நொடியில் ஏற்படும் மாற்றம்...
கடந்துவந்த வெறுப்பை
மறக்கச்செய்கிறது...!
நொடியில் ஏற்படும்
அன்பு
கோபத்தை
மறக்கச்செய்கிறது...!
நொடியில் ஏற்படும்
நட்புணர்வு
பகைமையை
மறக்கச்செய்கிறது...!
நொடியில் ஏற்படும் மரியாதை
அலட்சியத்தை மறக்கச்செய்கிறது..!!
நொடியில் ஏற்படும் மரணம்
அஞ்ஞானத்தை மறக்கச்செய்கிறது..!!
நொடியில் ஏற்படும் ஞானம்
பொறாமையை மறக்கச் செய்கிறது...!!
நொடியில் ஏற்படும் மாற்றங்களின்
நொடியையறியும்
நொடியின் நொடியெதுவோ..??!!