......................now ---par---------le -------g--raja.........


சின்னப் பையன் சார் எனக்கு விரல் வெச்சா கூட கடிக்கத் தெரியாது
 
 
3 idiots மீண்டும் விஜய் ........................................
 
சொல்றதுக்கு ஒண்ணுமில்லைங்க போட்டோவ பாத்துக்கோங்க அவ்ளோதான்...

Thursday, January 27, 2011

பயோ டேட்டா : ராமதாஸ்

பயோ டேட்டா : ராமதாஸ்


பெயர்: மருத்துவர் ராமதாஸ்


தொழில்:அரசியல் வியாபாரி


பிடித்த விளையாட்டு: அந்தர் பல்ட்டி


பிடித்த நிறம்: பச்சோந்தியின் நிறம்


பிடித்த வார்த்தை: மத்திய மந்திரி அன்புமணி


பொழுதுபோக்கு: கூட்டணி விட்டு கூட்டணி மாறி ஓடிபிடித்து விளையாடுவது


சாதனை: சாலைகளில் மரம் வெட்டி போட்டு போட்டு கட்சியை வளர்த்தது


வேதனை: அன்புமணி ராஜ்ய சபா எம் பி ஆகாதது


சோதனை: இதுவரை யாரும் கூட்டணிக்கு அழைக்காமல் காமெடி பீஸ் ஆக்கியது


கருணாநிதி: நம்பவைத்து கழுத்தை அறுத்தவர்


ஜெயலலிதா: நம்பினாலும் நம்பாவிட்டாலும் கழுத்தை அறுப்பவர்


அன்புமணி: இலவச கோட்டாவில் ( அதாங்க ராஜ்ய சபா) எம் பி ஆவதற்காகவே பிறந்தவர்


காடுவெட்டி குரு : கருணாநிதியை திட்டுவதற்காகவே கட்சியில் இருப்பவர்


தி மு : குடும்பத்துக்காக நடத்தப்படும் கட்சி


பா : பாசமுள்ள மகனுக்காக (அன்புமணி ) நடத்தப்படும் கட்சி


நடிகர்கள்: அரசியலுக்கு வரக்கூடாதவர்கள்


லட்சியம்: ஜாதியின் பெயரால் அரசியல் நடத்தி ஆட்சியில் அமருவது...

முதல் பதிவு

முதல் பதிவு

ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி... அதுக்கு எத்தன சைபர்னு கேட்டவங்க ரொம்ப அதிகம்.. இப்போ தெரிஞ்சுகோங்க.. (நான் முதல்லையே சொன்னேன்ல, கணக்குல புலின்னு.. நம்ம கைல வச்சுக்காதிங்க

 
 
 
பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒழிப்பேன்னு சொல்றாங்க..மொதல்ல இந்த டி.வி சீரியலை ஒழிங்கடா... இதுனால நாசமா போறது குழந்தைக தான்..


"ஹல்லோ...நிதியானந்தவா...இங்க எல்லாம் கெலுடு கட்டைக தான் இருக்குது...ரஞ்சிதாவ கொஞ்சம் அனுப்ப முடியுமா..."