Pages

Thursday, January 26, 2012

AVG ANTIVIRUS PROGRAM இற்கான Activation Key (2018 வரை


AVG ANTIVIRUS PROGRAM இற்கான Activation Key (2018 வரை)

AVG ANTIVIRUS PROGRAM ஆனது மிகச் சிறந்த ANTIVIRUS PROGRAM களில் ஒன்றாகும்! இதன் 2012 இற்கான புதிய பதிப்பு அண்மையில் வெளியானது! இது முற்றிலும் இலவசமான பதிப்பும் வெளியாகியுள்ளது! எனினும் இலவச பதிப்பு மூலம் கிடைக்கப்பெறும் பாதுகாப்பு அளவு குறைவாகவே உள்ளது! இதன் முழுமையான பதிப்பை பணம் கொடுத்து வாங்க வேண்டும்.





ஆனால் இதற்கும் தீர்வு உள்ளது! குறித்த மென்பொருளுக்கான சரியான Activation Key வழங்கும் பட்சத்தில் AVG ANTIVIRUS PROGRAM இன் பாதுகாப்பு வழங்கும் திறன் அதிகரிக்கப்படுவதுடன் மென்பொருளின் திறனும் அதிகரிக்கப்படும்!

கீழ்தரப்பட்ட Activation Key வழங்கும் பட்சத்தில் AVG ANTIVIRUS PROGRAM ஆனது 2018 வரை உங்களுக்கான பாதுகாப்பை வழங்கும்.

AVG Antivirus -  8MEH-RNZLL-2Y4QX-79PPA-MRVQG-AEMBR-ACED

AVG Internet Security -  8MEH-RMXLW-HN44A-BABPA-SGXJC-PEMBR-ACED

Download AVG (X86) Version
Download AVG (X64) Version

How to Activate -  1. AVG ANTIVIRUS PROGRAM இனை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும்.

 2. நிறுவிய பின் AVG ANTIVIRUS PROGRAM இனை Open செய்து Help Menu சொடுக்குக.

 3. பின் அம் Menu இல் காணப்படும் Activate என்பதை சொடுக்குக.

 4. பின் தோன்றும் இல் உங்களது பெயரினையும் Activation Key இனையும் கொடுத்து OK Button   சொடுக்கவும்.

 5. அடுத்து தோன்றும் இல் OK Button சொடுக்கவும்

 6. அதனைத் தொடர்ந்து உங்களுக்கான மேலதீக அம்சங்கள் நிறுவப்படும்.

 7. பின் நீங்கள் AVG ANTIVIRUS PROGRAM இன் பாவனையை 2018 வரை மேற்கொள்ளலாம்.


Thursday, January 19, 2012

நாமும் அரவணைப்போம்

நாமும் அரவணைப்போம்...



குழந்தை
தொழிலார்களுக்கு
சட்டமுண்டு
இருந்தும்
வேலைக்கு
சேர்ப்பதுக்கண்டு
கோபம் வருவதுண்டு


பிச்சை எடுப்பதை
தடுக்க நினைப்பதுண்டு
இருந்தும்
இப்படி குழந்தைகளை
கண்டால் மனதில்
இரக்கம் கண்டு
கொடுப்பதுமுண்டு


கையேந்தும்
குழந்தைகளுக்கு
அரவணைக்க யாருண்டு...


பிள்ளை இல்லாத
பெற்றோர்களும்,
இவர்களை தத்து எடுக்க
தயங்குவதுண்டு


பெற்ற பெற்றோர்களும்
வயிற்றுக்கு
பிச்ச எடுக்க
பிள்ளைகளை
அனுப்புவதுண்டு


இதை தொழிலாகவே
செய்வதுண்டு
இதற்காக குழந்தைகளை
கடத்தும் கூட்டமுண்டு


எல்லாம் அறிந்தும்
தெரிந்தும்
இவர்களை
அரவணைக்க
யாருண்டு....


