Pages

Thursday, June 28, 2018

நீங்களும் உங்கள் கையில் புரளும் பணமும்!



நீங்களும் உங்கள் கையில் புரளும் பணமும்!

*பணம்..*

1. சாவு வீட்டிற்கு சென்று வந்தால் குளிக்கிறோம்.

ஆனால் நம் சட்டைப்பையில் புழங்கும் ஒற்றை ரூபாய் நாணயம், எந்த பிணற்றின் நெற்றியிலிருந்து எடுக்கப்பட்டது என்று யாருக்கு தெரியும்?

அப்படியாக  பரவும் அத்தகைய நாணயங்கள் இன்று தவிர்க்க முடியாதவையாகி விட்டன.

2. அடுத்தபடியாக மருத்தவமனையில் புழங்கக்கூடிய ரூபாய் நோட்டுக்கள் , நாணயங்கள்.

 "காய்ச்சல் சளி தொடங்கி, சொரியாஸிஸ், மூலம், H1N1,  TB, இதர பால்வினை நோய்கள் ஆகிய அத்தனை நோய்களையும் தாங்கிவரும் நோயாளிகள் சிகிச்சைக்காக தரும் ரூபாய் நோட்டுக்கள் மருத்துவமனை மூலம் பரவுகின்றன.

இதனாலேயே சில மருத்துவர்கள் இன்று அந்தந்த சிகிச்சைக்கான  கட்டணத்தை தாங்கள் வாங்காமல் அவற்றை கம்பவுன்டர்களிடம் தர சொல்கிறார்கள்.

பின்னர் அவற்றை வங்கி சேமிப்புக்கணக்கில் கம்பவுண்டர்களையே deposit செய்யவும் சொல்கிறார்கள்.

3. சாக்கடை மற்றும் கழிவு நீர் சுத்தம் செய்யும் பணியாளர்கள் மூலம் பரவும் ரூபாய் நோட்டுக்கள்,

அதிக அளவில் பாக்டிரியாக்கள் வாழக்கூடிய அந்த நோட்டுக்கள் இன்று நம் சட்டைப்பையில்.

இயற்கையாகவே இந்த துப்புரவு பணியாளர்கள் அதிக நோய் எதிர்ப்பு சக்தி பெற்றவர்கள்.

ஆனால் அவர்கள் மூலம் பரவும் நோட்டுக்களை பயன்படுத்தும் நாம்..........?

4. இறைச்சி கடையில் பரிமாறப்படும் பணம். இறைச்சியின் ரத்தத்தில் வாழும் பாக்டிரிய்க்கள் மற்றும் தொற்று கிருமிகள் அப்படியே அந்த கடைக்காரர் மூலம் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்களில் பரவி இன்று நம் வீட்டு பீரோக்களில் பத்திரப்படுத்த படுகின்றன.

5. பேருந்து நிலைய கட்டணக் கழிப்பிடத்தில் வாங்கப்படும் அத்தனை நாணயங்களும் நேரடியாக பேருந்து நடத்துனரிடம்
( bus conductors) தினந்தோறும் நேரடியாக தரப்படுகின்றன.

அவர் தரும் நாணயங்கள் , நம் வீட்டில் புழங்கவில்லை என்று உறுதி அளிக்க எவராலும் முடியுமா?

6. பாக்டிரியாக்களை பையில் வைத்து கொண்டு திரிகிறோம்.
பரவும் அபாயத்தை மறக்கிறோம்.

மற்ற வளர்ந்த நாடுகளில் கரன்சியின் வாழ்நாள் 5 வருடம் தான்.

அதற்கு பிறகு அவற்றை எரித்து விடுவார்கள்.

ஆனால் நாம்.....................?

இந்த பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே தான் போகும்.

இதிலிருந்து தப்புவதற்கு நடுத்தர வர்க்கத்தினரால் இயலாத காரியம்.

ஆனால் நாம் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் செயல்படலாம்.

நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்களை வாயில் வைப்பதை தவிர்க்கவும்.

எச்சில் தொட்டு பணத்தை எண்ணும் பழக்கத்தை அறவே விடவும்.

அன்றாடம் கைகளை நன்கு dettol மூலம் கழுவவும்

கரன்சி மூலம் பரவும் பாக்டிரியாக்களை முற்றிலும் ஒழிக்க முயற்சி செய்வோம். பாடுபடுவோம்.

இந்த குறுந்தகவலை குறைந்த பட்சம்  நம் நண்பர்களிடமாவது பகிர்ந்து கொள்வோம்.

சற்றே சிந்திப்போம் நம் சந்ததியினரை காப்போம்........!
     
