Pages

Thursday, February 23, 2012

அரசியல் கொத்து பரோட்டா...



எனது நண்பர், சசிகுமார் அவர்கள் படைப்பு...
கூடங்குளத்தில்100 நாட்களாக போராடும் மக்களை ஜெ., ஏன் சந்திக்கவில்லை? - கேப்டன் கேள்வி! # இதை 100நாளா நீங்க கேக்காதது ஏன்?
சிறுதாவூர் பங்களாவில் வைத்து ஜெயா-சசிசந்திப்பு # நாடகம் விடும் வேளையில் உச்ச காட்சிகள் நடக்குதம்மா
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பணிகளுக்கு 32 அமைச்சர்கள் # நல்லவேளை, ஆளுநர் ரோசய்யாவை பட்டியலில் சேர்க்காம விட்டாங்களே!
சங்கரன் கோவில் இடைதேர்தலில் திமுகவுக்கு ஆதரவு:ஞானதேசிகன் # தம்பி போய் வீட்ல பெரியவங்க யாராவது இருந்தா வரசொல்லு.
தேமுதிக பொதுக்குழுவுக்கு செல்போன்,வீடியோ போன்றவை தடை # அப்போ சரக்கு சைட் டிஷ்லாம் எடுத்துவரலாமா கேப்டன்!
இன்னிக்கு சச்சின் செஞ்சுரி..எழுதி வெச்சிக்கோ'ங்கறான் நண்பன் # போடாங்கோ.. இப்புடி எழுதி வெச்சி வெச்சி ரெண்டு குயர் நோட்டே தீந்து போச்சி.
திராவிடக்கட்சிகளின் பாடத் திட்டமே ஆசிரியர் கொலைகளுக்குக் காரணம்-பாஜக # வந்துட்டானுங்க, ஹிந்தி இல்லையாம் அதான் குரைக்கிதுங்க
பணத்திற்காக வாழக்கூடாது-ஜெ # அப்ப அந்த 66கோடி பக்கத்துவீட்டுக்காரன் வாழறதுக்காக அடிச்சதுங்கலாம்மா??
 ரஜினி மகளைக் கட்டிக்கிட்டதால என் அடையாளமே போயிடுச்சி - தனுஷ் # இப்போ என்ன கமல் மகளை கட்டிக்கனுமா? அதை நேரா சொல்ல வேண்டியதுதானே
நேத்து சன் டிவி பாத்து ஷாக் ஆகிட்டேன் 'இந்திய' மீனவர்கள் கொலைங்கிறான். இருவரில் ஒருவர் கேரளாவாம். அதானே பார்த்தேன்.
மின்வெட்டு தீரவேண்டுமானால் கூடங்குளம் நிலையத்தை திறக்க வேண்டும்:ராமகோபாலன் # இந்தா சொல்லிபுட்டாருல்ல. இங்க யாருக்காவது இது தெரிஞ்சுதாயா? ..
'உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளை புறக்கணியுங்கள்’ - திமுக # ஐயையோ, அப்போ முரசொலி விக்காதா?!
வருகிறது சசிகலா பேரவை..சங்கரன்கோவிலில் போட்டி! # கூத்தாடி ரெண்டு பட்டா, ஊருக்கு கொண்ட்டாட்டம் தான்.
கிரைண்டர் மிக்ஸி கொடுத்தா போதுமா... கரண்ட் எங்கய்யா இருக்கு?- 'கேப்டன்' # சரக்கு இல்லாம சைட் டிஷ் மட்டும் வச்சு என்னங்கடா பன்றது !!
எத்தனை முறை ஆட்சியை இழந்து திரும்ப பதவிக்கு வந்தாலும், அரசியல்வாதிகள் பாடம் கற்பதில்லை. பாடம் புகட்டப்படுவது தமிழக மக்களுக்கே.
பாட்லா என்கவுன்ட்டரை பார்த்து சோனியா கண்ணீர்விட்டார்: குர்ஷித்.. # இரண்டு லட்சம் ஈழத்தமிழர்களை கொன்றழித்து விட்டு என்னடா கதை விடுறீங்க.
தேசியகட்சிகளுடன் இனி கூட்டணி கிடையாது-ராமதாஸ் # வைத்திருப்பதுவேகாத பருப்பு,இதுல எதுக்கு வடை சுடமாட்டேன்,வடை சுடமாட்டேன் என்ற அறிவிப்பு
மின்பற்றாக்குறைக்கு எப்போது தீர்வு கிடைக்கும்?- விஜயகாந்த்! # அம்மா எத்தன தடவ தான் சொல்வாங்க பிப்ரவரி 30, பிப்ரவரி 30 !!!
அம்மா ஆட்சியில் மின்சார திருட்டு குறைந்துள்ளது! # ங் கொய்யல, மின்சாரம் இருந்தாதானே திருட்டு?
படித்ததில் பிடித்தது
நன்றி: சசிகுமார்

