அன்புள்ளம் கொண்ட நல்ல உள்ளங்களே -
நாம் அனைவரும் இறைவனின் அன்புக் குழந்தைகள்,நமக்கெல்லாம் தாய், தந்தை, உறவினர்கள், நண்பர்கள் என நம்முடைய நலனை கருத்தில் கொள்ளும் ஒரு ஆதரவு குழுவானது உண்டு, ஆனால் சில எதிர்பாராத சூழ்நிலைகளாலும், சந்தர்ப்பங்களாலும் எந்தவித உதவியும், ஆதரவும் கிடைக்காமல் அனாதைகளாக, உடல் ஊனமுற்றவர்களாக, முதியோர்களாக,நோயாளிகளாக, மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக பலர் நம்நாடு முழுவதும் பரவிக் காணப்படுகிறார்கள்.
ஒரு வேளை உண்ண உணவு கிடைக்காமலும், உடுத்த உடை கிடைக்காமலும் மருத்துவ உதவி கிடைக்காமலும்அவதிப்படுவோர் ஏராளம் பேர்கள் இங்கு உண்டு, அவர்களை பொறுத்த வரையில் அவர்கள் சந்தோசமாக இருக்கும் ஒருநாள்,வயிறார உண்ணும் ஒரு நாள் உண்டெனில், அந்நாளே அவர்களுக்கு தீபாவளி பண்டிகையாக இருக்கும்.
நாம் அனைவரும் வரும் தீபாவளி பண்டிகையினை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ள இருக்கும் இத்தருணத்தில்,அத்தகையவர்களையும் கருத்தில் கொண்டு நாம் வாங்கும் போனஸ் தொகையிலோ சம்பளத் தொகையிலோ நம்மால் இயன்றதைக் கொடுப்பதன் மூலம், உதவி செய்வதன் மூலம்அவர்களையும் பண்டிகை கால சந்தோசத்தில் பங்கு பெறச் செய்யலாமே?
உங்களின் ஒவ்வொருவரின் சிறு உதவியாலும், ஒருவரின் ஒருவேளை பசியினை தீர்க்க முடியும்.
இது போன்றவர்களுக்கான ஆதரவற்றவர்களுக்கான இல்லங்கள், கருணை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் போன்றவை அனைத்து ஊர்களிலும் உள்ளன.
நம்மில் பலர் கிடைக்கப்போகும் போனஸ் தொகையில் தங்களது நெடுநாளைய கனவுகள், லட்சியங்களை அடைய திட்டங்களை தீட்டி இருக்கலாம், அவ்வாறானவர்கள், உங்களது நண்பர்களுடனோ அல்லது உங்களுடன் அலுவலகத்தில் பணிபுரியும் சக தோழர்களுடனோ இணைந்து செயல்படலாம், இதனால் கிடைக்கும் உதவித் தொகையும் அதிகமாக இருக்கும்.
கடவுள் கருணையே வடிவானவர் என்கிறார்கள், உங்களின் கருணையை வெளிப்படுத்துவதன் மூலம் நீங்களும் கடவுளாகலாம்.
சிந்தியுங்கள் செயல்படுங்கள், நன்றி !!!

GoodLightscraps.com
அனைவருக்கும் என்னுடைய இனிய தீபத்திருநாள் தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!