Pages

Tuesday, May 29, 2018

அப்பாக்களும் பாவம்தான் !







ஒரு வீட்டில்,
அம்மாவின் ஆயிரம் துன்பங்ளுக்கும்
அப்பாவே காரணம் என்பார்கள் .

படிக்காத பிள்ளையென்றால்
அப்பன் புத்தி என்பதாய்
அனாயசமாய் புகார் வாசிப்பார்கள்

வீட்டின் வறுமைக்கு
விசேச காரணமாயும்
அப்பாவே பலியாடாய் நிற்க வேண்டும்.


அலுவலகத்தில் ,
சமூகத்தில் ,
பெற்ற வீட்டில்,
உறவின் முன்,
நண்பர்களிடத்தில்,


இப்படி
அப்பாவுக்கு ஆயிரம்
முகங்கள் உண்டு
ஆனால் ,

அவருக்கு
ஒரே ஒரு மனசுதான் இருக்கிறதே
என்றாவது அதற்கும்
வலிக்கும் என்று
யாராவது நினைத்ததுண்டா ?

Sunday, May 27, 2018

வார்த்தைகளில் இல்லை வெற்றி. அது வெளிவரும் விதத்தில்தான் வெற்றி இருக்கிறது.

*ஒரு டீக்கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம், டீயை விடவும் சூடாக இருந்தது.*

"இருவடை எடுத்து ஒருவடை என்பார்
திருவோடு ஏந்தி தெருவோடு போவார்.!"

மாஸ்டர் டீ போடுகிற நேரத்தில், தட்டிலிருக்கும் வடையில் இரண்டை கபளீகரம் செய்து விட்டு ஒரு வடைதான் என்று காசு கொடுப்பவர்களை கண்டிப்பதற்காக எழுதப்பட்ட வாசகம் இது. சுவாரஸ்யமாக இருக்கிறது என்றாலும் வடை எடுக்கிற எல்லோருக்கும் இது சங்கடத்தையே ஏற்படுத்தும்.

இதைப் படிக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் மன உணர்விற்கும் இனி வரும் வரிகளை படிக்கும்போது ஏற்படும் மன உணர்விற்கும் உள்ள வித்தியாசத்தினை கவனியுங்கள்.

*ஒரு ஆட்டோவில் எழுதப்பட்ட வாசகம், ‘உங்களின் வழிச் செலவு, எங்களின் வாழ்க்கை செலவு.’*

டிரைவர் சீட்டின் முதுகில் எழுதப் பட்டிருந்தது இந்த வாசகம்... இறங்கிய பின் யாரையும் பேரம் பேச விடாது. மீட்டருக்கு மேல ஐந்து ரூபாய் போட்டுக் கொடுங்க சார் என்கிற வார்த்தைக்கும் இந்த வாசகத்திற்கு எத்தனை வேறுபாடு.

அதனால் தான் சொல்கிறேன், சொல்லும் விதத்தில் வெல்லலாம்.

*ஒரு மொத்த விற்பனை மீன் கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம்,*
*மீன் சாப்பிட வேண்டாம் என்று நினைத்தேன். மீனவன் சாப்பிட வேண்டாமா?*

வார்த்தைகளில் இல்லை வெற்றி. அது வெளிவரும் விதத்தில்தான் வெற்றி இருக்கிறது.

டீக்கடை வரியும் ஆட்டோவில் எழுதப்பட்ட வரிகளும் ஒரே விஷயத்தினைத்தான் சொல்கிறது. ஆனால் சொல்லப்பட்ட விதம்தான் அதில் வித்தியாசம்.

*சொல்ல வந்ததை அழகாக சொல்வது ஒரு கலை.*
*நினைக்கும் விஷயங்களை எல்லாம் பேசாமல் அதை செம்மைபடுத்தி பேசிப்பாருங்கள் வெற்றி நிச்சயம்.*

ஒரு ஹோட்டலில் எழுதி மாட்டி இருக்கும் வாசகம்...
‘வீட்டு சமையலுக்கு ஒரு நாள் விடுமுறை விடுங்கள்.
படித்ததில் பிடித்தது..