Monday, February 20, 2012

அல்சர்-ஐ குணமாக்கும் உணவுகளும் அவற்றை தயாரிக்கும் முறைகளும்




அல்சர் எனப்படும் வயிற்றுப் பிரச்னையில் சிக்கியிருப்போருக்கு குணமளிக்கும் உணவு வகைகள் என்னென்ன… அவற் றைத் தயாரி ப்பது எப்படி?

அல்சர் பற்றிய சில விஷயங்க ளை அசைபோட்டபடியே!

எண்சாண் உடம்புக்கு வயிறே பிரதானம்’ என்ற நிலைதான் இன்று உருவாகியிருக்கிறது. வாய்க்கு ருசியாக இருக்கிறது என்று வக்கணையாக வாங்கி சாப்பிடும் உணவுகளில் ஏதேனும் பிரச்னை என்றால், வயிற்றுப் பகுதி தான் முதலில் பாதிப்புக்கு உள்ளாகும். அத்தகைய பிரச்னைகளில் தலையாயது அல்சர்!

வயிற்றுப் புண் எனப்படும் இந்த அல்சர் எப்படி வருகிறது… ஏன் ஏற்படுகிறது?’ என்பது பற்றி சென்னை, அரசு பொது மருத்துவ மனையின் இரைப்பை மற்றும் குடல் சார்ந்த அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் சந்திரமோகன் இங்கே பேசுகிறார்.

                           எப்பவும் ‘கபகப’னு எரியுது. பசியா இருக்குமோனு நெனச்சு சாப்பிட்டாலும், எரிச்சல் குறைய மாட்டேங்குது. அப்பப் ப, வாந்தி வேற வந்து இம்சை ப்படுத்துது. உடல் எடையும் குறைஞ்சிடுச்சு. எதையுமே ருசியா சாப்பிடமுடியல. வயித்து வலியால சுருண்டு போயி டறேன்’ இப்படி அலறி துடிப்பவர்களில் பெரும்பாலானோர் அல்சரால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

பெரும்பாலானவர்கள், அந்த நேர வலியிலிருந்து தப்பித்துக்கொள்ள கண்ணில் படும் மருந்துக் கடையில் வலி நிவாரணிகளை வாங்கி விழுங்கிவிட்டு வேறு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். இதுபோன்ற மாத்திரைகள் அந்த நேரத்துக்கு வலியைக் குறைக்குமே தவிர, நிரந்தரத் தீர்வை ஒருபோதும் தராது. அதுமட்டுமல்ல… பக்க விளைவாக வயிற்றில் புண்கள் அதிகரித்து, முற்றிய அல்சரில் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு அந்த வலி நிவார ணிகளே கூட ஒரு காரணியாகிவிடக்கூடும்.

மற்றொரு காரணம், டென்ஷன், கவலையால் மனம் பாதிக்கப்படும்போது, இரைப்பையில் மிக அதிகமாக அமிலம் சுரந்து அல்சரில் கொண்டுவிடும்.

அல்சர் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமாகக் கருதப்படுவது, ‘ஹெச் பைலோரை’ (H Pylori) என்ற நுண்கிருமிதான். இது ஒரு வகை யான பாக்டீரியா. உணவுப் பொருட் கள், தண்ணீர் மற்றும் மூச்சுக் காற்று மூலமாகவும் பரவலாம்.

