Pages

Monday, February 21, 2011

வந்தாரை வாழழழழழழ வைக்கும் தமிழ்மக்கள் !!!

தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக மாறிய கருணாநிதி !!!

 திரு. கருணாநிதி அவர்கள்  தனக்கு தானே எழுதிக் கொண்ட நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் கூறியிருப்பவை 

"1944 ம் ஆண்டு எனக்கும், பத்மாவதிக்கும் திருமணம்
 நடைபெற்றது. ஓராண்டு காலம் வரையில் வாழ்க்கையின் 
சுவைபடலம், பேரானந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது.
 எனக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லை. இதனால்,
 மனஅமைதி குறைய தலைப்பட்டது. இப்படியே வேலை 
இல்லாமல் திரிந்து கொண்டிருந்தால், வாழும் காலம்
 எப்படிபோய் முடிவது? என்ற கேள்விகள் எல்லா
 பக்கங்களிலிருந்தும் கிளம்பின. ஓய்வு கிடைக்கும்
 போதெல்லாம் வேலை தேடி அலைந்தேன். வாழ்வதற்கு 
என்ன வழி என்று  தீவிரமாக யோசிக்க தொடங்கினேன்.
 அதன் விளைவு நாடக நடிகனாக ஆனேன்."  -- பக்கம் 80





"விழுப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தோம்.
 அங்கு அறைகுறையாக உணவு கிடைக்கும். குளிப்பது 
என்பது அங்கு மிகவும் பெரிய பிரச்சனை. நாங்கள்

குடியிருந்த  இடத்திலிருந்து குளிக்க வேண்டுமென்றால், 1
கிமீட்டர் தூரமாவது  செல்ல வேண்டும். வயலுக்கு தண்ணீர்
பாய்ச்சப்படும் இடங்களில் தான் எங்களது குளியல். அந்த குழாய்
தான் எங்களுக்கு குற்றால அருவி. குடிநீர் எல்லாம்.
குளித்து விட்டு வீட்டுக்கு கிளம்புவோம். கடுமையான
வெயில் கொளுத்தும். சிறிய துண்டை இடையில்
 கட்டிக் கொண்டு, துவைத்த சட்டையை தோளில் உலரப் போட்டுக்
கொண்டு  சவுக்கார சோப்பினால் வெண்மையாக
மாற்றப்பட்ட வேட்டியை, இரு கைகளாலும் தலைக்கு
மேலே குடை போல பிடித்துக் கொண்டு அதனை உலர வைத்தவாறு
வீட்டிற்கு வந்து உலர்ந்த பின் அவற்றை அணிந்து
கொண்டு பிற்பகல் உணவிற்கு தவமிருப்போம்."

--  பக்கம் 81,82 ல்..............



" பெரியாரின் ஈரோட்டு குடியரசு பத்திரிகை அலுவலகத்தில் துணை
 ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
 மாதம் சம்பளம் 40 ரூபாய். அதிலும் பிற்பகலும், இரவும்
 பெரியார் வீட்டில் சாப்பிடுவதற்காக இருபது ரூபாய் பிடித்துக்
 கொள்வார்கள். காலை, மாலை சிற்றுண்டிக்காக மாதம் 10 ரூபாய் போய்
 விடும். எனது இதர செலவுகள் ஐந்து ரூபாய். மீதம் 5 ரூபாயை தான்
 என்னை நம்பி அண்டி வந்த அருமை மனைவி பதமாவதிக்கு
 மாதந்தோறும் திருவாரூக்கு மணியார்டர் செய்வேன்."


--92,93 ம் பக்கங்களில்.

" பெரிய அளவில் வைத்திய உதவிகளை எனது தந்தையாருக்கு செய்ய
 வசதியான நிலையில் குடும்பம் இல்லை. என் தந்தை இறந்து விட்டார். "


 பக்கம் 92,93 ல்..............................

இப்படி கருணாநிதி எழுதிவைத்துள்ளார். 


