Pages

Friday, December 30, 2011

உலகின் சாராம்சம் மாயையா?

உலகின் சாராம்சம் மாயையா?



ஏழைக்கு இந்த கொடிய வறுமை ஏன்

பூ வைத்தும் ஜெபம் செய்தும் வழிபடும் மனிதனுக்கு துன்பம் வருவதுதான்ஏன்


பிறக்கும் போதும் இறக்கும் போதும் மனிதன் அழுவதுதான் ஏன்

செங்கல்லை செய்பவனுக்குசெங்கல்லிலான வீடு இல்லை ஏன்

மரக்கட்டிகளை கொண்டு கட்டில் செய்யும் காப்பேன்டருக்கு(தச்சனுக்கு)
சொந்தமான கட்டில் இல்லை ஏன்

மாளிகைகளை கட்டும் மேசனுக்கு இருக்க செங்கல்லிலான வீடு இல்லை ஏன்


கடலில் செத்து பிழைக்கும் மீனவனுக்கு ஒழுங்காக சாப்பிட மீன் இல்லை ஏன்

வஸ்சில்(பேரூந்தில்) ஏறியவுடன் முன்னால் போ என்று சிம்போலிக்காக கூறும் கன்டொக்டருக்கு(நடத்துனருக்கு) வாழ்கையோ உயரவில்லையே ஏன்

கிரிக்கெட்டை அறிமுகம் செய்த இங்கிலாந்து அணிக்கும் பதினொரு வீரர்களும் சகலதுறை ஆட்டக்கரர்களை கொண்ட தென்னாபிரிக்காவும் உலக
கிண்ணத்தை இதுவரை கைப்பற்றாது ஏன்

இலஞ்சமே கூடாது என்ற மனிதன் கடவுளுக்கே நேர்த்திக்கடன் எனும் பெயரில் இலஞ்சம் கொடுப்பது ஏன்

ஒரே நேரத்தில் உலகில் இரவும்பகலும் ஏன்


அமைதியை விரும்பும் மனிதனுக்கு கொலை ஆயுதம் வன்முறை ஏன்


அன்பு கொண்ட மனிதனுக்கு பொறாமையும் பழிவாங்கலும் ஏன்




வீரத்தழிழ்ழனாம் நம் தழிழனுக்கு உரிமைகள் விடுதலை கிடைக்கவில்லையே ஏன்.....




இன்னும் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.....