Tuesday, October 18, 2011
Friday, October 14, 2011
அன்பினை வெளிப்படுத்துவோம் !!!
அன்புள்ளம் கொண்ட நல்ல உள்ளங்களே -
நாம் அனைவரும் இறைவனின் அன்புக் குழந்தைகள்,நமக்கெல்லாம் தாய், தந்தை, உறவினர்கள், நண்பர்கள் என நம்முடைய நலனை கருத்தில் கொள்ளும் ஒரு ஆதரவு குழுவானது உண்டு, ஆனால் சில எதிர்பாராத சூழ்நிலைகளாலும், சந்தர்ப்பங்களாலும் எந்தவித உதவியும், ஆதரவும் கிடைக்காமல் அனாதைகளாக, உடல் ஊனமுற்றவர்களாக, முதியோர்களாக,நோயாளிகளாக, மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக பலர் நம்நாடு முழுவதும் பரவிக் காணப்படுகிறார்கள்.
ஒரு வேளை உண்ண உணவு கிடைக்காமலும், உடுத்த உடை கிடைக்காமலும் மருத்துவ உதவி கிடைக்காமலும்அவதிப்படுவோர் ஏராளம் பேர்கள் இங்கு உண்டு, அவர்களை பொறுத்த வரையில் அவர்கள் சந்தோசமாக இருக்கும் ஒருநாள்,வயிறார உண்ணும் ஒரு நாள் உண்டெனில், அந்நாளே அவர்களுக்கு தீபாவளி பண்டிகையாக இருக்கும்.
நாம் அனைவரும் வரும் தீபாவளி பண்டிகையினை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ள இருக்கும் இத்தருணத்தில்,அத்தகையவர்களையும் கருத்தில் கொண்டு நாம் வாங்கும் போனஸ் தொகையிலோ சம்பளத் தொகையிலோ நம்மால் இயன்றதைக் கொடுப்பதன் மூலம், உதவி செய்வதன் மூலம்அவர்களையும் பண்டிகை கால சந்தோசத்தில் பங்கு பெறச் செய்யலாமே?
உங்களின் ஒவ்வொருவரின் சிறு உதவியாலும், ஒருவரின் ஒருவேளை பசியினை தீர்க்க முடியும்.
இது போன்றவர்களுக்கான ஆதரவற்றவர்களுக்கான இல்லங்கள், கருணை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் போன்றவை அனைத்து ஊர்களிலும் உள்ளன.
நம்மில் பலர் கிடைக்கப்போகும் போனஸ் தொகையில் தங்களது நெடுநாளைய கனவுகள், லட்சியங்களை அடைய திட்டங்களை தீட்டி இருக்கலாம், அவ்வாறானவர்கள், உங்களது நண்பர்களுடனோ அல்லது உங்களுடன் அலுவலகத்தில் பணிபுரியும் சக தோழர்களுடனோ இணைந்து செயல்படலாம், இதனால் கிடைக்கும் உதவித் தொகையும் அதிகமாக இருக்கும்.
கடவுள் கருணையே வடிவானவர் என்கிறார்கள், உங்களின் கருணையை வெளிப்படுத்துவதன் மூலம் நீங்களும் கடவுளாகலாம்.
சிந்தியுங்கள் செயல்படுங்கள், நன்றி !!!

GoodLightscraps.com
அனைவருக்கும் என்னுடைய இனிய தீபத்திருநாள் தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!
Thursday, October 13, 2011
நேர்மறையும் எதிர்மறையும்
நேர்மறையும் எதிர்மறையும்
எதாவது புதிய விஷயம் முயற்சி செய்யலாம் என்று என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா?. புதிய விஷயம் என்பது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். புதிதாக தொழில் துவங்க ஆசைப்படலாம். உதாரணத்திற்கு குதிரை ஏற்றம், கராத்தே, இசைக்கருவி வாசித்தல் போன்ற எதையாவது ஒன்றை டைம் பாஸ்க்காகவோ அல்லது மனதிருப்திக்கோ கற்றுக்கொள்ள ஆசைப்படலாம்.