இரைப்பை மற்றும் சிறுகுடலின் ஆரம்பப் பகுதியான ‘டியோடினம் ‘என்ற பகுதியில்தான் அல்சர் உரு வாகும். இந்த வகை வயிற்றுப் புண் ணுக்கு ‘பெப்டிக் அல்சர்’ என்று பெய ர். நாம் உண்ணும் உணவு இரைப் பைக்கு சென்று அமிலங்களால் சூழ ப்பட்டு தாக்குதல் நடத்தும். தொட்டால் விரல் வெந்து விடும் அளவுக்கு வீரியமான அமிலம் என்றாலும், இரைப்பையின் சுவர்கள் வலுவாக இருப்பதால், அமிலங்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், இரைப் பையில் சுரக்கக் கூடிய அமிலத்தின் அளவு அதிகமா கும்போது, இரைப்பையின் சுவர்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் பாதிப் புக்கு உள்ளாகும். இந்த இடத்தில் புண்கள் உருவாகி அல்சரில்     கொ ண்டு விடும்.

வந்திருப்பது அல்சர்தானா… புண் எந்த அளவுக்கு பரவியிருக்கிறது… ஹெச்பைலோரை கிருமித்தொற்று இருக்கிறதா?’ என்பதையெல்லாம் எண்டோஸ்கோபி பரிசோத னை மூலம் கண்டு பிடித்துவிடலாம். முன்குடலில் அடைப்பு ஏற்படுதல், குடலில் ஓட்டை விழுதல், ரத்தவாந்தி போன்ற பிரச்னைகளுக்கு மருத்துவ ரீதியாகவும், எண்டோஸ்கோபி மூலமாகவும் சிகிச்சை அளி க்கலாம். எண்டோஸ் கோபி சிகிச்சை அளித்தும் சரியாக வில்லையெனில், அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வு.

வயிற்றில் புண் வந்து ஆறு ம்போது, அது தழும்பாக மா றும். இத னால், முன்குடலில் அடைப்பு ஏற்பட்டுவிடும். சாப்பிட்ட உணவும் இரைப்பையைவிட்டு முன் குடலுக்கு போகாது. எப்போதும் வயிறு ‘திம்’என்று இருக்கும். இதையே சிலர், ‘சாப்பிட்ட உணவு சரியா செரிமானம் ஆகல. வாயுத் தொல்லையா இருக்கு மோ?’ என்று நினைப்பார்கள். இப்படி அடைப்பு ஏற்படும் போதெல்லாம் வாந்தியுடன் கூடிய புளித்த ஏப்பம் வரும். பொதுவாக நாம் உட் கொள்ளும் உணவு இரண்டரை முதல் நான்கு மணி நேரத்துக்குள் சிறு குடலுக்கு போய் விடும். ஆனால், அடைப்பு இருப்பவர்களுக்கு உணவு சிறுகுடலுக்கு போகாமல் இரைப்பையிலேயே தங்கி விடும். இதனால், வயிற்று எரிச்சல் மேலும் அதிகமாகும்.

வயிற்றில் உள்ள புண்ணும் அதிகமாகி, வாந்தி எடுக்கும்போது ரத்தம் கலந்து வரும். சமயங்களில் குடல் புண்ணில் ஓட்டையும் ஏற்படலாம். அல்சர் ஆயுட்கால வியாதி அல்ல. பழக்க வழக்கங்கள் , உணவுக் கட்டு ப்பாடுகளை கடைபிடித்தால் இரண்டே வாரத்தில் முற்றிலும் குணமாக்கிவிட முடியும். அல்சரால் பாதிக்கப்பட்டவ ர்கள், காரம், புளிப்பு, எண்ணெய் போன்ற அதி கமாக அமிலம் சுரக்கும் உணவுகளைத் தவிர்த்தால்… அல்சரை அறவே ஒழித்து விடலாம்” என்றார் டாக்டர் சந்திர மோகன்.

அல்சரைக் குணப்படுத்தும் அற்புதமான உணவு ரெசிபிகளை இங்கே தருகிறார் செஃப் ஜேக்கப்.

