Pages

Tuesday, December 24, 2013



 



நன்றாக யோசித்து ஒரு செயலில் இறங்கவேண்டும்.ஆனால் அப்படி இறங்கிய பிறகு சலனங்கள் கூடாது.பலன்களை எண்ணி கவலைப் படக்கூடாது.

ஒத்துழையாமை என்பது அற்புதமான ஆயுதம். நமக்கு பிடிக்காதவர்கள் மீது கல் எடுத்து வீசுவதை விட அவர்களைப் புறக்கணித்துப் பாருங்கள். தானாக உங்கள் வழிக்கு இறங்கி வருவார்கள்.

உங்களுடைய நண்பர் அல்லது உறவினர் அல்லது உங்களுக்குப் பிடித்தவர் என்பதற்காக சிலருக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.எல்லோருக்கும் சம அளவு வாய்ப்புக் கொடுங்கள்.

பள்ளி கல்லூரிக்குச் சென்று திரும்புவதோடு படிப்பு நின்று விடுவதில்லை. எப்போதும் மாணவராக இருங்கள்.புதுப் புது விசயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள்.

உங்களுடைய கற்பனைகள் வானத்தில் பறந்தாலும் கால்கள் எப்போதும் தரையில் இருக்கட்டும்.வெற்றுகனவுகள் யாருக்கும் உபயோகப் படாது.

ஆயிரம் கட்டுரைகள் கதைகள் தத்துவ அலசல்கள் புத்தகங்கள் திரைப்படங்கள் தராத ஞானத்தை நன்கு வாழ்ந்த ஒரு மனிதரின் வாழ்க்கை சொல்லித் தந்துவிடும்.நாம் "முடியாது என்று நினைக்கிற விசயத்தைக் கண்ணெதிரே சாதித்து முடித்தவர்கள் நிச்சயம் இருப்பார்கள் தேடுங்கள்.

நீங்கள் வன்முறையின் மூலம் வெற்றி பெற்றாலும் அதனால் வாழ்நாள் முழுதும் ஏற்படுகிற குற்ற உணர்ச்சியை உங்களால் தாங்கிக் கொள்ள முடியாது.

எப்படியும் வாழலாம் என்று இல்லாமல் இப்படித்தான் வாழ வேண்டும் என்கிற உறுதியை கட்டுப்பாட்டை ஒழுக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.

அடுத்தவர்களை அதிகாரத்தின் மூலம் ஜெயித்து விடலாம் என்று நினைக்காதீர்கள்.சர்வாதிகாரதனத்தை தவிர்த்து அனைவரையும் அன்பால் கட்டிபோடுங்கள்.

மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக நீங்கள் ஒரு விஷயத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எதையும் கேள்வி கேட்டு பழகுங்கள்.

அதிகாரம் கைக்கு வந்தவுடன் ஆடம்பரமும் ஒட்டிக் கொள்ளப் பார்க்கும். அனுமதிக்காதீர்கள். எப்போதும் சேவை மனப்பான்மை உங்கள் உள்ளத்தில் இருக்கட்டும்.

கேள்வி கேக்காம நான் சொன்னதை நீ செய் என்று சொன்னால் அவர்கள் கேள்வி கேட்பார்கள். இதை செய்தால் உனக்கும் எனக்கும் நமக்கும் இந்தச் சமூகத்துக்கும் பலன்கள் உண்டு என்று ஒருவரிடம் புரியவைத்தால் கண்ணைக் கட்டிக் கொண்டு எங்கேயும் குதிக்க தயாராகி விடுவார்கள்.
உண்மை என்பது உங்களுடைய வாழ்க்கையின் ஒற்றை வரி விளக்கமாக இருக்கட்டும். கடைசியில் உண்மைதான் ஜெயிக்கும். உண்மை மட்டுமே ஜெயிக்கும்.






 