இவ்வாறு ஒருவர் யோசிப்பதே பெரிய விஷயம். அப்படி வந்த யோசனையில் எதாவதொன்றை செய்யப்போவதாக நண்பர்களிடமோ அல்லது தெரிந்தவர்களிடமோ கூறிப்பாருங்கள். ஏறக்குறைய எல்லோருமே சொல்லும் முதல் வார்த்தை, இதில் எதாவதொன்றாகத்தான் இருக்கும்.
"இதெல்லாம் ஒத்து வராது",
"இது ரொம்ப கஷ்டம்",
"உன்னால் எல்லாம் இது முடியுமாடா".
என்ன காரணமோ, எந்த ஒரு புதிய விஷயம் பற்றிக் கேட்டவுடன், அதற்கு எதிர்மறையான எண்ணங்களும் வார்த்தைகளும் தான் முதலில் வருகிறது.
நான் இருந்த இடத்தில் 40 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டி ஒன்று நடந்தது, அதில் முதல் பரிசு 10 லட்ச ரூபாய் என கேள்விப்பட்டு, நானும் அடுத்தவருடம் நடக்கும் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு வாங்க ஆசைப்படுவதை சொன்னேன். அதுக்கு வந்த பதிலப் பாருங்க.
"உனக்குத் தெரியுமா, இந்தப் போட்டியில மட்டும் ஒவ்வொரு வருஷம் 45,000 பேர் கலந்துக்கிறாங்க. அதுல நிறைய பேரு இதையே தொழிலா வைச்சு இருக்கறவங்க. அவங்க கூட எல்லாம் உன்னால போட்டி போடமுடியாது."
"சரிப்பா, நானும் இப்போ இருந்து ஒரு வருஷம் பிராக்டீஸ் பண்ணப்போறேன், அப்ப என்னால ஜெயிக்க முடியுமல்ல"
"நீ வருஷம் முழுக்க பிராக்டீஸ் செய்தாலும், உன்னைமாதிரியே எத்தனையோபேர் வருஷம் முழுக்க பிராக்டீஸ் செய்வாங்க. அவங்க கூட எல்லாம் உன்னால போட்டி போடமுடியாது. ஓவ்வொருத்தங்க இதுக்குனே தனியா கோச் எல்லாம் வைச்சிருப்பாங்க. நீ என்ன பண்ணமுடியும் அதுனால இதெல்லாம் ஒத்து வராது. பேசாம இப்ப இருக்கற வேலைய ஒழுங்க செய்தா அதுவே போதும்"
இந்த விவாதமே இப்படி நடந்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.
"அப்படியா, நல்ல விஷயம் தான் சொல்லி இருக்க. உனக்கு ஒன்னு தெரியுமா, இந்தப் போட்டியில மட்டும் ஒவ்வொரு வருஷம் 45,000 பேர் கலந்துக்கிறாங்க. அதுல நிறைய பேரு இதையே தொழிலா வைச்சு இருக்கறவங்க. அவங்க கூட எல்லாம் நீ போட்டி போடணும்னா நெறைய பிராக்டீஸ் செய்ய வேண்டியிருக்கும். அதனால இப்போ இருந்து பிராக்டீஸ் ஆரம்பிச்சிடு. ஒரு வருஷம் முழுக்க பிராக்டீஸ் செய்தால் நீ ஜெயிக்கறதுக்கு நல்ல வாய்ப்பு இருக்கும். அதேசமயம் நீ வருஷம் முழுக்க பிராக்டீஸ் செய்தாலும், உன்னைமாதிரியே எத்தனையோபேர் வருஷம் முழுக்க பிராக்டீஸ் செய்வாங்க. அதையும் ஞாபகம் வைச்சுக்கோ. சிலபேர் இதுக்குனே தனியா கோச் எல்லாம் வைச்சிருப்பாங்க. நீயும் ஒரு நல்ல கோச் கிட்ட சேரமுடியுமான்னு பாரு. 40 கிலோமீட்டர் ஓடறதுக்கு நல்ல ஆரோக்கியமா இருக்கணும். இப்ப இருந்தே அதையும் பார்த்துக்கோ. சரியா திட்டம் போட்டு, ஒழுக்கமா அதை பாலோஃ செய்தால் கண்டிப்பா சக்ஸஸ் தான்"
இரண்டு உரையாடலிலுமே ஒரே விஷயம் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் பார்க்கப்பட்டது.