நீங்களும் ரயிலில் முன்பதிவு விதிமுறைகளும்!



நீங்களும் ரயிலில் முன்பதிவு விதிமுறைகளும்!

*ஏன் ரயிலில் மட்டும் நீங்கள் விரும்பிய இருக்கையை தேர்வு செய்ய முடியாது  என தெரியுமா?*

நம்மில் பலருக்கு இந்த சந்தேகம் இருக்கும். முதியவர்களில் இருந்து இளைஞர்கள் வரை தங்களுக்கு ஏற்ற சீட் ஒருமுறை கூட ரயிலில் கிடைக்க வில்லை என புலம்புவதை கூட காதுப்பட கேட்டிருப்போம்.

ஆனால், இது ஏன், எதனால் பஸ்களில் விருப்பமான சீட் புக் செய்ய வாய்ப்புகள் இருக்கும் போது ரயில்களில் மட்டும் இல்லை என நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா ?

*உண்மையில் இதற்கு பின்னாடி இருப்பது இயற்பியல் காரணம்...*

*தியேட்டரும் - ரயில் வண்டியும்!*

நாம் திரையரங்கில் எந்த இருக்கை வேண்டுமானாலும் நமது விருப்பத்தின் பேரில் புக் செய்யலாம்.

ஹவுஸ்புல் ஆனாலும், ஓரிரு இருக்கைகள் புக் ஆனாலும் எந்த பாதிப்புகள் இல்லை. ஏனெனில் இது நகர்வு தன்மை அற்ற இடம்.

ஆனால், ரயில் என்பது அதிக வேகத்தில் பயணிக்க கூடிய நகர்வு பொருள். இங்கே நமது விருப்பதின் பேரில் இருக்கை புக் செய்யும் போது பல தவறுகள் மற்றும் எளிதாக  அபாய விபத்துக்கள் உண்டாக வாய்ப்புகள் உள்ளன.

கோச்! பொதுவாக ரயில்களில் S1, S2 S3.... என பல கோச்கள் இருக்கும். ஒவ்வொரு கோச்சிலும் 72 இருக்கைகள் இருக்கும். மேலும், கீழ், மத்திய, மேல் படுக்கை அமைப்பும் கொண்டிருக்கும்.

*டிக்கெட் புக் ஆகும் முறை!*

நீங்கள் டிக்கெட் பதிவு செய்யும் போது ஒவ்வொரு கோச்சிலும் மத்திய பகுதியில் இருக்கும் இருக்கைகள் தான் முதலில் பதிவு
செய்யப்படும். அதாவது. 30 - 40 என்ற எண்களுக்குள் இருக்கும் இருக்கைகள் தான் பதிவு செய்வார்கள். எல்லா கோச்சிலும் இந்த மத்திய இருக்கைகள் பதிவான பிறகு. அதற்கடுத்த  இருக்கைகள் சீரான முறையில் பதிவு செய்யப்படும்.

பர்த் பதிவுகளும் இப்படி தான் பதிவு செய்வார்கள். முதலில் கீழ் பர்த், பிறகு மத்தியில், அடுத்த மேல் பர்த் பதிவுகள் செய்யப்படும்.

*புவியீர்ப்பு மையம்!*

ரயிலில் இப்படி டிக்கெட் பதிவு செய்து பிரித்தால் தான் ரயில் ஓடும் போது அதன் புவியீர்ப்பு மையம் பாதிக்கப்படாமல் இருக்கும். ரயில் ஓடும் போது அதன் சமநிலை பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முறை பின்பற்றப்படுகிறது.