இன்றைக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?


 1.கருணாநிதியின் கோபாலபுரம் வீடு
 2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம்.

 3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு
 4. முரசொலி செல்வம், செல்வி வீடு- கோபாலபுரம் ( கருணாநிதியால் கொடுக்கப்பட்டது)
 5. மு.க.முத்து வீடு-கோபாலபுரம்

 6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம்
 7. அமிர்தம் வீடு- கோபாலபுரம்

 8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம்
 9.ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு
 10. மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி
 11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம்
 12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்)
 13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி)

 14. கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு)
 15. தயாநிதி மாறன் வீடு

 16. டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா, அமைந்தகரை
 17. கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு
 18. டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில்
 19. டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை
 20. எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்-ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரிபோரூர் அருகில்
 21. முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை
 22. சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம்
 23. ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக 32
 கிரவுண்ட் நிலம்
 25. சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன்
 நாயர் காலணி
 26. இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு, சிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக
 27. கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது
 28. கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை
 29. அந்தமான் தீவின் நிலங்கள்
 30.அஸ்ஸாம் மாநிலத்தில் டீ, காபி தோட்டங்கள்
 31. அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு
 32. மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை
 33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில்
 34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது
 35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு
 36. கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி, மற்றும் ரப்பர்
 தோட்டங்கள்
 37. செல்வம் வீடு

 38. முக.ஸ்டாலின் சொத்துக்கள்
 39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை.
 40.முக.அழகிரி- மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர்
 சொத்துக்கள், மதுரை நகரின் வீடியே பார்லர்கள், கடைகள்,
 ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள்
 41. செல்வம் வீடு-பெங்களுர்
 42. உதயா டிவி இணைப்பு- பெங்களூர்
 43. பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை

 44.முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ், இந்திரா கார்டன்-
 சென்னை பீட்டர்ஸ் சாலை.
 45. முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள்
 46. தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர், ஜி.என்.செட்டி
 சாலை, சென்னை.
 47. கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
 48. மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம்,
 மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் சென்னையில் சொத்துக்கள்.
 49 .செம்மொழி மாநாட்டிற்கு பிறகான கோவை பண்ணை வீடு 
 50. broke bond நிலம் கோவை ( RMKV சில்க்ஸ் ற்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது)
 51. சன் டிவி குழுமம் - 6 தமிழ்  சேனல்கள் , 6 தெலுகு  சேனல்கள், 6
 கன்னட  சேனல்கள் மற்றும் 2 மலையாள சேனல்கள் , FM Radio Stations - தமிழ் ,
 தெலுகு , மலையாளம் , கன்னடா, ஹிந்தி , சன்  DTH,

செய்தித்தாள்கள் - தினகரன் , தமிழ் முரசு , முரசொலி 
வார இதழ்கள் - குங்குமம் , முத்தாரம் ,வண்ணத்திரை ,குங்குமசிமிழ் 
 52. கலைஞர்  டிவி Network- 7 சேனல்கள் ( including national and international)

 53. சினிமா தயாரிப்பு மற்றும் விநியோகம் - சன் Pictures , Red Giant Movies, Cloud Nine என்டேர்டைன்மென்ட்.

கனிமொழி, SPECTRUM   சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை..


திருவாரூரில் இருந்து கட்டிய வேட்டியும், தோளில் போட்ட
துண்டுடன் , சென்னை நகருக்கு கள்ள ரயில் ஏறிவந்த கருணாநிதி
குடும்பம் இன்று இந்திய, ஆசிய  பணக்காரர்கள் பட்டியலில்.

வாழ்க தமிழ்நாடு. வாழ்க வந்தாரை வாழழழழழழ வைக்கும் தமிழ்மக்கள் !!!