நம்முடைய வளர்ப்பு முறையினாலோ, கல்வி முறையினாலோ அல்லது சமூக அமைப்பினாலோ, சிறுவயதிலிருந்தே எதிர்மறையாக பார்க்கமட்டுமே கற்றுக்கொண்டுள்ளோம் என தோன்றுகிறது. நீங்க என்ன சொல்றீங்க.
Wednesday, October 12, 2011
மின்னஞ்சலில் வந்த ஓர் அருமையான விவாதம்..கடவுள் நல்லவரா?
மின்னஞ்சலில் வந்த ஓர் அருமையான விவாதம்..கடவுள் நல்லவரா?
நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளின் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிப் பேசிய அவர், ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார்.

நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளின் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிப் பேசிய அவர், ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார்.
"நீ கடவுளை நம்புவதாகச் சொல்கிறாய். இல்லையா?"
"நிச்சயமாக ஐயா.."
"கடவுள் நல்லவரா?"
"ஆம் ஐயா."
"கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?"
"ஆம்."
"என்னுடைய சகோதரர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். தன்னைக் காப்பாற்ற கடவுளிடம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நாம் எல்லோருமே நோய்வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பின் எப்படிச் சொல்கிறாய் கடவுள் நல்லவர் என்று?"
(மாணவர் அமைதியாய் இருக்கிறார்)
"உன்னால் பதில் சொல்ல முடியவில்லை. இல்லையா? சரி.. நாம் மீண்டும் ஆரம்பிப்போம். கடவுள் நல்லவரா?"
"ஆம் ஐயா.."
"சாத்தான் நல்லவரா?"
"இல்லை."
"எல்லாமே கடவுள் படைப்புத்தான் என்றால் சாத்தான் எங்கிருந்து வந்தார்?"
"கடவுளிடமிருந்துதான்."
"சரி. இந்த உலகத்தில் கெட்டவை இருக்கின்றனவா?"
"ஆம்."
"அப்படியென்றால் அவற்றை உருவாக்கியது யார்?"
(மாணவர் பதில் சொல்லவில்லை)
"இவ்வுலகத்தில் பசி இருக்கிறது, பஞ்சம் இருக்கிறது, மூட நம்பிக்கைகள் இருக்கின்றன. இவையெல்லாம் எங்கேயிருந்து வந்தன?"
......
"அறிவியல் சொல்கிறது, விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு ஐம்புலன்கள் இருக்கின்றனவென. இப்போது சொல். கடவுளைக் கண்ணால் கண்டிருக்கிறாயா? அவர் பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறாயா? அல்லது வேறு எப்படித்தான் அவரது இருப்பை உணர்ந்திருக்கிறாய்?"
.......
"ஆனாலும் நீ கடவுளை நம்புகிறாய்?"
"ஆம் ஐயா.."
"நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுடன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது 'கடவுள் இல்லை' என்று. இதற்கு நீ என்ன பதில் சொல்லப் போகிறாய்?"
"ஒன்றுமேயில்லை. எனக்கு நம்பிக்கை மட்டுமே உள்ளது."
"ஹ்ம்ம்.. நம்பிக்கை.. அதுதான் இப்போது பிரச்சினையே.." ஆசிரியர் பெருமூச்செறிகிறார்.
(இப்போது மாணவர் தன் வாதத்தை ஆரம்பிக்கிறார்)
"ஐயா.. வெப்பம் அல்லது சூடு என்ற ஒன்று உள்ளதா?"
"நிச்சயமாக உள்ளது."
"அதேபோல் குளிர் என்ற ஒன்றும் உள்ளதா?"
"நிச்சயமாக."
"இல்லை ஐயா. நிச்சயமாக குளிர் என்ற ஒன்று இல்லை."
(வகுப்பறை நிசப்தத்தில் ஆழ்கிறது.)