பெற்றால் தான்
பிள்ளையா ...
என்ற கேவியோடு
உதவும் கரங்கள்
இருப்பதை போல


நாமும் அரவணைப்போம்
இல்லாமை தடுப்போம்
கல்வியை கொடுப்போம்

Friday, January 13, 2012

பணக்காரனாக நூறு வழிகள்

பணக்காரனாக நூறு வழிகள்



அந்த ஊரிலேயே பணக்காரர் அவர். நல்ல காரியங்களுக்கு பணத்தை வாரி வாரி வழங்கும் வள்ளலாகவும் இருந்தார்.

ஒரு நாள் அந்த ஊரில் உள்ள பூங்கா ஒன்றில் குடும்பத்துடன் அவர் நேரம் செலவிட்டுக் கொண்டிருக்கும்போது கந்தல் ஆடை அணிந்த பிச்சைக்காரன் ஒருவன் எதிரே வந்தான்.

அந்த பிச்சைக்காரன் அந்த செல்வந்தரைப் பார்த்து “ ஐயா! நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். என் தோற்றத்தைப் பார்த்து என்னை பிச்சைக்காரன் என்று எண்ணிவிட வேண்டாம். நான் ஒரு எழுத்தாளன். புத்தகம் ஒன்று எழுதி உள்ளேன் “ என்றான்.

அந்த செல்வந்தர் வியப்புடன் “ அப்படியா! என்ன புத்தகம் எழுதி இருக்கிறாய்?” என்று கேட்டார். “ பணக்காரனாக நூறு வழிகள் என்ற தலைப்பில் புத்தகம் எழுதி உள்ளேன் “ என்றான்.

அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. “ எழுத்தாளன் என்கிறாய். பணக்காரனாக நூறு வழிகள் என்று புத்தகம் எழுதியிருக்கிறேன் என்கிறாய். நீ எழுதிய புத்தகத்திற்கும் உன் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லையே. பிச்சை எடுத்து அல்லவா வாழ்க்கை நடத்துகிறாய் “ என்று கேட்டார்.

“ பணக்காரனாக நூறு வழிகளில் இதுவும் ஒரு வழிதான் அய்யா. இதையும் அப்புத்தகத்தில் எழுதியிருக்கிறேன் “ என்று பதிலளித்தான் அவன்.

அந்த பணக்காரர் வயிறு குலுங்க சிரித்துவிட்டு புத்தகத்தை வெளியிட அவனுக்கு தேவையான பணம் கொடுத்து அனுப்பி வைத்தார்.

Sunday, January 8, 2012

படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது





வாழ்க்கையில் இரண்டு குறிக்கோள்கள் இருக்கவேண்டும். விரும்பியதை அடைவது; அடைந்ததை அனுபவிப்பது. பெரும் புத்திசாலிகளால் மட்டுமே இரண்டாவது குறிக்கோளை அடையமுடியும்.
--லோகம் பி. ஸ்மித்

ஜெயிக்கறதுக்குப் பேர் காதல் இல்லை. மதிக்கறதுக்குப் பேர் தான் காதல்.
--பாலகுமாரன்

நமக்கு நன்றாகத் தெரிந்த விஷயங்களில் தான் அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டும்
--ஆர்தர் ஸ்பியர்


ஒன்றைச் செய்ய விரும்பினால் வழியைக் கண்டறிகிறாய். செய்யாமல் இருக்க விரும்பினால் காரணங்களைக் கண்டுபிடிக்கிறாய்.



தோற்றுவிடுவேனோ என்று ஒருவன் தயங்கிக் கொண்டிருக்கும் போதே, நிறைய தோல்விகள் கண்ட ஒருவன் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறான்.
--ஹென்றி. சி. லிங்க்.