Friday, February 18, 2011

ஒ போடு

ஒ போடு

வாழ்க ஜனநாயகம்

 வாழ்க ஜனநாயகம்

 

இவங்களுக்கெல்லாம் வெட்கமே கிடையாதா ? 

 


நேத்து அடிச்சிக்கிட்டங்க, இன்னைக்கு சேர்ந்துகிட்டாங்க. நாளைக்கு அடிச்சிக்குவாங்க.
நம்மள பார்த்து ஒட்டு கேட்பாங்க. நாம இவங்களை நம்பி நாம ஒட்டு போடணும்.                      வாழ்க ஜனநாயகம்.

Thursday, February 10, 2011

தி.மு.க அல்லது அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வர என்ன செய்யவேண்டும்??


 


.


தமிழக அரசியல் கட்சிகளுக்கு இலவச வாக்குறுதி ஐடியாக்கள்




1. வீட்டுக்கு ஒரு லேப் டாப் கம்யூட்டர் இலவசம்.

2. ஒவ்வொரு ஆண்டும் பெண்களுக்கு பொங்கல் பரிசாக ஒரு பட்டுபுடவை இலவசம்.

3. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவாக பிட்ஸா, பர்கர். ஃபரஞ் ப்ரை,கோக் இலவசம்.

4. மகா குடிகாரர்களூக்கு V.I.P உறுப்பினர் அட்டை வழங்கப் பட்டு அவர்களுக்கு விலையில் 20 சதவிகிதம் டிஸ்கவுண்ட்.

5. ரேஷன் கடையில் அரிசி, பருப்பு வழங்குவதற்கு பதிலாக அன்றன்று சமைத்த உணவு வழங்கப்படும்.(இதனால் பெண்களுக்கு சமைக்கும் வேலை குறைவு . மேலும் டி.வி சிரியல் பார்க்க அதிக நேரம் கிடைக்கும் அவர்கள் அறிவுத்திறன் வளரும்)

6. கள்ள காதலர்களுக்கும், காதலர்களுக்கும் பீச்சில் அதிக அளவு இடம் ஒதுக்கப்படும். அதற்கு குறைந்த கட்டணமாக அனுமதி சீட்டு வழங்கப்படும். இதனால் போலீஸ்காரர்களின் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்

7. எல்லா தமிழக மக்களூக்கும் கலைஞர் படம் போட்ட மஞ்சள் துண்டு அல்லது அம்மா படம் போட்ட பச்சை கலர் ஷால் இலவசமாக வழங்கப்படும்.

8. எல்லா குழந்தைகளையும் அமெரிக்காவில் உள்ளது போல இலவசமாக ஸ்கூல் பஸ்ஸில் அழைத்து செல்லப் படுவார்கள்.( பஸ்ஸில் கலைஞர் படம் அல்லது அம்மா படம் பெரிய அளவில் போடப்பட்டிற்கும்). இந்த பஸ்ஸை ஒட்டுபவர்கள் அரசு டிரைவர்களாக ஆக்கப்படுவார்கள்( கட்சிகாரர்களுக்கு அரசின் புதிய வேலை வாய்ய்பு)

9. இந்த பஸ்ஸில் செல்ல விருப்பம் இல்லாத வசதி படைத்த குழந்தைகளுக்காக சொகுசு கார்கள் குறைந்த செலவில் விடப்படும்.

10. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஐயா ராமதாஸின் வேண்டுகோளுக்கு இணங்க டாஸ் மார்க் கடைகள் மூடப்படும்.( டோண்வொரி தமிழக மக்களே) அதற்கு பதிலாக எல்லா கடைகளிலும் ஒயின், பீர் மற்ற இதர டிரிங்கஸ் விற்க்கப்படும்.

.

12. ஊழல் பாரதம் என்ற மகா டிவி சிரியல் எடுக்கபட்டு அதில் நடிக்க தமிழக மக்கள் அனைவருக்கும் வாய்ப்புகள் அளிக்கப்படும்.