"ஐயா.. வெப்பத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நிலை வெப்பத்திற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. மனித உடல் தாங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையும், தண்ணீர் ஆவியாவதற்கு ஒரு வெப்பநிலையும், இரும்பு குழம்பாவதற்கு ஒரு வெப்பநிலையும் இருக்கின்றன. ஆனால் இதுபோல் குளிரை அளக்க முடியுமா? வெப்பம் என்பது ஓர் ஆற்றல். குளிர் என்பது வெப்பத்திற்கு எதிர்பதம் அல்ல. வெப்பம் எனும் ஆற்றலின் இல்லாமையே குளிர் என்பது. (Absence of heat is the cold). "வெப்பம் இல்லை" என்பதைத்தான் குளிர் என்று சொல்கிறோம். பூஜ்யம் டிகிரியும் குளிர்தான். பூஜ்யத்திற்குக் கீழே -240 டிகிரியும் குளிர்தான். இரண்டிற்கும் வித்தியாசம் கிடையாது."
(குண்டூசி விழும் சப்தம் கூட கேட்குமளவிற்கு அமைதியாயிருக்கிறது வகுப்பறை)
"சரி.. இருட்டென்றால் என்னவென்று சொல்லுங்கள் ஐயா. அப்படி ஒன்று உண்மையிலேயே இருக்கிறதா?"
"ஆமாம் தம்பி. இரவில் இருட்டாகத்தானே இருக்கிறது."
"நீங்கள் மறுபடியும் தவறாகக் கூறுகிறீர்கள் ஐயா. இருட்டு என்பதே ஏதோ ஒரு இருப்பின் இல்லாமைதான். நீங்கள் வெளிச்சத்தை அளக்க முடியும். குறைந்த ஒளி, நிறைந்த ஒளி, கண்ணைக் கூசச் செய்யும் ஒளி எனப் பற்பல வகைகளில் வெளிச்சத்தைப் பிரிக்கமுடியும்; அளக்கவும் முடியும். ஆனால் ஒளி என்பதே இல்லாவிட்டால் அதற்குப் பெயர்தான் இருட்டு. அதை அளக்க முடியாது. இல்லையா?"
"சரி தம்பி.. நீ என்னதான் கூற வருகிறாய்?"
"ஐயா.. நான் கூறுகிறேன், கடவுளைப் பற்றிய உங்கள் கருத்து பிழையானது."
"பிழை?? விளக்கிக் கூற முடியுமா?"
"ஐயா, நீங்கள் எதிலுமே இரட்டை நிலைப்பாடு கொண்டிருக்கிறீர்கள். ஒன்று இருந்தால் அதற்கு எதிரிடையான ஒன்றும் இருக்கிறது என்பது உங்கள் வாதம். உதாரணத்திற்கு நல்ல கடவுள், கெட்ட கடவுள். இருட்டு, வெளிச்சம். வெப்பம், குளிர். நீங்கள் கடவுள் என்பவருக்கு ஒரு முடிவு, அல்லது எல்லை என்ற ஒன்று உண்டு என்பதாகக் கருதுகிறீர்கள். அதை நம்மால் அளக்க முடியவேண்டும் எனவும் வாதிடுகிறீர்கள்.
அறிவியல் மூலம் எண்ணங்கள் எப்படி உருவாகின்றன என்பதை உங்களால் விளக்கமுடியாது. எண்ணங்கள் உருவாவதே உடலினுள் கலக்கும் மின் மற்றும் காந்தத்தூண்டல்களினால்தான். மின்சாரத்தை அளக்கமுடிந்த உங்களால், காந்தத்தன்மையை விவரிக்க முடிந்த உங்களால் எண்ணங்களின் தோற்றத்தை அளக்க முடியவில்லை.
இறப்பு என்பதை வாழ்வதின் எதிர்ப்பதமாகக் கருதுகிறீர்கள். உண்மையில் "வாழ்வு இனி இல்லை" என்ற தன்மையே இறப்பு என்பதை அறிகிறீர்கள் இல்லை.
"சரி இப்பொழுது சொல்லுங்கள் ஐயா.. குரங்கிலிருந்து மனிதன் உருவானான் என்கிறீர்களா?"
"”இயற்கையான பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் பேசுவோமானால்.. ஆம்.. அது உண்மை. குரங்கிலிருந்து மனிதன் உருவானான்." பேராசிரியர் பதிலுரைத்தார்.
"உங்கள் கண்களால் மனிதப் பரிமாண வளர்ச்சியைக் கண்டிருக்கிறீர்களா?"