கடுகு-தேங்காய் பச்சடி

தேவையானவை: கடுகு – ஒரு டேபிள்ஸ்பூன் (10 கிராம்), தேங்காய் துருவல் – அரை மூடி (100 கிராம்), தயிர் – ஒரு கப் (100 மில்லி), சுக்குப்பொடி – ஒரு சிட்டிகை, சின்ன வெங்காயம் – 2, உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி லேசாக வதக்கவும். இதனுடன் தேங் காய் துருவல், கடுகு, சுக்குப் பொடி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இந்த விழுதில், நன்றாக அடித்த தயிரைச் சேர்த்து, தேவையான உப்பு போட்டு கலக்கவும். இதை வெறுமனே சாப் பிடலாம். இட்லி, சப்பாத்தி போன்ற டிபன் அயிட் டங்களுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

வெஜிடபிள் அவியல் கூட்டு

தேவையானவை: பொடியாக நறுக்கிய கேரட், சௌசௌ, சுரைக் காய், உருளைக்கிழங்கு, வெங்காயம் சேர்ந்தது – ஒரு கப், தயிர் – அரை கப் (50 மில்லி), சர்க்கரை – ஒரு டீஸ்பூன் (5 கிராம்), தேங்காய் – கால் கப் (25 கிராம்), பயத்த ம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தேங்காய் எண்ணெய் – 5 மில்லி.

செய்முறை: வெங்காயத்தைத் தவிர மற்ற காய்கறிகளை சர்க்க ரை சேர்த்து, தண்ணீர் விட்டு நன்றாக வேக வைக்கவும். தேங்கா யை அரைத்துக் கொள்ளவும்.பயத்தம்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும் கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும், வேக வைத்த காய்கறி கலவையைப் போட்டுக் கொதிக்க விடவும். அரைத்த தேங்காயைச் சேர்த்து, கொதித்ததும் பருப்பு, உப்பு சேர்த்து இறக்கவும். கடைசியில் தயிர் சேர்த்துக் கிளறவும்.

இதை சாதத்துடன் சேர்த்துக்கொள்ளலாம். டிபன் அயிட்டங்களுடனும் சேர்த்துச் சாப்பிடலாம்.

இந்த ரெசிபிகள் பற்றி ‘டயட்டீஷியன்’கிருஷ்ணமூர்த்தி என்ன சொல்கிறார்?

செஃப் சொல்லியிருக்கும் இரண்டு ரெசிபியிலுமே தயிர் மற்றும் தேங்காய் சேர் க்கப்பட்டிருப்பதால், உடலில் நன்மை செய்யும் பாக் டீரியா வளர்வதற்கு உதவி யாக இருக்கும். வீரியமிக்க புண்க ளையும் ஆற்றக்கூடிய அரு மருந்தான தேங்காய் எண் ணெயும் சேர்க் கப்படுவதால், வயிற்று எரிச்சல் குணமாகும். கடுகு சேர்த்திருப்ப தால், புரதம், கால்ஷியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகளும் கிடைத்துவிடும். உணவு எளிதாக ஜீரணமும் ஆகிவிடும்” என்றார் டயட்டீஷியன்.


Sunday, February 12, 2012

உழைப்பின் உயர்வு

உழைப்பின் உயர்வு
--------------------------------


சுத்தமான உறவும்
சுற்றுப்புற நட்பும்
குடிசையில் பிறந்தவரை
கோபுரத்தில் ஏற்றி வைக்கும்

பரம்பரையைச் சொல்லிக்கொண்டு
பரிகசித்துத் திரிபவர்
மாளிகையில் பிறந்தாலும்
மண்சட்டி ஏந்த வைக்கும்

பிறப்பில் உயர்வில்லை
பேருழைப்பே உயர்வு தரும்
-------------------------------------- பாரதி

Thursday, February 9, 2012

ஆகாது-முடியாது-நடக்காது

ஆகாது-முடியாது-நடக்காது

நீராவிப் படகை(Steam Boat) கண்டு பிடித்த ராபர்ட் புல்டன் (Robert Fulton) முதன் முதலில் அதைப் பொது மக்கள் மத்தியில் செயல்படுத்திக் காட்ட முயன்ற போது அது உடனடியாகக் கிளம்பவில்லை. ஓரமாக நின்று பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் "இதெல்லாம் ஸ்டார்ட் ஆகாது. இந்தப் புதிய வகைப் படகு வேலை செய்யக் கூடியதல்ல. வேண்டுமானால் பாருங்களேன்" என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டார்கள். அவர்கள் சொன்னது போல அது கிளம்ப நேரம் ஆகியது. நேரம் ஆக ஆக முடியாது என்று சொல்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வந்தது.