*கடைசி நேரத்தில்...*

கடைசி நேரத்தில் டிக்கெட்  யாராவது கேன்சல் செய்து உங்களுக்கு இருக்கை கிடைத்தால், அது 2,3 அல்லது 71,72 என்ற
இருக்கையாக கிடைப்பதற்கு இந்த முறை தான் காரணம்.

*சற்று யோசியுங்கள்!*

 நூறு கிலோமீட்டர்  வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கும் ரயிலில் S1, S2, S3 முழுவதும் நிரம்பியும், S4, S5, S6 காலியாக இருந்து, இதர கோச்கள் ஓரிரு இருக்கை மட்டும் பதிவாகியிருந்தால், கண்டிப்பாக ரயிலின் வேகத்தை கூட்டி, குறைத்து, ப்ரேக் போடும் போது விபத்துகள் நேர வாய்ப்புகள் உண்டு.

இதை தவிர்க்க தான்  இந்த முறையில் டிக்கெட் புக் செய்யப்படுகிறது.

படித்தேன்; பகிர்ந்தேன்

அன்புடன் ...குமார் 

Tuesday, May 22, 2018

உங்கள் பலம் என்ன... உங்களுக்குத் தெரியுமா? - வாழ்க்கைப் பாடம் சொல்லும் கதை!


ரு வேலையைச் செய்து முடிக்க ஒருபோதும் குழந்தைக்கு உதவாதீர்கள். ஏனென்றால், `நம்மால் முடியும்என்று அந்தக் குழந்தை நினைத்துவிடக்கூடும்.’ - தெளிவாகச் சொல்கிறார் இத்தாலியைச் சேர்ந்த கல்வியாளரும் மருத்துவருமான மரியா மான்டிஸ்ஸோரி (Maria Montessori). குழந்தைக்கு ஏன் உதவி செய்யக் கூடாது? ஏனென்றால், ஒரு வேலையை முழுமையாக, பிறரின் உதவியில்லாமல் செய்ய அந்தக் குழந்தை கற்றுக்கொள்ளாமலேயே போய்விடும். குழந்தைக்குச் சரி... வளர்ந்த பெரியவர்களுக்கு? அவர்களுக்கும் ஒரு பொன்மொழி உண்டு. அது வேறு ரகம்! `ஒரு வேலையைச் செய்து முடிக்க உங்களுடைய எல்லா ஆற்றலையும் பயன்படுத்துங்கள்என்கிறது ஒரு பிசினஸ் மேனேஜ்மென்ட் வாசகம். ஒருவர், தன்னுடைய பலமென்ன, தன்னிடம் என்னென்ன ஆற்றல் இருக்கின்றன என்பதைத் தெரிந்துவைத்திருந்தால்தான் இது சாத்தியம். இந்த உண்மையை அழகாக எடுத்துச் சொல்கிறது ஒரு கதை.
அது ஒரு காடு. ஒரு தந்தையும் அவரது மகனும் நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். மகனுக்கு 12 வயதிருக்கலாம். பள்ளி விடுமுறைக் காலம். அதோடு அவன் ஒரு சாகச விரும்பி என்பதால், காட்டுக்குள் ஒரு ரவுண்டு போய் வரலாம் என்று அப்பா அவனை அழைத்து வந்திருந்தார். மரங்கள், பூச்சிகள், விலங்குகள், பறவைகள்... எனப் பார்க்கும் ஒவ்வொன்றைப் பற்றியும் அவன் கேள்வி கேட்டான். அப்பா, பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டு வந்தார். சில கேள்விகளுக்குப் பதில் தெரியாதபோது, `தெரியாது என்று உண்மையை ஒப்புக்கொண்டார். காடு அந்தச் சிறுவனுக்கு அதிசயமாக இருந்தது. சதா வீட்டிலும் பள்ளியிலும் மைதானத்திலும் நகர்ந்துகொண்டிருந்த வாழ்க்கை, இந்தக் காட்டுக்கு முன்னால் ஒன்றுமே இல்லை என்று தோன்றியது. இதைச் சொன்னபோது, தந்தை சிரித்தார். `நாம நகரத்துலதானே வாழவேண்டியிருக்கு கண்ணு! என்று சொன்னார்.
இருவரும் நடந்தார்கள். வழியில் ஒரு பெரிய மரக்கட்டை கிடந்தது. அப்பா, மகனைப் பார்த்தார். அவனும் அவரைப் பார்த்தான். ``ஏம்ப்பா... இந்த மரக்கட்டை போற வர்றவங்களுக்கு இடைஞ்சல்தானே?’’ என்று கேட்டான்.
``நடந்து போறவங்களுக்கு பிரச்னையில்லை. இதைச் சுத்திக்கிட்டு போயிடலாம். வாகனங்கள் ஏதாவது வந்தால்தான் கஷ்டம்.’’
``வாகனங்கள் இந்தப் பக்கம் வருமா என்ன?’’
``வருமே... வனத்துறையைச் சேர்ந்தவங்களோட ஜீப், டிரக்கெல்லாம் வரும்.’’
``சரிப்பா. அப்படின்னா, நான் வேணும்னா இந்த மரக்கட்டையை நகர்த்திப் போடட்டுமா?’’
``ம்... முயற்சி செய்யேன்.’’