Monday, December 23, 2013



ப்ளீஸ் இந்த  புத்தகத்தைபடிக்காதிங்க   ..
கோபி உண்மையைத் தான் சொல்லி இருக்காரு .ஒரு சிலர் தலைப்பில் உள்ளதிற்கு ஓரளவு நியாயம் கூறும் அளவில் எழுதி இருப்பார்கள். ஒரு சிலர் தலைப்பைத் தவிர சுவாரசியமாக எதுவுமே உள்ளே எழுதாமல் இருப்பார்கள். இன்னும் ஒரு சிலர் ஒரு படி மேலே சென்று, “தயவு செய்து இந்தப் பதிவை படிக்காதீங்க!என்று தலைப்பு வைத்து உள்ளே இழுப்பாங்க. அதற்கு சற்றும் குறைவில்லாத ஒரு தலைப்புத் தான் கோபி புத்தகம்.
வழக்கமான ஒரு சுய முன்னேற்ற புத்தகமே இது! எந்த ஒரு புதிய சிறப்பும் இல்லை. கோபி போன்ற பிரபலமானவர்களே இது போல தலைப்பு வைத்து இழுத்து ஏமாற்றினால் மற்றவர்களை என்ன கூறுவது? இது கோபிக்கு நிச்சயம் அழகல்ல. இது குறித்து அவர் விளக்கம் கூறி இருந்தாலும், அதை எத்தனை பேர் கேட்டு இருக்கப் போகிறார்கள்! அப்படியே கேட்டு இருந்தாலும் ஒரு குறுகுறுப்பு இருக்கத் தானே செய்யும். பூட்டி இருப்பதைத் தான் திறந்து பார்க்கத் தோன்றும்.
ஒரு சில நல்ல புத்தகங்கள், பதிவுகள் தலைப்பு சரியில்லாததால் பலரின் கவனத்தை பெறாமல் சென்று விடும். படிப்பவர்கள் பெரும்பாலும் தலைப்பிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதே இதற்குக் காரணம். இதற்கு, எழுதுபவர்களும் ஓரளவு நியாயமான முறையில் கவர்ந்து இழுக்கும் தலைப்புகள் வைக்க முயற்சிக்க வேண்டும், இல்லை என்றால் அவர்களின் உழைப்பு, திறமை கவனிக்கபடாமலே போய் விடும். வறட்சியான தலைப்புகள் அவர்களின் உழைப்பையே வீணடித்து விடும்.
இதில் ஒரு பாவமான பிரிவினர் இருக்கிறார்கள். ரொம்ப நல்ல பதிவாக இருக்கும் ஆனால், யாரும் கண்டுக்க மாட்டார்கள். ஒரு கட்டத்தில் வெறுப்பாகி சர்ச்சையான தலைப்பை வைத்து, “இப்படி தலைப்பு வைத்தால் தான் வருவீங்க அதனால் வைத்தேன்என்று கூறி இருப்பார்கள்.
ஒருவர் பிரபலமான நபர் என்றால் அவர் என்ன தலைப்பு வைத்தாலும் சென்று படிக்க தயாராக இருப்பார்கள் ஆனால், அதிகம் அறிமுகம் இல்லாதவர் எழுதும் புத்தகம், பதிவு என்றால் தலைப்பு ரொம்ப முக்கியம். சொல்லப்போனால் பிரபலமானவர்கள் எழுதியதை விட சிறப்பாக ஒரு சாதாரணமானவர் எழுதி இருக்கலாம் ஆனால், கவனிக்கப்பட மாட்டாது. காரணம், உலகம் பிரபலமானவர்களுக்கே முக்கியத்துவம் தரும்.
சண்டியர்என்று கமல் தனது படத்திற்கு பெயர் வைத்த போது கடும் எதிர்ப்பு எழுந்தது அதனால், வேறு வழியில்லாமல் விருமாண்டிஎன்று மாற்றினார். தற்போது அதே சண்டியர்என்று ஒரு படம் வருகிறது. ஒரு சத்தமும் இல்லை. சண்டியர் பெயரை எதிர்த்தவர்கள் இப்ப எங்கே போனார்கள்?
இதை கண்ணதாசன் வாழ்க்கை சம்பவத்தில் இருந்தே கூறலாம். ஒருமுறை கண்ணதாசன், தான் எழுதிய கவிதையை ஒரு மாணவனை விட்டு படிக்கக் கூறினார். அங்கே இருந்தவர்கள் எந்த பாராட்டும் தெரிவிக்கவில்லை. பின்னர் அந்த மாணவன் எழுதிய கவிதையை தான் எழுதியதாக வாசித்தார். இவர் வாசித்தவுடன் அரங்கில் பலத்த கைதட்டல். பின்னர் இதைக் குறிப்பிட்டு, “உலகம் யார் கூறுகிறது என்பதைத் தான் பார்க்கிறதே தவிர அவர் என்ன கூறுகிறார் என்பதை கவனிப்பதில்லைஎன்று கூறி இருந்தார்.
இந்தப் புத்தகம் இவ்வளோ விற்பனையானதிற்கு (2,50,000 பிரதிகளை தாண்டி விட்டதாகக் கூறுகிறார்கள்) காரணம் இதில் உள்ள விஷயம் அல்ல. முழுக் காரணமும் இதை எழுதியவர் கோபிநாத் என்பதும் மற்றும் இந்தப் புத்தகத்தின் தலைப்பிற்க்காக மட்டுமே!



Tuesday, November 26, 2013

நொடியில் ஏற்படும் மாற்றம்...



நொடியில் ஏற்படும் இரக்க உணர்வு
கடந்துவந்த வெறுப்பை மறக்கச்செய்கிறது...!
நொடியில் ஏற்படும் அன்பு
கோபத்தை மறக்கச்செய்கிறது...!
நொடியில் ஏற்படும் நட்புணர்வு
பகைமையை மறக்கச்செய்கிறது...!
நொடியில் ஏற்படும் மரியாதை
அலட்சியத்தை மறக்கச்செய்கிறது..!!
நொடியில் ஏற்படும் மரணம்
அஞ்ஞானத்தை மறக்கச்செய்கிறது..!!
நொடியில் ஏற்படும் ஞானம்
பொறாமையை மறக்கச் செய்கிறது...!!
நொடியில் ஏற்படும் மாற்றங்களின்
நொடியையறியும்

நொடியின் நொடியெதுவோ..??!!