13. தாங்கள் செய்யும் ஊழல்களில் ஓட்டு போட்ட தமிழ் மக்களுக்கும் மட்டும் 10 சதவிகித பங்கு அளிக்கப்படும்

Friday, February 4, 2011

கலைஞரே – இந்த நிலையிலும் இப்படிப் பேச

கலைஞரே – இந்த நிலையிலும் இப்படிப் பேச
வெட்கமாக இல்லை உங்களுக்கு ?

ராஜா கைதுக்கு காரணம் பார்ப்பனர்கள் –
உயர்ஜாதிக்காரர்களின் சதி !
நான் மகாபலி யைப்  போன்றவன்.
என் ஆட்சியைக் கவிழ்க்க,
தாழ்ந்த ஜாதிக்காரனான
என்னிடமிருந்து ஆட்சியைப்  பிடுங்க
உயர்சாதிக்காரர்கள் சதி செய்கிறார்கள்  என்று
கூசாமல் சொல்லுகிறீர்களே –
வெட்கமாக இல்லை  உங்களுக்கு?
50 வருடங்களுக்கு முன்னர் சொல்லி இருந்தால்
ஒரு வேளை
மக்கள் நம்பி இருப்பார்கள்.
இன்னமும் இளிச்சவாய் தமிழர்கள் நிறைய பேர்
இருக்கத்தான் செய்கிறார்கள் – என்றாலும்
நீங்கள்  நினைக்கின்ற அளவிற்கு அல்ல !
இன்றைய தினம் – சிபிஐ நிறுவனம்,
கைது செய்யப்பட்டுள்ள ராஜாவை
கோர்ட்டில் ஆஜர் செய்யும்போது
கூறியுள்ள காரணங்களில் சில  -
ஸ்வான் டெலிகாம்  மற்றும் யுனிடெக்
நிறுவனங்களுக்கு சட்டத்தை, விதிமுறைகளை
மீறி சலுகை கொடுத்தது.
ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்த
முறைதவறிய சலுகைகள்.
அவருக்கு வேண்டப்பட்ட சில நிறுவனங்களுக்கு
சட்ட விதிமுறைகளை மீறியும், வளைத்தும்,
மாற்றியும்
2ஜி அலைக்கற்றைகளை ஒதுக்கியது.
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ராஜாவை அவரது
இல்லத்தில் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசி
அரசாங்கம் எடுக்க இருந்த முடிவுகளை முன்கூட்டியே
தெரிந்து கொண்டது.
இரண்டு நிறுவனங்கள் குறைந்த விலைக்கு வாங்கி
உடனடியாக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தங்கள்
பாதிப்  பங்குகளை மிக அதிக விலைக்கு விற்று
கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்தது.
அப்படிக் கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை
சென்னையில் ராஜாவின் உறவினர்கள் பெயரில்
நவம்பர் 2008 -ல் புதிதாகத் துவக்கப்பட்ட
கம்பெனிகளுக்கு திருப்பி விட்டு அதன் பயன்
ராஜாவிற்கு கிடைக்கச் செய்தது.
வேண்டுமென்றே தனக்கு வேண்டிய
சில நிறுவனங்களுக்கு மட்டும் லைசென்ஸ்
கிடைக்க விண்ணப்பங்களுக்கான கடைசி
தேதியை மாற்றியது.
இவை எல்லாம்
மகாபலியான கலைஞரிடமிருந்து
ஆட்சியைப் பறிக்க -
பார்ப்பனர்களோ -
உயர் ஜாதிக்காரர்களோ
கூறும் காரணங்கள் அல்ல.
ராஜா மீது  வழக்கு ஏன் தொடர வேண்டும் என்று
சிபிஐ, கோர்ட்டில் கூறியுள்ள காரணங்கள்.
இந்த நிலையில்,