(பேராசிரியர் தன் தலையை 'இல்லை' என அசைத்தவாறே, புன்முறுவல் பூக்கலானார், விவாதம் செல்லும் போக்கை அறிந்தவராய்.)
"அப்படியென்றால், யாருமே மனிதப் பரிமாண வளர்ச்சியை தத்தமது கண்களால் கண்டதில்லை. எல்லாமே 'ஒருவகையான' அனுமானம்தான். இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அது உங்கள் கருத்து, குரங்கிலிருந்து மனிதன் உருவானான் என்பது. அதை நிரூபிப்பதற்கு நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் எவையுமே, எவரும் கண்டதில்லை, அனுபவம் செய்ததில்லை என்பதே உண்மை. உங்களுக்குச் சரியெனப் படும் ஒன்றை எங்களுக்கு போதிக்கிறீர்கள், இல்லையா?. எனவே, நீங்கள் ஒரு விஞ்ஞானியா அல்லது போதகரா?"
(மாணவர்கள் சீட்டின் நுனிக்கே வந்து விடுகிறார்கள்)
"இங்கே யாராவது நம் பேராசிரியரின் மூளையைப் பார்த்திருக்கிறீர்களா?"
(வகுப்பறை 'கொல்'லெனச் சிரிப்பொலியால் அதிர்ந்தது)
"யாராவது பேராசிரியரின் மூளையைத் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அது இருக்கிறதென உணர்ந்திருக்கிறீர்களா? அதன் வாசனையை நுகர்ந்திருக்கிறீர்களா? உங்கள் ஐம்புலன்களும் என்ன சொல்கின்றன?"
"அப்படியென்றால் நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுடன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது, உங்களுக்கு மூளை இல்லை என்று."
"மூளையே இல்லாத நீங்கள் நடத்தும் பாடங்களை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ஐயா?"
(மாணவரின் சரமாரிக் கேள்விகளால், வகுப்பறையில் அமைதி நிலவுகிறது. ஆசிரியரின் முகமோ வெளிறிப்போனது!)
"நீ எனக்கு மூளை இருக்கிறதென நம்பித்தான் ஆகவேண்டும் தம்பி!"
"அது தான் ஐயா.. இவ்வளவு நேரம் நான் சொல்ல வந்தது. மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஊடகத்தின் பெயர்தான் நம்பிக்கை என்பது. இது தான் உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கிக் கொண்டிருப்பது. நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை."
இவ்வாறாக, விவாதம் நிறைவுற்றது.
இது ஒரு உண்மைச் சம்பவம்.
இறுதிவரைப் பின்வாங்காமல் விவாதித்த அந்த மாணவர்?
வேறு யாருமல்ல.
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்..

Monday, October 10, 2011
உயிர் உடைத்த புகைப்படம்...
உயிர் உடைத்த புகைப்படம்...
ஒரு வார இதழில் படித்தது..மனிதர்களில் எத்தனை நிறம்..மனதை பாதித்தது..எழுதனும்போல் இருந்தது..உங்களுக்காக..
புலிட்சர் விருதின் முலம் உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த
கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்?
கெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின் அழகிய ஊரான
கெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின் அழகிய ஊரான
ஜோஹன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற புகைப்படக்காரர்.
எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல
புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும்
இருந்தன. இந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம்,காடு,
மலை என்று கொண்டு சென்றது.
1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப்
1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப்
பத்திரிக்கையாளர்களுடன் சூடானுக்குக் கொண்டு சென்றது.
அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக்
கொண்டு இருந்தது.
குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள் உண்ண உணவின்றி,
குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள் உண்ண உணவின்றி,
பருகநீரின்றி பசி, தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர்.
பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளைக் காமிராவில் பதிவு
பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளைக் காமிராவில் பதிவு
செய்ய கெவின் தொலைதூர கிராமங்கள் வரை சென்றார்.