திடீரென்று படகு பெரும் சத்தத்துடன் கிளம்பியது. அதைக் கண்டு ஓரிரு நிமிடங்கள் வாயடைத்து நின்றவர்கள் பின்பு சொல்ல ஆரம்பித்தார்கள். "ஏதோ கிளம்பி விட்டது. ஆனாலிதை நிறுத்த முடியாது. வேண்டுமானால் பாருங்கள்"

இப்படிப்பட்ட விமரிசகர்கள், ஆகாது-முடியாது-நடக்காது என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டிருப்பவர்கள் உலகில் என்றும் எங்கும் அதிகமாகவே இருக்கத் தான் செய்கிறார்கள். ஒரு வேளை யாராவது நடத்திக் காட்டி விட்டாலும் 'இதெல்லாம் ரொம்ப நாளைக்கு நடக்காது" என்றோ, செய்து காட்டியதில் உள்ள சின்னச் சின்ன குறைகளைத் தேடிப்பிடித்து சுட்டிக்காட்டியோ திருப்திப்படும்  NEGATIVE  மனிதர்கள் இவர்கள்.

பல பேருடைய ஆகாது-முடியாது-நடக்காது அறிவுபூர்வமான ஆராய்ச்சி மூலமாகவோ, ஆழ்ந்த அனுபவ மொழியாகவோ இருப்பதில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம். தங்கள் அறிவுக்கெட்டாதவைகளையும், தங்களால் சாதிக்க முடியாதவைகளையுமே இவர்கள் இப்படி சொல்லத் துவங்குகிறார்கள்.

எல்லா நல்ல காரியங்களும், சாதனைகளும், இவர்களைப் பொருட்படுத்தாமல் முயல்வதாலேயே நடக்கிறது. யாராவது இவர்களைப் பொருட்படுத்தி தயங்க ஆரம்பித்தால் அவர்கள் சாதனைகள் குறைப் பிரசவத்தில் உயிரிழக்கின்றன. எத்தனை அருமையான எண்ணங்கள், அருமையான திட்டங்கள் இப்படி மற்றவர்களது எதிர்மறை நோக்குகளாலும், பேச்சுகளாலும் விதையிலேயே கருகி விடுகின்றன என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

பெரிய சரித்திரம் படைக்கும் விஷயங்களில் மட்டுமல்ல, சின்னச் சின்ன தினசரி வாழ்க்கை விஷயங்களில் கூட இந்த மனிதர்கள் மற்றவர்கள் வாழ்க்கையைத் தேக்கமடையச் செய்து விடுகிறார்கள். மற்றவர்களது திறமைகளை 'இது பெரிய விஷயமில்லை, இதனால் பெரிய பயன் இல்லை' என்றெல்லாம் சொல்லி முளையிலேயே கிள்ளி விடும் இவர்கள் சில சமயங்களில் தயாராக சில உதாரணங்களையும் வைத்திருப்பதுண்டு. "இப்படித் தான் எனக்கு தெரிஞ்ச ஒருத்தன்...."

தங்கள் பாதையில் அளவு கடந்த நம்பிக்கையும், சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் உடையவர்கள் மட்டும் இது போன்றவர்களின் கருத்துகளால் பெரிதும் பாதிக்கப்படுவதில்லை. அப்படி உறுதியாக இல்லாதவர்கள் போகின்ற பாதை சரியாக இருந்தாலும், தங்கள் பாதையில் சந்தேகம் கொண்டு பயணத்தை நிறுத்தியோ, மாற்றியோ தங்கள் தனித்தன்மையை இழந்து விடுகிறார்கள்.

எனவே இப்படி எல்லாவற்றையும் அவநம்பிக்கையோடு பார்ப்பவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருங்கள். அவர்களை ஒரு பொருட்டாக நினைக்காமல் இருப்பது மிக நல்லது. அவர்களுக்குப் புரிய வைக்கவோ, உங்கள் தரப்பு வாதங்களை தெளிவு படுத்தவோ முயலாதீர்கள். அது வீண். எதையும் திறந்த மனதோடு கேட்டு தீர்மானிப்பவர்களாக இது போன்ற மனிதர்கள் என்றும் இருப்பதில்லை. முன்பே தீர்மானித்து விட்டவர்களிடம் நீங்கள் விளக்க முயல்வது கவிழ்த்து மூடிய குடத்தில் தண்ணீர் நிரப்ப முயல்வதற்கு சமம். உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் உரிமையை அவர்களுக்கு எக்காரணம் கொண்டும் தந்து விடாதீர்கள்.