என்ன செய்திருக்க வேண்டும் நீங்கள் ?
ஒன்று – ராஜா குற்றமற்றவர் என்று
நீங்கள் கூறுவதை உண்மையாகவே
நீங்களே நம்பினால் –
உங்கள் நெஞ்சில் துணிவிருந்தால் -
அவர் மீது பொய்யான குற்றம் சுமத்தி,
அமைச்சர் பதவியை விட்டு விலக வைத்து,
கைது செய்து,
சிறையில் அடைத்துள்ள
காங்கிரஸ்  தலைமையை கண்டித்து,
தைரியமாக அறிக்கை விடுங்கள்.
பொய் வழக்கு போட்ட சிபிஐ யை கண்டித்து
கடுமையாக அறிக்கை விடுங்கள்.
மக்களைத் திரட்டி
போராட்டம்  அறிவியுங்கள்.
குற்றமற்ற ராஜாவை அநியாயமாக வதைபட வைக்கும்
சோனியா காந்தியை எதிர்த்து கூட்டணியை
முறித்துக்கொண்டு
மத்திய அரசிலிருந்து வெளியே வாருங்கள்.
18 திமுக எம்பி க்களின் ஆதரவை
விலக்கிக்கொள்ளுங்கள்.
தலித் சமுதாயத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவரின்
மானத்தைக் காக்க,
சுயமரியாதையைக் காக்க -முன்வரும் உங்களை
மக்கள் தலைமேல் தூக்கி
வைத்துக் கொண்டாடுவார்கள்.
இல்லை – ராஜா செய்திருப்பாரா மாட்டாரா
என்பது குறித்து உங்களால் ஒரு தீர்மானத்திற்கும்
வர முடியவில்லை என்றால் –
ராஜாவின் மீது  சுமத்தப்பட்டிருக்கும்
2ஜி ஊழலுக்கும் திமுக வுக்கும்  சம்பந்தமில்லை.
இது கொள்கை சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல.
அவர் அமைச்சராக செயல்பட்ட நிலை குறித்தது.
எனவே -தன் பணியில் ஏற்பட்ட பிரச்சினையில்,
தன்னை நிரபராதி
என்று நிரூபிப்பது அவர் பொறுப்பு.
இந்த வழக்கைச் சந்திக்க அவருக்கு
தேவையான உதவிகளை  கட்சி செய்யும் -
என்று சொல்லி விட்டு உங்கள்
கடமையைத் தொடருங்கள்.
இந்த இரண்டில் ஒன்றைச் செய்யாமல்,
பேடித்தனமாக  ஜாதியை இங்கு இழுப்பது -
இதில் சம்பந்தப்பட்டிருப்பது ராஜா மட்டுமல்ல.
சிஐடி காலனி வீடும் தான்.
இன்று ராஜா வரை வந்தது, நாளை நம் வீடு வரை
வந்து விடுமோ என்கிற பயம் தான் உங்களை
இப்படி எல்லாம் பேச வைக்கிறது.
டில்லியை முறைத்துக் கொண்டால் இன்னமும்
சிக்கலாகி விடுமோ என்கிற பயம் தான்
இப்படி எல்லாம் பேச வைக்கிறது -
என்றே நினைக்க வைக்கிறது.
இத்தனை வருடங்கள் பொது வாழ்வில் இருந்ததற்கு
ஒரு அர்த்தம் வேண்டும் – நம்மை நம்பி
இந்த உயரத்தில் கொண்டு வைத்துள்ள மக்களுக்கு
நாம் உண்மையாக இருக்க வேண்டும் என்று
நீங்கள் நினைத்தால் இப்போதாவது நிறுத்துங்கள்
இந்த  பசப்பு வார்த்தைகளையும் – போலி
அரசியல் வேடங்களையும்.
வேண்டாம் உங்களுக்கு இனி அரசியல்.
இத்தனை வயதிற்கு
மேலாகவாவது – மக்களிடம் வேடம் போடுவதையும்
வசனம் பேசுவதையும் நிறுத்தி விடலாமே !