Wednesday, November 13, 2013

பணம் படுத்தும் பாடு!! (நிகழ்வு)









இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த சமயம்.

இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனின் மீது நாள்தோறும் குண்டுமழை பொழிந்து கொண்டிருந்த நேரம்.

அப்போதைய இங்கிலாந்துப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், பி.பி.சி., வானொலி நிலையத்திற்கு போன் செய்து, தான் இன்னும் சில நிமிடங்களில் அங்கு வருவதாகத் தெரிவித்தார்.

காரணம்...

அன்று இரவு பி.பி.சி.,யின் தேசிய ஒலிபரப்பில் அவர் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சர்ச்சில் தன் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தபோது, எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. எதிரிகள் குண்டு மழை பொழிந்து கொண்டிருந்ததால் நாடு முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப் பட்டிருந்தது.

சாலைக்கு விரைந்து வந்த சர்ச்சில், வழியில் வந்த ஒரு டாக்சியை நிறுத்தி, “பி.பி.சி., நிலையத்திற்குப் போக வேண்டும்“ என்றார்.

அதற்கு டிரைவர், “டாக்சி வராது சார். இன்னும் சிறிது நேரத்தில் சர்ச்சில் ரேடியோவில் பேசப் போகிறார். அதைக் கேட்பதற்குத்தான் நான் வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கிறேன்.“ என்றான்.

அதைக் கேட்ட சர்ச்சிலுக்குப் பெருமை பிடிபடவில்லை. இந்த இருட்டில் தன்னை யார் என்று இவன் அறியாவிட்டாலும் தன் பேச்சிற்கு இத்தனை மதிப்புக் கொடுக்கிறானே என்று நினைத்த அவர், அவனுக்கு அன்பளிப்பு தர விரும்பினார். உடனே தன் கோட் பைக்குள் கையை விட்டு பத்து பவுண்டு நோட்டு ஒன்றை எடுத்தார்.

அவர் பணம் எடுத்ததைக் காரின் உள் விளக்கு வெளிச்சத்தில் பார்த்தான் டிரைவர்.

சட்டென்று அவன் கண்கள் சுடர் விட்டன!

அடுத்த வினாடி...

விருட்டென்று அவர் கையிலிருந்த பணத்தைப் பிடுங்கிய அவன், அதைத் தன் பாக்கெட்டில் திணித்துக் கொண்டே, “சர்ச்சில் கிடக்கிறார். நீங்கள் ஏறி உட்காருங்கள் சார். உங்களை கொண்டு போய் பி.பி.சி., நிலையத்தில் விட்டுவிடுகிறேன்“ என்றான்.

அதைக் கேட்ட சர்ச்சில் அசைவற்று அப்படியே நின்றார்.



படித்ததில் பிடித்தது

Friday, October 25, 2013

சுட்டக் கதை

ஒரு புலி தன்னுடைய கல்யாண வரவேற்பு விழாவுக்கு காட்டிலிருந்த அனைத்து மிருகங்களையும் அழைத்தது.


அந்த திருமண விழாவில் ஒரு எலி சந்தோஷமாக நாட்டியமாடியது.
இதைப் பார்த்து புலிக்குக் கோபம் வந்தது.

"என்ன தைரியம் இருந்தால் இங்கே வந்து நீ நாட்டியம் ஆடுவாய்? "
என்று புலி ஆவேசமாகக் கத்தியது.

அதைக் கேட்ட எலி,

"சும்மா கத்தாதே, கல்யாணத்துக்கு முன் நானும் புலியாகத்தான் இருந்தேன்."
என்றது.

***********************************



விறகுவெட்டியும் தேவதையும் கதையும் சிறு வயதில் பள்ளிபுத்தகத்தில் படித்திருக்கிறோம்.

அதே விறகுவெட்டி தன் மனைவியை தெலைத்துவிட்டு குளக்கரைக்கு சென்று தேவதையிடம் தன் மனைவியை கண்டுபிடித்து தருமாறு வேண்டினான்.

அவன் முன் தோன்றிய தேவதையும் ஒரு நடிகையை காட்டி இவளா உன் மனைவி என்றது. உடனே அவனும் ஆம் என்றான் அவன் பொய் சொல்லுவதைக் கண்டு கோபப்பட்ட தேவதை முதலில் நல்லவனாக இருந்த நீ இப்படி மாறிவிட்டாயே என்றது.

அதற்கு அவன் அப்படி இல்லை நீ முதலில் காட்டிய நடிகையை நான் இல்லை என்றால் வேறு இருவரையும் காட்டுவாய்,கடைசியில் என் மனைவியும் காட்டும் போது நான் ஆம் என்றதும், முன்பு கோடலிகளை கொடுத்தது போல நாலு பேரையையும் என்க்கே கொடுப்பாய் என்னால் ஒருத்தியவே சமளிக்க முடியவில்லை இதில் நாலு பேர என்றான்

**********************************


ஓரு குளத்தில் சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பிடித்த மீன்களை ஒரு கூடையில் வைத்து இருந்தனர்.