இந்த நூற்றாண்டின் மிகக் கொடுமையான நோயாக எய்ட்ஸை சொல்வார்கள். நம் உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையை முற்றிலும் அழித்து எல்லா நோய்க்கிருமிகளின் தாக்குதல்களுக்கும் நம் உடலை எதிர்ப்பில்லாத இரையாக்குகின்றது இந்த நோய். இந்த அவநம்பிக்கையும் அதைப் போலவே கொடுமையானது. வாழ்க்கையில் சாதிக்கத் தேவையான நம்பிக்கையையும் கனவுகளையும் அழித்து எந்த சவாலையும் சந்திக்க முடியாத நிராயுதபாணியாக நம்மை ஆக்கி விடுகிறது இந்த அவநம்பிக்கை என்னும் நோய்.

கடைசியாக ஒரு வார்த்தை- இந்த ஆகாது-முடியாது-நடக்காது என்னும் அவநம்பிக்கை சொற்களை நீங்களும் மற்றவர்களிடம் எப்போதுமே கவனக் குறைவாக பயன்படுத்தாதீர்கள். அந்த நோயை இந்த சமுதாயத்தில் பரப்பும் சாதனமாக என்றுமே மாறி விடாதீர்கள்.

Wednesday, February 8, 2012

பரிதாப தமிழகம்

மின்வெட்டா ....? மின்சாரமா .....? - பரிதாப தமிழகம்

இன்றைய தமிழகத்தின் நிலையை என்னை அல்லவா அல்லது சிரிக்கவா என்று தெரியாத நிலையில் உள்ள லட்சக்கணக்கான தமிழர்களில் நானும் ஒருவன் . கடும் மின்வெட்டில் தவித்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் , வெயில் ஏற ..., ஏற ....எங்கும் மின்சாரதிர்க்காக குரல்கள் ஒலிக்க தொடங்கிவிட்டது .
கோவை மாநகரில் கடும் மின்சார தட்டுப்பாட்டினால் குறு தொழில்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினால் தினமும் சுமார் 250 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுகின்ற காரணத்தினால் வரும் 10 ம தேதி அன்று 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் தொழிறசாலைகள் மூடப்படுகிறது . சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்கும் மாபெரும் போராட்டம் நடக்க இருக்கிறதாம் .( Source : தினகரன் , பக்கம் 5 , தேதி 08 - 02 - 2012 )
தினமும் எட்டு மணி நேரம் மின்வெட்டு நிலவுவதால் , தினமும் சுமார் 200 கோடி ரூபாய் நஷ்டம் உண்டாவதால் 20 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிற்சாலைகள் நெல்லை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வருகிறது . .( Source : தினகரன் , பக்கம் 4 , தேதி 08 - 02 - 2012 )
கடும் மின்வெட்டு நிலவுவதால் , 10 ம வகுப்பு மற்றும் 12 ம வகுப்பு பொது தேர்வுகளை தள்ளி வைக்கவேண்டும் என்று ஒரு கூட்டம் சொல்லுகிறது.

இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் திரு . உதயகுமார் சொல்லுகிறார் , " உடனடியாக மத்திய தொகுப்பில் இருந்து 1000 MWe மின்சாரம் வழங்கவேண்டும் " என்று . சட்டியில் இருந்தால் தான் , அகப்பையில் வரும் என்பது ஐயாவுக்கு தெரியாது என்று நினைக்கிறேன்
சரி ....நமது அரசியல் தலைவர்கள் என்ன தான் செய்கிறார்கள் என்று பார்த்தால்...... சிங்க தமிழனும் , தானை தமிழனும் , நாம் தமிழனும் இருக்கிற இடமே தெரியவில்லை . இவர்களுக்கு மின்சாரம் தேவையா என்ன .....
சரி நமது சட்டமன்ற உறுப்பினர்கள் ஏதாவது பேசுவார்கள் என்றால் , அவர்களுக்கு தலையாய வேலையே மேஜையை தட்டுவது தான் என்று TV யை பார்த்து தெரிந்து கொண்டேன் .
சரி .... நமது அமைச்சர்கள் ஏதாவது செய்வார்கள் என்றால் , 26 பேர் பணியில் இறங்கியிருக்கிறார்கள் என்ற செய்தி கேட்டு ஆனந்தம் கொண்டேன் . கடைசியில் தான் அறிந்து கொண்டேன் . அவர்கள் sankarankovil தேர்தல் வேளைகளில் இறங்கி உள்ளார்களாம் . ஏன் என்றால் அது அவர்களின் மான பிரச்சனையாம் ....
ஆமாம் .... அது உண்மை தான் ...... நாங்கள் தான் உண்மையான தமிழர்களின் தலைவர்கள் என்று போலி முகம் காட்டும் தமிழர் தலைவர்களை இப்பொழுதும் அசராமல் நம்பும் எங்களை போன்ற தமிழர்களுக்கு ஏது மானம் ....ஏது பிரச்சனை ....?
இயங்க துடிக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான வதந்திகளை புறந்தள்ளுவோம் ...... மின் வேட்டை தூக்கி எறிவோம்