பணிவுடன்
ஜெயகுமார் ....

Wednesday, February 2, 2011

ஒரு கைதியின் டைரி:spectrum raja.............

ஒரு கைதியின் டைரி:

பெயர்: ஆண்டிமுத்து இராசா...

பழைய முகவரி: ஆண்டிமுத்து இராசா...
                                 c/o  கனிமொழி
                                 சுவிஸ் வங்கி- PIN:1,76,00,000

புதிய முகவரி:
                                 ஒண்டி வாத்து ராசா                        
                                  c/o சி.பி.ஐ
                                உச்ச நீதிமன்றம் PIN: 0000000

பிடித்தது: கம்பி எண்ணுவது

மறக்க முடியாதது: பணம் எண்ணியது

விரும்பும் உணவு: களி

பிடித்த படம்: ஒரு கைதியின் டைரி

பிடித்த கதாநாயகி: கனிமொழி

பிடித்த வில்லி நடிகை: நீரா ராடியா?

பிடித்த வசனம்:

கருணாநிதி பராசக்தி வசனம்

போகிறேன்...எதற்காக போகிறேன்? ஏன் கம்பி எண்ண போகிறேன்?

பணம் வாங்கியதை,வாங்கவில்லை தமாஷுக்குக் கூறினேன். லஞ்சம் வாங்காமல் இருப்பது காட்டுமிராண்டித்தனம் என்று காட்டமாகக் கூறினேன்.

குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.இப்படியெல்லாம் நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று இல்லை.

நிச்சயமாக இல்லை.ஊழல் செய்யதததை குறும்பாகக் குத்தி காட்டினேன்.

ஊழல் கூடாது என்பதற்காக அல்ல.ஊழல் செய்கிற குடும்பத்திற்கு பங்கம் வந்து விடக்கூடாது என்பதற்காக.

ஸ்பெக்டரம் விற்றலை எதிர்த்தேன்.அது தீங்கு தரும் என்பதால் அல்ல.அது நல்லவர்களின்  தீர்த்த யாத்திரை தலமாக மாறி விடக்கூடாது எனபதற்காக.

விபரங்களை கேலி செய்தேன்.விபரங்கள் எனக்கு விரோதம் என்பதாலா? அல்ல! விபரங்கள்,சி.பி.ஐ நடத்தும் விசாரணையில் வினையாகி விடக்கூடாதே என்பதற்காக.

பொழுது போக்கு:

நீரா நிராடியா,பூங்கோதை,கனிமொழி முக்கோண கலந்துரையாடல்.

பிடித்த பாடல்: ராசா கையை வெச்சா... வீணா போனதில்லை

விருப்பம்:  மீண்டும்... மீண்டும்... மந்திரி




Tuesday, February 1, 2011

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..!!












அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..!!


நேற்றைய தினத்தந்தி செய்தி :

Dr.ராமதாஸ் அவர்களின் பேட்டி..

வரும் சட்டமன்ற தேர்தலில் பா.ம.க
தனித்து போட்டியிடாது. கூட்டணி
அமைத்து தான் போட்டியிடும்..

( ஒருவேளை அந்த கூட்டணி தோத்து
போயிட்டா.. தேர்தலுக்கு அப்புறம் ஜெயிச்ச
கூட்டணில போயி ஐக்கியமாயிடுவோம்..
அதையும் சேர்த்து சொல்லுங்க.. )

நீங்கள் எத்தகைய கூட்டணி அமைய
வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ
அதே போன்ற கூட்டணி அமையும்.

( சரத் - பா.ம.க..?! ., கார்த்திக் - பா.ம.க..?!.,
டி.ஆர் - பா.ம.க..?! )

பா.ம.க.விற்கு 45 தொகுதிகளை
ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று
கோருவோம்..

