மின்வெட்டா ....? மின்சாரமா .....? - பரிதாப தமிழகம்
இன்றைய தமிழகத்தின் நிலையை என்னை அல்லவா அல்லது சிரிக்கவா என்று தெரியாத நிலையில் உள்ள லட்சக்கணக்கான தமிழர்களில் நானும் ஒருவன் . கடும் மின்வெட்டில் தவித்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் , வெயில் ஏற ..., ஏற ....எங்கும் மின்சாரதிர்க்காக குரல்கள் ஒலிக்க தொடங்கிவிட்டது .
கோவை மாநகரில் கடும் மின்சார தட்டுப்பாட்டினால் குறு தொழில்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினால் தினமும் சுமார் 250 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுகின்ற காரணத்தினால் வரும் 10 ம தேதி அன்று 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் தொழிறசாலைகள் மூடப்படுகிறது . சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்கும் மாபெரும் போராட்டம் நடக்க இருக்கிறதாம் .( Source : தினகரன் , பக்கம் 5 , தேதி 08 - 02 - 2012 )
தினமும் எட்டு மணி நேரம் மின்வெட்டு நிலவுவதால் , தினமும் சுமார் 200 கோடி ரூபாய் நஷ்டம் உண்டாவதால் 20 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிற்சாலைகள் நெல்லை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வருகிறது . .( Source : தினகரன் , பக்கம் 4 , தேதி 08 - 02 - 2012 )
கடும் மின்வெட்டு நிலவுவதால் , 10 ம வகுப்பு மற்றும் 12 ம வகுப்பு பொது தேர்வுகளை தள்ளி வைக்கவேண்டும் என்று ஒரு கூட்டம் சொல்லுகிறது.
இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் திரு . உதயகுமார் சொல்லுகிறார் , " உடனடியாக மத்திய தொகுப்பில் இருந்து 1000 MWe மின்சாரம் வழங்கவேண்டும் " என்று . சட்டியில் இருந்தால் தான் , அகப்பையில் வரும் என்பது ஐயாவுக்கு தெரியாது என்று நினைக்கிறேன்
சரி ....நமது அரசியல் தலைவர்கள் என்ன தான் செய்கிறார்கள் என்று பார்த்தால்...... சிங்க தமிழனும் , தானை தமிழனும் , நாம் தமிழனும் இருக்கிற இடமே தெரியவில்லை . இவர்களுக்கு மின்சாரம் தேவையா என்ன .....
சரி நமது சட்டமன்ற உறுப்பினர்கள் ஏதாவது பேசுவார்கள் என்றால் , அவர்களுக்கு தலையாய வேலையே மேஜையை தட்டுவது தான் என்று TV யை பார்த்து தெரிந்து கொண்டேன் .
சரி .... நமது அமைச்சர்கள் ஏதாவது செய்வார்கள் என்றால் , 26 பேர் பணியில் இறங்கியிருக்கிறார்கள் என்ற செய்தி கேட்டு ஆனந்தம் கொண்டேன் . கடைசியில் தான் அறிந்து கொண்டேன் . அவர்கள் sankarankovil தேர்தல் வேளைகளில் இறங்கி உள்ளார்களாம் . ஏன் என்றால் அது அவர்களின் மான பிரச்சனையாம் ....
ஆமாம் .... அது உண்மை தான் ...... நாங்கள் தான் உண்மையான தமிழர்களின் தலைவர்கள் என்று போலி முகம் காட்டும் தமிழர் தலைவர்களை இப்பொழுதும் அசராமல் நம்பும் எங்களை போன்ற தமிழர்களுக்கு ஏது மானம் ....ஏது பிரச்சனை ....?
இயங்க துடிக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான வதந்திகளை புறந்தள்ளுவோம் ...... மின் வேட்டை தூக்கி எறிவோம்