Pages

Thursday, May 19, 2011

ஈழ சுதந்திரமும்,இந்திய சுதந்திரமும்


தலை...ப்பு தேடியதில் பெரும் தடுமாற்றம்.இந்த பதிவை வெறுமனே எழுதாமல் மே மாத தமிழ் இனப்படுகொலையின் ஆற்றாமையை நினைவு படுத்த வேண்டியாவது எழுதும் தேவைப்படுகிறது.

இந்திய இறையாண்மையென்ற பெயரில் குஜராத் பூகம்பத்திற்கு   கொட்டிக்கொடுக்க முடிந்த நம்மால் இனம்,மொழி என்ற பந்தத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஒன்றுமே செய்ய இயலவில்லை.

லண்டனிருந்து ராஜபகசேவை துரத்தியடித்ததிலும், டைம்ஸ் பத்திரிகையிலிருந்து ராஜபக்சே  பெயரை நீக்கியதும்,ஐ.நா போர்க்குற்ற அறிக்கையில்  ராஜபக்சே குழுவினர் சிக்கியிருப்பதும் ராஜபக்சே குழுவினருக்கெதிரான சதுரங்க விளையாட்டில் தமிழர்கள் காய் நகர்த்திய நிலையில் இருக்கிறோம்.இப்பொழுது போர்க்குற்றங்களிலிருந்து தப்பிக்க இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஷ் இந்தியாவின் துணை தேடி ஓடுவதும் ஜெயலலிதாவுடன் இணைந்து செயல்பட இலங்கை விருப்பம் தெரிவிப்பதுமென இலங்கையின் புது நகர்வுகள் நிகழ்கின்றன

கட்சி,ஜாதி,மதம்,அகம்,புலம் என்று பிரிந்து கிடக்கும் அவல நிலையால் மட்டுமே இப்போது ஏழெட்டு கோடிக்கும் மேலான தமிழர்களின் உணர்வை 2கோடி சொச்சம் சிங்களவர்கள் தின்று கொன்று வென்று விட்டதாய் அல்ஜசிரா முதல் அமெரிக்கா வரை சென்ற மாதம் வரை ராஜபக்சே கொலை சிரிப்பும் வீங்கிய கண் தர்க்கமும் செய்து கொண்டதை அடிவயிறு எரிய   நம்மால் பார்த்து சகித்துக்கொள்ள முடிந்தது.

போரின் துவக்க கால கட்டத்தில் முள்ளிவாய்க்காலின் முள்வேலிக் கம்பி மக்களை மட்டுமே காண முடிந்தது.ஆனால் போரின் அவலங்கள் அதனை விட உக்கிரமானதென அதன் பின் வந்த சாட்சி ஆவணங்கள் இன்று மனிதம்,இதயம்,இணையம் என அங்கங்கே ஒளிந்து கொண்டுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சியின் அதிகாரத்தில் ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் நடந்தால் அது இந்தியாவின் தேச விடுதலையின் அடையாளமா?

அதுவே மறு உருவில ஈழமண்ணில் அப்பாவி மக்களாய் பெண்கள்,குழந்தைகள்,முதியவர்கள் என்ற பாரபட்சம் பார்க்காமல் குண்டு வீச்சுக்களில் கொல்லப்பட்டால் தீவிரவாத முத்திரையோடு தண்டனையின் அடையாளமா? அடக்குமுறைக்கு எதிராகவும், அந்நியத்தனத்துக்கும் பகத்சிங்கும், சுபாஷ் சந்திர போஸும் போராடினால் விடுதலை வீரர்களா? பிரபாகரனும்,பிரபாகரன் என்ற ஒற்றைச் சொல்லுக்கு வசியபபட்ட ஈழப்போராளிகள் தமது மண்ணின் சுதந்திரத்துக்காக போராடினால் தீவிரவாதமா? மனிதர்களல்ல...வரலாறு மட்டுமே மனிதர்களை சுதந்திர வீரர்களாக பதிவு செய்ய தகுதி பெற்றது.

 
ஈழ மண்ணின் சரித்திரத்தின் சில வரிகள் மட்டுமே இங்கே பதிவு செய்யப்படுகிறது.இன்னும் பதிவு தொடரென வரும்... 

எளிய முறையில் "ஆப்பு" வைக்க ஏழு யோசனைகள்


எளிய முறையில் "ஆப்பு" வைக்க ஏழு யோசனைகள் 


1. எல்லோருக்கும் இலவசமாய் தொலைக்காட்சி கொடுத்துவிட்டு 
    பார்க்க விடாமல் கரண்ட் கட் செய்வது. 

    அதே தொலைகாட்சியில் ஸ்பெக்ட்ரம் பத்தி மக்கள் தெரிஞ்சிகிட்டது.

2. ஈழத் தமிழனுகோ, இந்திய மீனவனுக்கோ பிரச்சினை என்றால் 
    கடிதம் எழுதுவது. 
   
    அதே தன் மகளுக்கு பிரச்சினை என்றால் இந்தியாவின் 
    அதிக விலை வக்கீலை வாதாட வைப்பது.

3. தேர்தல் முடிந்தபிறகு அ.தி.மு.க அப்படீன்னு ஒரு கட்சியே 
    இருக்காதுன்னு சவால் விடுவது. 

   தேர்தல் முடிந்தபின் தன் கட்சி உயிரோடு இருக்கா? என்று தேடுவது.

4. 13 ந்தேதி என்ன பண்றேன்னு பாருங்கன்னு BUZZ, TWITTER, BLOG
     எல்லாத்திலயும் சவால் விடுறது. 

    ஆனா அபீட்டாயிட்டு அடுத்த அஞ்சு வருசத்துக்கப்புறம் 
    நாமதான்னு அவங்களுக்கு அவங்களே (நமக்கு நாமே திட்டம் மாதிரி௦) 
    ஆறுதல் சொல்லிக்கிறது.


5. கருணாநிதி பி.ஜெ .பி க்கு சப்போர்ட் பண்ணப்ப சூப்பர் என்பது. 


    சீமான் மோடிய பத்தி சொன்னா கரசேவைக்கு செங்கல் தூக்குறார் 
    என கிண்டல் அடிப்பது.

6. எல்லோரும் தமிழில் படிக்க வேண்டும் எனப் பேசுவது. எஞ்சினியரிங் உட்பட..
   
   ஆனா தனது பேரப் பிள்ளைகளை தமிழ் ஆங்கிலவழிக் 
   கல்வி பயில அனுப்புவது.

7. பணம் கொடுத்துட்டா ஒட்டு போடுவானுங்கன்னு நெனச்சது. 
   
    மக்கள் பணம் வாங்கிட்டு மாத்தி ஒட்டு போட்டது.