( ஆட்சி அமைக்க 45 சீட் போதுங்களா..?
2011-ல பா.ம.க ஆட்சி அமைக்கும்னு
முன்னே சொல்லிட்டு இருந்தீங்களே.
ஹி., ஹி., ஹி..!! )

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம்
10 தொகுதிகள் உள்ளன.. அதில் குறைந்தது
3 தொகுதிகளையாவது பா.ம.க.விற்கு
ஒதுக்கும்படி கேட்போம்..

( ஏன்..? அங்கிட்டு தான் மெடிக்கல் காலேஜ்
கட்ட இடம் கரெக்டா இருக்கா..?! )

பா.ம.க.வினர் திண்ணை பிரச்சாரம்
செய்து மக்களிடம் ஆதரவு திரட்ட
வேண்டும்..

( வீட்டுக்குள்ள எல்லாம் விட
மாட்டேங்குறாங்களோ.?! )

இந்த தேர்தலில் நாம் தனித்து நின்றே
வெற்றி பெற முடியும் என்றாலும்..

( One Minute..!! நான் சிரிச்சிக்கிறேன்..என்னால சிரிப்பை அடக்க முடியல..ஹா., ஹா., ஹா...!! ம்ம்.. இப்ப Continue... )
கூட்டணி அமைத்தே போட்டியிட
முடிவு செய்திருக்கிறோம்..

( அப்படியா..? அது சரி.. உங்களை கூட
சேத்துக்க யாராவது முடிவு பண்ணி
இருக்காங்களா..? )

பிரசாரத்தின் போது கூட்டணிக் கட்சியின்
கொள்கைகளையும்.,

( என்னாது " கொள்ளைகளா..?? "
ஓ.. " கொள்கைகளா..? " )

நமது கட்சியின் கொள்கைகளையும்
சேர்த்து பிரச்சாரம் செய்ய வேண்டும்..

( ம்ம்.. விளங்கிடுச்சு..!! " அன்புமணிக்கு
M.P பதவி குடுத்தா யார்கூட வேணா
கூட்டணி சேரத் தயார்." அதானே..? ரைட்டு..!! )

அதிக எண்ணிக்கையில் இளைஞர்களை
அழைத்து வந்து கட்சியில் சேர்க்க வேண்டும்..

( அழைச்சிட்டு வந்தா.? இழுத்துட்டு வந்தா..?
தெளிவா சொல்லுங்க.. இப்பல்லாம் பசங்க
ரொம்ப விவரமா இருக்கானுங்க..!! )

அது சரி.. இம்புட்டு நேரம் கூட்டணி கட்சி.,
கூட்டணி கட்சின்னு சொன்னீங்களே..

அது இவிங்களா.? இல்ல அவிங்களா..??


இன்றைய தினத்தந்தி செய்தி :

" தி.மு.க கூட்டணியில் பா.ம.க " - கருணாநிதி

" கூட்டணி பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை "
- ராமதாஸ்.

என்னங்க நீங்க..? இப்படி Slow-ஆ இருக்கீங்க..?

குடும்பத்தோட உக்காந்து நல்லா
எண்ணி எண்ணி பாத்து சீக்கிரம்
ஒரு முடிவுக்கு வாங்க..

பின்ன..,
இந்த Election-ல எந்த கட்சிக்காரன் கூட
அடிச்சிக்கிட்டு ஆடணும்னு தொண்டர்களுக்கு
தெரியணும்ல..!!

டிஸ்கி 1 : பா.ம.க.வின் கூட்டணி சாதனைகள்
( இதுவரை... )

1998 - பாராளுமன்ற தேர்தல் - அ.தி.மு.க

1999 - பாராளுமன்ற தேர்தல் - தி.மு.க

2001 - சட்டசபை தேர்தல் - அ.தி.மு.க

2004 - பாராளுமன்ற தேர்தல் - தி.மு.க

2006 - சட்டசபை தேர்தல் - தி.மு.க

2009 - பாராளுமன்ற தேர்தல் - அ.தி.மு.க

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..!!