அங்கு வந்த பருந்து அதில் இருந்த மீன் ஒன்றை கவ்வி பறந்து சென்றது, அதை கவனித்த காக்கா கூட்டம் அந்த பருந்தை விரட்டியது. அந்த பருந்து வளைந்து, நெளிந்து பறந்து சென்றது.

மீன் எடையால் அதால் மேலேழும்பி பறக்க முடியவில்லை, காக்கா கூட்டமும் விடுவதாக இல்லை.

கடைசில் அந்த பருந்து மீனை விட்டுவிட்டு பறந்து சென்றது.

காக்கா கூட்டமும் பருந்தை விட்டு மீனை நோக்கி பறந்தன. பருந்தும் நிம்மதியாக பறந்து சென்றது.

நாமும் பிரச்சனைகளை விட்டு விட்டால் நிம்மதியாக வாழலாம்..

Wednesday, October 23, 2013

கையெழுத்து...

நீங்கள் கையெழுத்துப் போடும்ஸ்டைலில்உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிடமுடியும் தெரியுமா ?






1) கையெழுத்துப் போட்டு விட்டுக்கீழே சின்னக் கோடு போட்டால்...
தைரிய பார்ட்டிகள் . நல்லவர்தான்ஆனால்,கொஞ்சம் சுயநலமாகச் சிந்திப்பீர்கள்.இந்தஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி -க்கள்.. , சச்சின், சாப்ளின்,வின்ஃப்ரே..

2) கையெழுத்தின் கீழ் இரண்டு புள்ளிகள் வைத்தால்...
ரொமான்டிக் பார்ட்டி .உடை மாற்றுவதுபோலக் காதலன் /காதலியை மாற்றுவீர்கள் .மற்றவர்களை ஈசியாக அட்ராக்ட்செய்வீர்கள் .அமிதாப் இந்த ஸ்டைலின் வி.ஐ.பி..

3) கையெழுத்துக்குக்கீழே ஒரே ஒரு புள்ளி வைத்தால்...
கூல் பார்ட்டி . சிம்பிளாக இருப்பீர்கள் .பிடிக்காதவர்களைத் திரும்பிக்கூடப்பார்க்க மாட்டீர்கள். இந்த ஸ்டைலின் வி.ஐ.பி.டாக்டர் விக்ரம் சாராபாய்..

4) உங்கள் கையெழுத்தின் கீழ்புள்ளியோ,கோடோ கிடையாதா ?
உங்கள் வாழ்க்கை உங்கள்கையில்தான் .அடுத்தவர்கள் கருத்து சொன்னால் கண்டுகொள்ளவே மாட்டீர்கள் . இதில் பாரக்ஒபாமா இருப்பார் ..

5) பெயருக்கு சம்பந்தமே இல்லாமல் கையெழுத்துப் போட்டால்...
கமுக்க பார்ட்டி . உங்களிடம் நம்பி ரகசியம்சொல்லலாம் . கொஞ்சம் புத்திசாலியும்கூட . இந்த ஸ்டைலின்கீழ் மர்லின் மன்றோ,கபில்தேவ்..

6) பெயருக்குத் தொடர்புள்ள ஆனால்,கோழி கிண்டிய மாதிரி புரியாதகையெழுத்துப் போட்டால்...
புத்திசாலி பார்ட்டிகள் . ஆனால்,யோசிக்காமல் முடிவெடுப்பீர்கள் .ஒரு வரி பாராட்டுதலுக்கே மயங்கி விடுவீர்கள் .
இதில்இந்திரா காந்தி,டாக்டர் ஜாகிர் ஹுசேன் ..

7) முழுப் பெயரையும் பொறுமையாகக் கையெழுத்துப் போட்டால்...
நல்லவர் . ஆளுக்கும், சூழலுக்கும தகுந்தமாதிரி அட்ஜஸ்ட் செய்வீர்கள் . ஆனால்,உங்கள் கருத்துக்களில் தெளிவாகஇருப்பீர்கள் . பில் கிளிண்ட்டன், மன்மோகன்சிங் இதில் அடங்குவர் ..

8.)வெறுமனே பெயரை எழுதிவைத்தால்...
அம்மாஞ்சி . பாசமாகவும்,உறவுக்கு உயிரையும் கொடுப்பீர்கள் .இந்தவகை வி.ஐ.பி -க்கள் எம்.எஸ்.சுப்புலட்சுமி, மதர் தெரஸா ..

9) கையெழுத்துக்குக் கீழே தேதி,வருடம் போடுவீர்களா ?
ஓல்டு பார்ட்டிகள் . பாரம்பரியக்கலை பிடிக்கும் . முடிவெடுக்க நின்று நிதானமாக யோசிப்பீர்கள் . இந்த ஸ்டைலில் கையெழுத்திட்ட வி.ஐ.பி .சர்.சி.வி.ராமன் .

இதுல உங்க கையெழுத்து எதுல இருக்கு பாஸ்...?

Thursday, August 29, 2013

இப்படியும் நடக்க வாய்ப்பிருக்கிறது...!