முயற்சி செய்யும் வரை உங்களால் என்ன முடியும் என்பது உங்களுக்குத் தெரியாது.
--ஹென்றி ஜேம்ஸ்




தோல்வி என்பது மேலும் புத்திசாலித்தனமாக நம் வேலையைத் துவங்குவதற்கான மற்றொரு வாய்ப்பு.
--ஹென்றி ஃபோர்டு

தப்பு செய்யாதவர்கள் என்பவர்கள்
எதையுமே புதிதாக செய்ய முயற்சிக்காதவர்கள்.


முதலில் கீழ்படியக் கற்றுக்கொள்.
கட்டளையிடும் பதவி தானே வரும்!
முதலில் வேலைக்காரனாயிருந்து பழகு.
எஜமானனாக நீ தகுதி பெறுவாய்!
--சுவாமி விவேகானந்தர்

நடக்குமோ நடக்காதோ
நோக்கம் உயர்வானதாய் இருக்கவேண்டும்



பொறுமையாக இருந்தால்
தண்ணீரைக் கூட
சல்லடையில் அள்ளலாம்.
ஆனால் அது உறையும் வரை
காத்திருக்க வேண்டும்!

எவரைப்போல இருக்கவும் முயலாதே..
எவரையும் பின்பற்றாதே..
அப்படிச் செய்தால் உன் இருப்பு போலியாகும்.
அது தற்கொலையை விட மோசமானது.
நீ நீயாக இரு!
அப்போதுதான் நீ ஆதாரப் பூர்வமானவராக பொறுப்புள்ளவராக
உண்மையாக இருக்க முடியும்!
--ஓஷோ


அமைதி இல்லாதவனுக்கு இன்பம் இல்லை.
--கீதை

முழுக்க முழுக்க சர்க்கதையாக
இருந்து விடாதே.
உலகம் உன்னை விழுங்கிவிடும்!
முழுக்க முழுக்க எட்டிக்காயாக
இருந்து விடாதே.
உலகம் உன்னை உமிழ்ந்துவிடும்!
--பாரசீகப் பழமொழி



வெற்றி என்பது முடிவல்ல.
அது ஒரு தொடர் பயணம்!

Friday, January 6, 2012

சொல்லாத சோகத்தைச் சொல்லும் படம்



50 ரூபாவை யாரும் ஒரு ஏழைக்கு அவ்வளவு எழிதில் தானமாகக் கொடுக்கமாட்டார்கள் !
ஆனால் ஹோட்டலில் டிப்ஸ்ஸாக அவர்கள் 50ரூபாவைக் கொடுப்பார்கள் !

3 நிமிடம் கடவுளைக் கும்பிடப் பிடிக்காது !
ஆனால் 3 மணித்தியால சினிமாப் படம் பார்கப் பிடிக்கும் !

முழு நேர வேலைக்குப் பின்னர் கூட உடற்பயிற்ச்சிக்கு செல்வார்கள் !
ஆனால் வீட்டில் அப்பா அம்மாவுக்கு உதவக் கேட்டால் முடியாது என்பார்கள் !

காதலர் தினத்திற்காக 1 வருடம் காத்திருந்து பரிசு வாங்குவார்கள் !
ஆனால் அன்னையர் தினம் மட்டும் நினைவில் இருக்காது !

புகைப்படத்திலுள்ள சிறுவனுக்கு ஒரு பாண் துண்டை கொடுக்க யாரும் இல்லை !
ஆனால் இந்த ஓவியம் வரையப்பட்ட முறையில் சோகம் இருக்கிறது என்பதனால் இதனை ஒருவர் 10 லட்சம் ரூபாய்களுக்கு வாங்கிச் சென்றுள்ளார் !

இதுதான் இன்றைய மனிதனின் நிலை ! மனிதர்களை நினைக்கும்போது நூதனமாக உள்ளது அல்லவா ? இது ஒன்றும் புகைப்படம் அல்ல ஒரு ஓவியரால் வரையப்பட்டது