``என்னால இந்தக் கட்டையை நகர்த்திட முடியும்னு நீங்க நினைக்கிறீங்களாப்பா?’’
``உன்னுடைய எல்லா ஆற்றலையும் பயன்படுத்தினா உன்னால முடியும்.’’
சிறுவன் தன்னுடைய தோள் பையைக் கீழே வைத்தான். அந்தக் கட்டையைக் கையைக் கொடுத்து மெள்ள அசைத்துப் பார்த்தான். பிறகு தன் பலத்தையெல்லாம் திரட்டி அதை நகர்த்த முயன்றான். அதை அசைக்கவே அவனால் முடியவில்லை.
ஏமாற்றத்தோடு அவன் சொன்னான்... ``அப்பா நீங்க சொன்னது தப்பு. என்னால இதை அசைக்கவே முடியலை.’’
``மறுபடியும் முயற்சி செஞ்சு பாரேன்...’’ என்று பதிலுக்குச் சொன்னார் தந்தை.
மறுபடியும் அந்தச் சிறுவன் மரக்கட்டையை நகர்த்தப் பார்த்தான். எவ்வளவு முயன்றும் அவனால் அதை நகர்த்த முடியவில்லை.``என்னால முடியலைப்பா’’ என்று பலவீனமான குரலில் சொன்னான்.

அப்பா கடைசியாகச் சொன்னார்... ``மகனே நான் உன்கிட்ட என்ன சொன்னேன்? `உன்னுடைய எல்லா ஆற்றலையும் பயன்படுத்துனு சொன்னேன் இல்லையா? நீ அதைச் செய்யலை. நீ என்னை உதவிக்குக் கூப்பிடவே இல்லை.

நன்றி-விகடன் 


Friday, May 18, 2018

Who will cry when you die?" - ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்...


Who will cry when you die?"ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்...
அதாவது,
"
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?" என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...
நீ பிறந்த போதுநீ அழுதாய்... உலகம் சிரித்தது...
நீ இறக்கும் போதுபலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மாஇந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...
1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்...
2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும்நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.
3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.
4. அதிகாலையில் எழ பழகுங்கள்.
வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.
5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.
அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.
6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள்.
எங்கு சென்றாலும்பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.
7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.
8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக ( Gift ) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.
9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.
10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கிஅது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.
11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசைபுன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.
12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும்நல்ல நட்பும் கிடைக்கலாம்.
13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.
14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாகநேர்த்தியாக செய்யுங்கள்.
15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.
16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.
17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.
18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.
19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே!
"
ஆணவம் ஆயுளை குறைக்கும்..."

மேற்கண்ட கருத்துக்களை பின் பற்றி,
ஆனந்தமாக வாழுங்கள்..