Pages

Saturday, December 17, 2011

எனது பாஷை

எனது பாஷை




தாய் மொழியில் இன்னும்
பரீட்சயம் இல்லா
மழலையாக;
பசி எனதுப் பாஷையாக;
அழுகை எனதுத் தேசமாக!

தாங்கிக்கொள்ளக்
கரமின்றி;
ஏங்கித்தவிக்கும்
விழிகளுடன்;
கண்டுக்கொள்பவர்
எவருமுண்டா என;
கொஞ்சம்
கல் நெஞ்சம்
கொண்டவர் கூட்டத்தோடு!

மிச்சமுள்ள எச்சிலைக்கு
எதிர்பார்த்து ஏக்கத்தோடு;
வீட்டில் வளர்க்கும்
நாய் பூனைக்கு
நாங்கள் மேலல்லவா!


எண்ணங்களுடன் ..
ஜெ .குமார்..