இறுதியாக அவர் முயற்சி கைகூடியது. ஒரு நாள் தன் காமிராவை
இறுதியாக அவர் முயற்சி கைகூடியது. ஒரு நாள் தன் காமிராவை
தோளில் தொங்க விட்டுக் கொண்டு உள்ளத்தை உலுக்கக்
கூடிய படத்துக்கான காட்சியைத் தேடியலைந்து கொண்டிருந்தபோது
அப்படிப்பட்ட காட்சி தென்பட்டது அவரது நற்பேறு என்றுதான் கூற வேண்டும்.
பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சன் நிலையில் உள்ள ஒரு சிறுமி நடக்கக்
பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சன் நிலையில் உள்ள ஒரு சிறுமி நடக்கக்
கூட இயலாத நிலையில், எலும்புக் கூடு போன்ற தன்னுடலை
தவழ்ந்து இழுத்துக் கொண்டு மெல்ல மெல்ல ஊர்ந்து செல்வதைக் கண்டார்.
அந்தச் சிறுமி ஐக்கிய நாடுகளின் சபையின் சார்பாக அமைக்கப்பட்டு
அந்தச் சிறுமி ஐக்கிய நாடுகளின் சபையின் சார்பாக அமைக்கப்பட்டு
இருந்த உணவு வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி தவழ்ந்து
கொண்டிருந்தது உண்மையிலேயே இதயத்தைப் பிழியக் கூடியதாக இருந்தது.
தோளில் இருந்து காமிராவை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு
தோளில் இருந்து காமிராவை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு
இன்னொரு வியப்பும் காத்திருந்தது.
ஆம்; அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்கும்ப் பின்னாலேயே சிறிது
ஆம்; அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்கும்ப் பின்னாலேயே சிறிது
தொலைவில் ஒரு பிணம் தின்னிக்கழுகும் சிறுமியின் மீது
பார்வையை நிலை நிறுத்திக் கொண்டு இருந்தது.
எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர் பிரியும்; மீதியுள்ள
எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர் பிரியும்; மீதியுள்ள
அந்தத் தோலையும் அதைச் சுற்றி இருக்கும் சிறிது
மாமிசத்தையும் எப்போது சாப்பிடலாம் எனக் காத்திருந்தது
பிணம் தின்னிக்கழுகு.
கெவின் கேமரா லென்சை கண்ணுக்கு ஒத்திக் கொண்டார்;
கெவின் கேமரா லென்சை கண்ணுக்கு ஒத்திக் கொண்டார்;
சிறுமியையும் கழுகையும் ஒரு பிரேமில் அடக்கிக் கொண்டு ‘க்ளிக்’ செய்தார்.
இப்போது அவரது புகைப்படக்கருவியில் மிக அரிதினும்
இப்போது அவரது புகைப்படக்கருவியில் மிக அரிதினும்
அரிதான படம் பதிவாகி விட்டது.
இதை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில்
இதை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில்
காமிராவைத் தோளில் மாட்டிக் கொண்டு தனது வண்டியை
ஸ்டார்ட் செய்தார்; பறந்து விட்டார். இந்த அரிதான
படத்தை ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கைக்கு விற்று விட்டார்.
இந்தப் புகைப்படம் 1993 மார்ச் திங்கள் 26 ஆம் நாள் காலை
இந்தப் புகைப்படம் 1993 மார்ச் திங்கள் 26 ஆம் நாள் காலை
நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியானது. இந்தப்
படத்தைப் பார்த்ததும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பத்திரிக்கை
அலுவலகத்திற்கு தொலைப்பேசி மூலம் தொடர்புக் கொண்டனர்.
அனைவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டனர். புகைப்படத்தில் உள்ள
அனைவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டனர். புகைப்படத்தில் உள்ள
சிறுமி என்ன ஆனாள்? அவள் உயிருடன் பிழைத்தாளா அல்லது
இறந்து விட்டாளா?
இந்தக் கேள்விக்கான பதில் பத்திரிக்கையின் தொலைப் பேசி
இந்தக் கேள்விக்கான பதில் பத்திரிக்கையின் தொலைப் பேசி
ஆப்ரேட்டரிடமோ படத்தை எடுத்த கெவின் கார்ட்டர்டமோ இல்லை.