உஷார்...! இப்படியும் நடக்க வாய்ப்பிருக்கிறது...!

ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்.

அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு

" ஏன் சோகமாக இருக்கிறீர்கள் " என்று கேட்டார்.

அதற்கு இவர் " எனது தொழில் நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது உடைந்து போய்விட்டேன் " என்றார்.

" எவ்வளவு ரூபாய் நஷ்டம் ? " என்றால் அவர்.

" 50 கோடி ரூபாய் " என்றார் இவர்.

" அப்படியா, நான் யார் தெரியுமா ? " என்று கேட்டு அந்த ஊரின் பிரபல செல்வேந்தரின் பெயரை சொன்னார்.

அசந்து போனார் இவர்...

" சரி 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகி விடுவாயா ? " என்று கேட்டார் அவர்.

உடனே முகமலர்ச்சியுடன் இவர் " ஆமாம் எல்லாம் சரியாகி விடும் " என்றார்.

பின் அந்த செல்வேந்தர் ஒரு செக் புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு இவரிடம் நீட்டி " இந்தா இதில் 500 கோடிக்கு செக், நீ கேட்டதைவிட 10 மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும் சமாளி. ஆனால் ஒருவருடம் கழித்து இந்த பணத்தை எனக்கு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அடுத்த வருடம் இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன் " என்று சொல்லி விட்டு செக்கை இவர் கைகளில் தினித்து விட்டு சென்றார் அவர்.

பின் அந்த நிறுவனத்தின் தலைவர் வேகமாக அலுவலகத்திற்கு சென்றார். தன் அறைக்குள் சென்று அந்த செக்கை தனது பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டினார். பின் தனது உதவியாரை அழைத்து அனைத்து ஊழியர்களை நிர்வாக கூட்டத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய சொன்னார். ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில் அமர்ந்திருந்தனர்.

இந்த நிறுவனத்தின் தலைவர் பேச ஆரம்பித்தார். " நண்பர்களே, நமது நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது என்னிடம் 500 கோடி ரூபாய் உள்ளது ஆனால் அந்த பணத்தை தொடமாட்டேன். இந்த நஷ்டம் எப்படி ஏற்பட்டது ? எதனால் ஏதற்காக ஏற்பட்டது ? என்று ஆராய்ந்து அதை களைந்து நமது நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள் " என்று கேட்டுக் கொண்டார்.

பின்னர் வேளைகள் வேகமாக நடந்தன. தவறுகள் கண்டுப் பிடிக்கபட்டு களையப்பட்டன. மிக சரியாக அனைத்து ஊழியர்களையும் ஓத்துழைக்க வைத்தார். அவருடைய பேச்சு மூச்ச செயல் சிந்தனை தூக்கம் அனைத்து அவருடைய தொழிலை பற்றியே இருந்தது.

மிக சரியா ஒரு வருடம் கழிந்தது. கணக்குகள் அலசப்பட்டன. மிக சரியா 550 கோடி ரூபாய்கள் லாபம் ஈட்டி இருந்தது இவருடைய நிறுவனம். அடுத்த நாள் விடிய காலை அந்த செல்வேந்த கொடுத்த 500 கோடிக்கான செக்கை எடுத்துக் கொண்டு அந்த பூங்காவிற்கு விரைந்தார். சென்ற வருடம் அமர்ந்த அதே சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தார். காலை நெரம் ஆதலால் பனி மூட்டத்துடன் காணப்பட்டது. சற்று நேரம் கழித்து தூரத்தில் அந்த செல்வேந்தரும் அவருக்கு அருகில் அவரை கைகளால் பிடித்துக் கொண்டு ஒரு பெண்மணியும் வந்தது பனி மூட்டத்தின் ஊடே தெரிந்தது. சில விநாடிகள் கழித்து பார்த்தால் அந்த பெண்மணி மட்டும் வருகிறார் அந்த செல்வேந்தரை காணவில்லை.

இவர் சென்று அந்த பெண்மணியிடம் " எங்கே அம்மா உங்கள் கூட வந்தவர் ? " என்றார்

அதற்கு அந்த பெண்மணி பதட்டத்துடன் " உங்களுக்கு அவர் ஏதாவது தொந்தரவு கொடுத்து விட்டாரா? " என்றார்

இவர் " இல்லை அம்மா, ஏன் கேட்கிறீர்கள் ?" என்றார்.

அந்த பெண்மணி " இல்லை அய்யா அவர் ஒரு பைத்தியம் அதாவது மனநிலை சரி இல்லாதவர், செக்கு தருகிறேன் என்று சொல்லி இங்கு இருப்பவர்களிடம் தனது பழைய செக்கை கிழித்து கையேழுத்திட்டு கொடுத்து விடுவார் " என்றார்.

ஒரு நிமிடம் அந்த நிறுவன தலைவருக்கு பேசமுடியவில்லை. அப்போ நம்மால் முடியும் என்று நினைத்தால் நிச்சயம் முடியும். அதுவே நம்மை காப்பாற்றி இருக்கிறது என்று நினைத்தார்.

- இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்வென்றால் எந்த ஒரு விசயமும் நம்மால் முடியும் என்று முதலில் நம் நம்பவேண்டும் அப்போதுதான் நாம் நமது வாழ்வில் முன்னேற முடியும்.

" வாழ்வில் நீ முன்னேறு - நாளை நீ வரலாறு. " என்ற கூற்று நிச்சயம் ஒருநாள் உண்மையாகும். (ரசித்தது)

Tuesday, August 27, 2013

கோயிலுக்கு ஏன் செல்ல வேண்டும்?

கோயிலுக்கு ஏன் செல்ல வேண்டும்?



பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.

கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.

இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.

நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.

இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.

அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.

இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.

அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.

இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.

இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.

இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.

கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.

கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.

நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.

அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.

கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.

அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.

அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.

இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.

சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி.

கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி

Saturday, August 17, 2013

தொகுத்தவை... ரசித்தமைக்கு நன்றி..!

உங்களுக்கு அந்த விருப்பம் இருக்கிறதா..?

200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 1000 ரூபாய் நோட்டைக் காட்டி ”யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.

கூடியிருந்த அனைவரும் தனக்குப் பிடிக்குமென கையைத் தூக்கினர்.

பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 1000 ரூபாயைத் தருகிறேன். ஆனால் அதற்கு முன்” எனச் சொல்லி அந்த 1000 ரூபாயைக் கசக்கிச் சுருட்டினார். பிறகு அதைச் சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள். அனைவரும் கையைத் தூக்கினர்.

அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டைக் காட்டி “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார். அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.

அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 1000 ரூபாய்தாள் பல முறை கசங்கியும் மிதிப்பட்டும் அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப்படும் போதும், தோல்விகளைச் சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம். நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்.

இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கும். அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கை என்ற பயிர்க்கு தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொள்ளிகளும். ஆகையால், தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்கள். 
***************************** 
 
***************************** 
 
***************************** 
 
தொகுத்தவை... ரசித்தமைக்கு நன்றி..!

Tuesday, April 23, 2013

மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்....

மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்....

மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார். பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை. சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர்.

ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து, "என்னுடைய சாவு நெருங்கி விட்டது. எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன. அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார்.

அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர்.

முதல் விருப்பமாக, "என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்."

இரண்டாவது, 'என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்."

மூன்றாவதாக, "என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்."

வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன. என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள்.

அதில் ஒருவன் தைரியமாக முன்வந்து, "அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம். ஆனால், இதற்கான காரணத்தை தாங்கள் விளக்க வேண்டும்" என்று கேட்க, அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.

1. என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள். மருத்துவர்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது. மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது.

2. வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை உன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது. அது சவக்குழி வரை மட்டும்தான்! மனிதர்கள் வீணாக அதன் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக!

3.உலகையே வென்றவன் சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக....

Sunday, January 6, 2013

இந்தியா-சீனா என்ன வித்தியாசம்?

''இந்தியாவுக்கும் சீனாவுக்கும் என்ன வித்தியாசம்?'' - இப்படி ஒரு கேள்வியை அமெரிக்க பிஸினஸ்மேனிடம் கேட்டார்கள் பத்திரிகையாளர்கள். அவர் என்ன சொன்னார் தெரியுமா? ''சீனாவில் ஒரு திட்டத்தைப் போட்டால் அதை அதிகபட்சம் 24 மாதங்களில் முடித்துவிடுவார்கள். ஆனால், இந்தியாவில் 24 ஆண்டுகள் கழிந்தால்கூட அந்தத் திட்டம் நிறைவுபெறுமா என்பது சந்தேகமே'' என்றாராம். அரசாங்கம் போடுகிற திட்டங்கள் அனைத்தும் குறித்த காலத்தில் முடிகிறதா என்றால் இல்லவே இல்லை என்பது நாம் நிதர்சனமாக காணும் காட்சி. இதனால் மக்கள் பணம் பல ஆயிரம் கோடி ரூபாய் அநியாயத்துக்கு வீணாகிறது. இன்றைக்கு தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே நிறைவேறாமல் கிடக்கும் அல்லது ஆமை வேகத்தில் நடக்கும் சில திட்டங்களைப் பற்றி இனி பார்ப்போம்.


நோக்கம்: தொழில் துறை வளர்ச்சியில் பின்தங்கி இருக்கும் நெல்லையில் புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் அங்குள்ள இளைஞர்கள் வெளியூர்களுக்கு இடம் பெயர்வதைத் தடுக்கவும், சமூகம் சார்ந்த பிரச்னைகளுக்கு ஒரு தீர்வு காணவும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. பின்னர் இது சிறப்புப் பொருளாதார மண்டலமாக மாற்றப்பட்டது.

என்ன நன்மை: தமிழகத்தின் தொழில் துறை வளர்ச்சிக்கு மிகப் பெரிய முன்னேற்றத்தை இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலம் தந்திருக்கும். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருக்கும்.

