Pages

Friday, May 6, 2011

இரசித்த சில கடிகள்....... :



இரசித்த சில கடிகள்....... :



மறதி மட்டும் இல்லையென்றால் நாம் எப்போதோ பைத்தியம் ஆகி இருப்போம்.#கொஞ்ச நேரத்திற்கு முன்னால் பார்த்த வேட்டைக்காரன் காட்சி மறந்திடுச்சு :) @Nagarajachozhan

கிராமத்தில் புகுந்த கரடியை அடித்துக் கொன்ற மக்கள் #அப்போ இனி அரட்டை அரங்கம்? @arattaigirl

ஐபிஎல் போர் அடிக்கிறது. ல.மோடி மேட்செல்லாம் ஃபிக்ஸ் பண்ணி ஜாலி பண்ணிட்டிருந்தார்.பிசிசிஐ நேர்மையா மேட்ச் நடத்தி போர் ஆக்கிட்டாங்களோ! @athisha

பின்லேடனுக்கு பயமுன்னா என்னனே தெரியாது..... ஏனா அவனுக்கு தமிழ் தெரியாது @prbkr

தமிழக அரசுக்கு வெளிநாட்டு பத்திரிகைகள் பாராட்டு: கருணாநிதி # கரண்ட் கம்பில கைய வச்சாக் கூட உயிர் போகாத ஒரே மாநிலம்னா?@illuminati8 

பேஸ்புக் முழுக்க ஒசாமா ஸ்பாம் மெசேஜ்கள் நிரம்பி வழகின்றன.. இதுக்காகவாவது அந்தாளை கொல்லாம இருந்திருக்கலாம். ;-((( @athisha

கனிமொழி வீட்டில் கருணாநிதி அவசர ஆலோசனை. நெட்டில் பார்த்த கமெண்ட்: வாழப் போற இடத்தில எப்படி நடந்துக்கணும்னு சொல்லிக் கொடுக்குறாங்க போல.. ;) @illuminati8 

Obama to Osama - Sorry machi year end appraisal! @Piliral


டிவி செய்தியில் மின்வெட்டு குறையும்ங்ற வரியைப் படிக்கிறப்போ, பொசுக்னு கரெண்ட் போகுதே அது எப்படி!? @kathirerode

இனி விஜயகாந்த் என்னதான் பண்ணுவாரு! #ஒசாமா மரணம்! @athisha

கத்தியை எடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவு - மு.க # கசாப்புகடை பாய்களும்,காய்கறி நறுக்கும் தாய்மார்களும் கத்திய கீழ போட்டுறுங்க@kolaaru


ஒசாமாவை சுட்டது யாரு ?-சர்ச்சை #நீங்க அதைக்கண்டுபுடிங்க, நாங்க 1.76லட்சம்கோடிய சுட்டது யாருன்னு கண்டுபுடிக்கிறோம் @karu



மனைவி தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த கணவன் தப்பி ஓட்டம்.
 தப்பிச்சபிறகு ஏன் தப்பி ஓடனும்!!?? # டவுட்டு

அரிசி கிலோ 1 ரூவாதான், பஸ் ஸ்டேண்ட்ல Urineபோறதுக்கு மட்டும் 3 ரூவா 
# வாழ்கதமிழகம்


Wednesday, May 4, 2011

மலரும் நினைவுகள்......

 மலரும் நினைவுகள்......





வேலமுள் காற்றாடிகள்,
ணங்காயில் வண்டிசெய்தும்,
தைரியமாய் 'தும்பி' பிடித்தும்,
ன ஓலையில் ஃபேன் செய்து ஓடவிட்டும்,
த்தை ஓடு திறந்து நகர்வதைச்
சத்தம் இல்லாமல் உற்று நோக்கியும்
ஞ்சாங்கால், ஏழாங்கால்  பல்லாங்குழிகளை 
ஐம்பது வயது பாட்டிகளோடு விளையாடியும்,
நாவல்  பழங்களை ஏறிப்பறித்தும்,
புளிய மரம் உலுக்கி விளையாடியும்
மீன் பிடிக்க சட்டை  கழற்றி 
வெள்ளத்தில் விட்டுவிட்டு 
வீடு சேர வேட்கிப் போனதுமான
என் மழலை நாட்கள்...

ன்று
என் மகனோ 
கணினி  இயக்கியும்,
படப்புத்தகமும்,
கரடி பொம்மையுமாய்....!