Friday, February 3, 2012

கலைஞர் தொலைக்காட்சி நேரடி

ஒரு கணனியை எவ்வாறு Format செய்து Windows 7 இன்ஸ்டோல் செய்வது



ஒரு கணனியை எவ்வாறு Format செய்து Windows 7 இன்ஸ்டோல் செய்வது

1 Answers



  1. Derick on Dec 13, 2011 Reply
    சரி நம்மில் பலருக்கு கணனி பாவிக்க தெரிந்திருந்தும் கணனியை எவ்வாறு Format செய்வது என தெரியாது. இலகுவாக செய்யலாம். முதலில் Windows 7 முழுமையான பதிப்பை பதிவிறக்கி DVD ஒன்றில் Write செய்து கொள்ளவும். பின்னர் அதனை செலுத்தி கணனியை Restart செய்யவும். கணனி தெடக்கத்தில் கீழ்வருமாறு காணப்படும் அதில்,
    காணப்படும் F11 to Enter Boot Menu என இருக்கும் இது கணனிகளுக்கிடையில் வேறுபடும் அதனால் அதில் F11 என போடப்பட்ட இடத்தில் என்ன கீ இருக்கிறதோ அதனை அழுத்தவும். அதன் பின் கீழ்வரும் Menu தென்படும்
    அதில் 1வதாக காணப்படும் CD-ROM/DVD-ROM இனை தெரிந்தெடுத்து Enter செய்திடவும் பின்னர் கணனியானது DVD மூலமாக தொடங்க வினாவும் கீழ் உள்ளவாறு,
    இவ்வாறு கேட்கும் போது 5 செக்கன்களுக்குள் ஏதாவது Key ஐ இழுத்தி Boot Menu க்கு செல்லலாம். பின் கீழ் உள்ளவாறு வரும்.
    அதில் அனைத்தையும் சரியாக Set செய்து விட்டு Next Button ஐ அழுத்தி அடுத்த பகுதிக்கு செல்க. அடுத்த பகுதி கீழ் உள்ளவாறு காணப்படும்
    இதில் Install Now என்பதை அழுத்தவம் சிறிது நேரத்தில் கீழ்வரும் திரை தென்படும்.

    அதில் I accept the following terms என்பதில் Tick செய்து Next ஐ அழுத்தவும். பின்னர் கீழ்வருமாறு திரை தோண்றும்.
    அதில் Custom என்பதை Click செய்யவும் பின் அடுத்த திரை கீழ் உள்ளது போல் தோண்றும்.
    அதன் பின் Drive Option(Advanced) என்பதை click செய்து பின்வரும் திரையை பெறலாம்.
    அதில் எந்த Drive ல் நீங்கள் Windows 7 ஐ Install செய்ய போகிறீர்களோ அதை Click செய்து Format என்பதை கொடுக்கவும் இனி என்ன கணனியை Format செய்து அப்படியே Next செய்தால் சரி சற்று நேரம் எடுக்கும்.

உறவுகள்


இறந்தவனின்
சொத்துக்காக உறவுகள்
சண்டையிட்டுக்கொள்ள
அவர்களைப் பார்த்து
தப்பித்து விட்டதாய்
எண்ணி
சிரித்துக் கொண்டிருந்தது...!

சடலத்தின் நெற்றியிலிருந்த
ஒற்றைக்காசு...!


உறவுகளுடன்

J.குமார்..