என்ன செய்தார்கள்: 1998-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்துக்காக மொத்தம் 1,700 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இதில் 700 ஏக்கர் நிலம் உள்கட்டமைப்புகளுக்காக ஒதுக்கப்பட்டது.

ஏன் தாமதம்: இந்த பொருளாதார மண்டலத்தில் தொழில் தொடங்க சர்வதேச நிறுவனங்கள் தயங்குகின்றன. உள்கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லை. மின்சாரம் முக்கியமான பிரச்னையாக உள்ளது. முதலீட்டைக்கொண்டு வர எந்த முயற்சியும் அரசு தரப்பில் எடுக்கப்படவில்லை.

தற்போதைய நிலை: இத்திட்டம் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. தற்போது நான்கு நிறுவனங்களே இங்குள்ளன. உள்கட்டமைப்பு வசதி இல்லாமல் எப்படி வருவது என்பது நிறுவனங் களின் கேள்வியாக இருக்கிறது.

இழப்பு: இத்திட்டம் வந்திருந் தால் தூத்துக்குடி, மதுரை விமான நிலையம் விரிவுபடுத்தப்பட்டு இருக்கும். 20,000 கோடி ரூபாய் முதலீடு, 10,000 கோடி ரூபாய் வர்த்தகம் நடந்திருக்கும்!



நோக்கம்: திருச்சியைச் சுற்றி 15 பொறியியல் கல்லூரிகள் இருப்பதால், இங்கு தொழில்நுட்ப பூங்கா அமைத்து, இந்தப் பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவது.

என்ன நன்மை: ஐ.டி. என்றாலே சென்னை என்கிற நிலை மாறி, திருச்சி போன்ற சிறிய நகரங்களிலும் ஐ.டி. படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும். சுமார் 20,000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு, 40,000 பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும்.

என்ன செய்தார்கள்: திருச்சியை அடுத்த நாவல்பட்டு கிராமத்தில் 147 ஏக்கரில் 60 கோடி முதலீட்டில் தொழில்நுட்ப பூங்கா தொடங்க 2008-ல் திட்டம் தீட்டப் பட்டது. கட்டடங்கள் கட்டும் வேலையும் முடிந்துவிட்டது.

ஏன் தாமதம்: இப்பூங்காவில் ஐ.டி. நிறுவனங்கள் வராமல்போக காரணம், அடிப்படை கட்டமைப்பு எதையும் அரசு பெரிய அளவில் செய்து தராததே. குறிப்பாக, திருச்சியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் 100 அடி அகல சாலை மிக மோசமான நிலையில் இருப்பது ஒரு காரணம்..!

இழப்பு: இத்திட்டம் நிறைவேறி இருந்தால், திருச்சி நகரம் உலக ஐ.டி. வரைபடத்தில் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். பல ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்து, திருச்சி நகரம் குட்டி பெங்களூருவாக மாறி இருக்கும்.



நோக்கம்: இந்தியாவின் கிழக்குக் கடற்கரை யிலிருந்து மேற்கு கடற்கரைக்கு கப்பல் மூலம் செல்லவேண்டுமெனில் இலங்கையைச் சுற்றியே செல்லவேண்டும். இதைத் தவிர்க்க, ராமேஸ்வரம் கடல் வழியாகப் பாதை அமைத்து தூத்துக்குடி துறைமுகத்தை அடைவது. இத்திட்ட மதிப்பு சுமார் ரூ.2,500 கோடி!

என்ன நன்மை: இலங்கையைச் சுற்றிச் செல்வதால் ஆகும் பல மணி நேரம் மிச்சமாகும்; இதனால் எரிபொருள் செலவு குறையும். மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள் நல்ல வளர்ச்சி கண்டிருக்கும். தூத்துக்குடி துறைமுகம் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வர்த்தக வருவாய் அதிகரித்திருக்கும்.

என்ன செய்தார்கள்: இத்திட்டத்திற்கான இறுதி அறிக்கையைத் தயாரிக்க 2000-2001-ல் 4.8 கோடி ரூபாயை ஒதுக்கியது மத்தியில் இருந்த பா.ஜ.க. அரசாங்கம். 2005-ல் பிரதமர் மன்மோகன் சிங் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

ஏன் தாமதம்: பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்தபோது, இத்திட்டத்தால் அந்தப் பகுதியில் சுற்றுச் சூழல் பிரச்னை ஏற்படும் எனவும் பாரம்பரியமிக்க சின்னம் அழிக்கப்படும் எனவும் சர்ச்சை எழுந்ததால் சேது சமுத்திர கால்வாய் தோண்டும் பணி அப்படியே முடங்கிக் கிடக்கிறது.

தற்போதைய நிலை: பாக் ஜலசந்தியில் சில கிலோ மீட்டர் தூரத்தில் கால்வாய் தோண்டும் பணி நடந்தது. இப்போது அந்தக் கால்வாய் ஏறக்குறைய தூர்ந்துபோயிருக்கும்.