1994,மே 23 அன்று பெரும் கை தட்டல்களுக்கு இடையே கெவின் கார்ட்டர்
1994,மே 23 அன்று பெரும் கை தட்டல்களுக்கு இடையே கெவின் கார்ட்டர்
கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் பிரமாண்டமான அரங்கத்தில்
இந்த அரிதான புகைப்படத்திற்கான புலிட்சர் விருதப் பெற்றுக்கொண்டார்
இந்த விருது புகைப்படத் துறையில்
நோபல் விருதுக்கு இணையானது.
விருது பெற்ற சில நாட்களுக்குப்பின் கெவின் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.
கெவினுக்கும் அங்கு இருந்த பிணம்தின்னிக் கழுகுக்கும் என்ன வேற்றுமை?
இரண்டும் ஒரே விதமாகத்தான் செயல்பட்டுள்ளனர்.
‘குறைந்தபட்சம் புகைப்பட நிபுனர் கெவின் அந்த சிறுமிக்கு ஒரு வாய்
நோபல் விருதுக்கு இணையானது.
விருது பெற்ற சில நாட்களுக்குப்பின் கெவின் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.
கெவினுக்கும் அங்கு இருந்த பிணம்தின்னிக் கழுகுக்கும் என்ன வேற்றுமை?
இரண்டும் ஒரே விதமாகத்தான் செயல்பட்டுள்ளனர்.
‘குறைந்தபட்சம் புகைப்பட நிபுனர் கெவின் அந்த சிறுமிக்கு ஒரு வாய்
தண்ணீர் அல்லது சாண்ட்விச் தந்து உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்;
அல்லது தனது வலுவான
கைகளினால் அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்று உணவளிக்கும் அமைப்பு
அலுவலகத்தின் வாயிலிலாவது சேர்த்து இருக்கலாம்; கல்லெடுத்து
கைகளினால் அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்று உணவளிக்கும் அமைப்பு
அலுவலகத்தின் வாயிலிலாவது சேர்த்து இருக்கலாம்; கல்லெடுத்து
வீசி அந்தக் கழுகையாவது விரட்டி இருக்கலாம்; ஆனால்
இவற்றில் எதையும் செய்யாமல்
வெறும் ஒரு படத்தை எடுத்தார்; அதை அதிக விலை தந்த பத்திரிக்கைக்கு
விற்று விட்டார் என்று ஒருவர் அவர் மீது
குற்றம் சாட்டியதுதான் காரணம்.
புகைப்பட வல்லுநர் கெவின் விரைவில் ஜோஹன்ஸ் பர்க் திரும்பி விட்டர்.
வெறும் ஒரு படத்தை எடுத்தார்; அதை அதிக விலை தந்த பத்திரிக்கைக்கு
விற்று விட்டார் என்று ஒருவர் அவர் மீது
குற்றம் சாட்டியதுதான் காரணம்.
புகைப்பட வல்லுநர் கெவின் விரைவில் ஜோஹன்ஸ் பர்க் திரும்பி விட்டர்.
இரண்டு மாதங்களுக்குப் பின் கடற்கரைக்கு அருகில் அவரது
கார் நின்று கொண்டிருந்தது. அதில் அவர் பிணமாகக் கிடந்தார்.
கெவின் தற்கொலை செய்துகொண்டார்.
அவரது பிணத்திற்கு அருகில் காவல்துறைக்கு ஒரு கடிதம் கிடைத்தது.
கெவின் தற்கொலை செய்துகொண்டார்.
அவரது பிணத்திற்கு அருகில் காவல்துறைக்கு ஒரு கடிதம் கிடைத்தது.
அதில் சில வரிகளே இருந்தன. முதல் வரி I am Really, Really Sorry.
இன்று பல்வேறு செய்தி சேனல்களிலும் அடிபட்டும் விபத்துக்குள்ளாகியும்
இன்று பல்வேறு செய்தி சேனல்களிலும் அடிபட்டும் விபத்துக்குள்ளாகியும்
இரத்தச் சிதறலில் துடித்துக் கிடப்பவர்களைப் படங்களாய்ப் பார்க்கும்
போதும் அவர்களின் அபயக் குரலைக் கேட்கும் போதும் ஏனோ
கெவின் கார்ட்டர் நினைவுக்கு வருகிறார்.
.( நன்றி சமரசம் இதழ்)
Subscribe to:
Posts (Atom)