ஒரு புலி தன்னுடைய கல்யாண வரவேற்பு விழாவுக்கு காட்டிலிருந்த அனைத்து மிருகங்களையும் அழைத்தது.
அந்த திருமண விழாவில் ஒரு எலி சந்தோஷமாக
நாட்டியமாடியது.
இதைப் பார்த்து புலிக்குக் கோபம்
வந்தது.
"என்ன தைரியம் இருந்தால் இங்கே வந்து நீ
நாட்டியம் ஆடுவாய்? "
என்று புலி ஆவேசமாகக் கத்தியது.
அதைக் கேட்ட எலி,
"சும்மா கத்தாதே, கல்யாணத்துக்கு முன் நானும்
புலியாகத்தான் இருந்தேன்."
என்றது.
***********************************
விறகுவெட்டியும் தேவதையும் கதையும்
சிறு வயதில் பள்ளிபுத்தகத்தில் படித்திருக்கிறோம்.
அதே விறகுவெட்டி தன் மனைவியை தெலைத்துவிட்டு
குளக்கரைக்கு சென்று தேவதையிடம் தன் மனைவியை கண்டுபிடித்து தருமாறு
வேண்டினான்.
அவன் முன் தோன்றிய தேவதையும் ஒரு நடிகையை
காட்டி இவளா உன் மனைவி என்றது. உடனே அவனும் ஆம் என்றான் அவன் பொய் சொல்லுவதைக்
கண்டு கோபப்பட்ட தேவதை முதலில் நல்லவனாக இருந்த நீ இப்படி மாறிவிட்டாயே
என்றது.
அதற்கு அவன் அப்படி இல்லை நீ முதலில் காட்டிய
நடிகையை நான் இல்லை என்றால் வேறு இருவரையும் காட்டுவாய்,கடைசியில் என் மனைவியும்
காட்டும் போது நான் ஆம் என்றதும், முன்பு கோடலிகளை கொடுத்தது போல நாலு பேரையையும்
என்க்கே கொடுப்பாய் என்னால் ஒருத்தியவே சமளிக்க முடியவில்லை இதில் நாலு பேர
என்றான்
**********************************
ஓரு குளத்தில் சிலர் மீன்
பிடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பிடித்த மீன்களை ஒரு கூடையில் வைத்து
இருந்தனர்.
அங்கு வந்த பருந்து அதில் இருந்த மீன் ஒன்றை
கவ்வி பறந்து சென்றது, அதை கவனித்த காக்கா கூட்டம் அந்த பருந்தை விரட்டியது. அந்த
பருந்து வளைந்து, நெளிந்து பறந்து சென்றது.
மீன் எடையால் அதால் மேலேழும்பி பறக்க
முடியவில்லை, காக்கா கூட்டமும் விடுவதாக இல்லை.
கடைசில் அந்த பருந்து மீனை விட்டுவிட்டு
பறந்து சென்றது.
காக்கா கூட்டமும் பருந்தை விட்டு மீனை நோக்கி
பறந்தன. பருந்தும் நிம்மதியாக பறந்து சென்றது.
நாமும் பிரச்சனைகளை விட்டு விட்டால்
நிம்மதியாக வாழலாம்..