இழப்பு: இத்திட்டம் நிறைவேறி யிருந்தால் கொழும்பு துறைமுகத்தில் நடந்துவரும் சரக்குப் போக்குவரத்தில் 40 சதவிகிதம் வரை தூத்துக்குடி துறைமுகத்தில் நடந்திருக்கும். 424 கடல் மைல் தொலைவு (780 கி.மீ) சுற்றுவதால் எரிபொருள் செலவும் வீண். மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களின் வளர்ச்சி தடைபட்டுள்ளது.



நோக்கம்: தமிழகத்திற்கு சராசரி மின் தேவை 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம். உற்பத்தி ஆவதோ 8,500 மெகாவாட். மேலதிகமாகத் தேவைப்படும் 3,500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதே பல்வேறு மின் திட்டங்களின் நோக்கம்.

என்ன நன்மை: பல லட்சம் பேருக்கு வேலை கிடைத்து, பல ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் வந்திருக்கும்!

என்ன செய்தார்கள்: பல்வேறு திட்டங்களை அறிவித்து, சிலவற்றுக்கு இடம் ஒதுக்கியும், இன்னும் சிலவற்றுக்கு இடம் ஒதுக்கப்படாமலும் இருக்கிறது.

ஏன் தாமதம்: மாநில அரசிடம் போதிய அளவு நிதி வசதி இல்லாதது முக்கியமான காரணம். அரசியல் இன்னொரு காரணம்.

தற்போதைய நிலை: மேட்டூர் அனல் மின் நிலையம் 600 மெகாவாட், வடசென்னை அனல் மின் நிலைய இணைப்பு இரண்டாம் கட்டம் நிலை-1: 600 மெகாவாட், வள்ளூர் அனல் மின் நிலையம் 500 மெகாவாட் ஜ் 3 யூனிட்கள் (இதில் ஒரு யூனிட் மட்டும் தற்போது செயல்பட ஆரம்பித்துள்ளது!), தூத்துக்குடி அனல் மின் நிலையம் 500 மெகாவாட் ஜ் 2 யூனிட்கள், உடன்குடி அனல் மின் நிலையம் 2 ஜ் 800 மெகாவாட், உடன்குடி அனல் மின் நிலைய விரிவாக்கம் 1 ஜ் 800 மெகாவாட், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை உப்பூர் அனல் மின் திட்டம் 2 ஜ் 800 மெகாவாட், எண்ணூர் மாற்று அனல் மின் திட்டம் 660 மெகாவாட், காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அனல் மின் நிலையம் 5 ஜ் 800 மெகாவாட், எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் திட்டம் 2 ஜ் 800 மெகாவாட், வடசென்னை அனல் மின் திட்டம் நிலை - 3, 1 ஜ் 800 மெகாவாட் ஆகிய மின் திட்டங்களில் பல ஆமை வேகத்தில் வளர்கிறது.

இழப்பு: தொழில் துறைக்கு தேவையான மின்சாரம் கிடைக்காததால் பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் இழப்பு ஏற்பட்டது. இதனால் பல லட்சம் வேலை கிடைக்காமல் போயிருக்கிறது.


நோக்கம்: ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களை ஏற்றுமதி செய்ய, சென்னை துறைமுகத்திற்கு விரைந்து கொண்டுவரவே இந்தப் பறக்கும் சாலைத் திட்டம்.

என்ன நன்மை: தற்போதைய நிலையில் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து துறைமுகத்திற்கு 30 கி.மீ. செல்ல வேண்டும். இந்தத் தூரத்தைக் கடக்க இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் ஆகும். இந்தப் பாலம் வந்தால் 19 கி.மீ. தூரத்தை அரை மணி நேரத்தில் கடந்துவிட முடியும்.

என்ன செய்தார்கள்: கடந்த 2009-ல் பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்த திட்டம் இது. இதற்கென 2,148 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தை நிறைவேற்றும் சோமா நிறுவனம் 269 கோடி ரூபாய் போட, 269 கோடி ரூபாயை சோமா நிறுவனத்துக்கு மானியமாக அளித்தது அரசாங்கம். மீதமுள்ள 1,610 கோடி ரூபாய் வங்கிக் கடன் மூலம் திரட்டப்பட்டது. இத்திட்டம் கொண்டுவர கூவம் கரையில் இருந்த 1.20 லட்சம் குடியிருப்புகளை அகற்ற 345 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.

ஏன் தாமதம்: பாலம் கட்டுவதற்காகத் தரப்பட்ட பிளான்படி கட்டப்படவில்லை என மாநில அரசாங்கம் அறிவிக்க, திட்டம் அப்படியே கிடக்கிறது.

தற்போதைய நிலை: 30 சதவிகித வேலைகள் முடிக்கப்பட்டு உள்ளன. இதற்கு செலவான தொகை 900 கோடி ரூபாய்.

இழப்பு: இத்திட்டம் முழுமைப் பெற்றிருந்தால் 2013-ம் ஆண்டில் 86 கோடியும், 2014-ம் ஆண்டில் 252 கோடியும் வருமானம் கிடைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.