நன்றி.               
இப்படிக்கு:-       
*வங்கி காசாளர்..*
-------------------------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்!
அன்புடன்

Sunday, June 24, 2018

அகம் திருடுகிறதா முக நூல்


சமீப காலமாக தலைப்புச் செய்திகளில் அடித்துத் துவைத்துக் காயப்போடப்பட்ட விவாதப் பொருள் எதுவென்றால் “பேஸ்புக்” என்பதாகத் தான் இருக்கும். பேஸ்புக் தகவல்களைத் திருடுகிறது என்பது முதல், பேஸ்புக் அரசியல் முடிவுகளை நிர்ணயிக்கிறது என்பது வரையிலான தலைப்புகளில் விவாதங்களும், கட்டுரைகளும், வழக்குகளும் உலகெங்கும் நடந்து கொண்டிருக்கின்றன.
பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஷக்கன்பர்க் வழக்குக்காகப் கோர்ட் படியேறி தனது நிறுவனத்தைப் பற்றியும், தகவல் பாதுகாப்பு பற்றியும், இப்போது இருக்கின்ற குறைகள் பற்றியும், இனி என்னென்ன செய்யப் போகிறோம் என்பது பற்றியும் வியர்க்க விறுவிறுக்க விளக்கி விட்டார். இருந்தாலும் மக்களிடம் இருக்கின்ற பயமும், தயக்கமும் போனபாடில்லை ! இந்த பயம் நியாயமானதா ?
முதலில் ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இணைய வெளியில் பாதுகாப்பு எனும் பேச்சுக்கே இடமில்லை ! எப்போது வேண்டுமானாலும், எந்த தகவல் வேண்டுமானாலும் களவாடப்படலாம் என்பதே புரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை உண்மை.
இன்றைய தொழில்நுட்ப உலகத்தின் அடிப்படை மூலதனம் என்ன தெரியுமா ? “தகவல்கள்” ! நாம் பேஸ்புக்கிலோ, வாட்ஸப்பிலோ, இன்ஸ்டாகிராமிலோ, ஷாப்பிங் தளங்களிலோ அல்லது வேறெந்த இணைய தளங்களிலோ பகிர்கின்ற தகவல்கள் தான் இந்த தொழில் நுட்ப உலகின் மூலதனம். அந்த தகவல்களை அலசி ஆராய்ந்து அதை பிஸினஸாக மாற்றுவது தான் இன்றைய தொழில்நுட்ப உலகின் ‘புராஃபிட் ஸ்ட்ரேட்டஜி’, அதாவது லாப யுத்தி !
நாம் மொபைலில் தரவிறக்கம் செய்கின்ற ஆப்களானாலும் சரி, நாம் வலைத்தளங்களில் செய்கின்ற தேடுதல் ஆனாலும் சரி, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுகின்ற தகவல்களானாலும் சரி எல்லாமே வியாபார நோக்கில் தான் அணுகப்படுகின்றன. தகவல் அறிவியல் எனப்படும், டேட்டா சயின்ஸ் தொழில்நுட்பம் இன்றைக்கு கொடிகட்டிப் பறக்கக் காரணம் இந்த தகவல்கள் தான். அடுத்த ஐந்து பத்து ஆண்டுகளுக்கு தொழில் நுட்ப உலக புரட்டிப் போடப் போவதும் இந்த டேட்டா சயின்ஸ் தான் !
பேஸ்புக் நிறுவனமும் தங்களிடம் வருகின்ற அனைத்து தகவல்களையுமே சேமிக்கிறது. அந்த தகவல்களை தகவல் அறிவியலுக்கு உட்படுத்தி ஆளுக்கேற்ற விளம்பரங்களை அனுப்புகிறது. இந்த விளம்பரங்கள் தான் அதன் மூலதனம். பேஸ்புக்கை இலவசமாக நமக்குத் தருகின்ற நிறுவனம் விளம்பரங்கள் மூலம் கடந்த ஆண்டு மட்டும் சம்பாதித்த தொகை இரண்டு இலட்சத்து அறுபத்து இரண்டாயிரம் கோடி ரூபாய்கள் ! இலவசமாய் கிடைக்கின்ற பேஸ்புக்கிற்கு விலை நாம் தான் ! நமது தகவல்கள்தான் !
இதில் இன்னொரு அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், உங்களிடம் பேஸ்புக் கணக்கு இல்லையென்றாலும் கூட பேஸ்புக் உங்களுடைய தகவல்களைத் திருட முடியும் என்பது தான் ! உங்களுடைய நண்பர்கள் யாருக்காவது பேஸ்புக் கணக்கு இருந்தால், அவர்களுடைய கான்டாக்ட் மூலமாக உங்களுடைய தகவல்களை பேஸ்புக் நிறுவனம் இழுத்து எடுத்துக் கொள்கிறது ! என்னிடம் பேஸ்புக் கிடையாது அதனால் என்னோட தகவல்கள் பேஸ்புக்கின் கைக்குப் போகாது என யாரும் சொல்ல முடியாது !
அதே போல, பல வலைத்தளங்கள், ஆப்கள் உள்நுழைவதற்கு பேஸ்புக் ஐடியையோ, கூகிள் ஐடியையோ கேட்பதைப் பார்த்திருப்பீர்கள். நீங்கள் ஏதோ ஒரு தகவலை உள்ளீடு செய்து உள்ளே நுழைவீர்கள். அந்த நேரத்தில் உங்களுடைய தகவல்கள் இன்னொருவர் கைக்கு இடம்பெயரும். நாம் அறியாமலேயே இயல்பாக இந்த விஷயம் நடந்து விடும்.
இன்றைய யுகத்தில் இந்தத் தகவல்களெல்லாம் செயற்கை அறிவியல் எனப்படும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ட், பிக் டேட்டா, இன்டெர்நெட் ஆப் திங்க்ஸ், மெஷின் லேர்னிங் போன்ற தொழில்நுட்பங்களின் கூட்டுக் கலவையில் அலசப்படுகின்றன. பின்னர் ஒரு நபருடைய ரசனைகள், விருப்பங்கள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றையெல்லாம் தகவல்கள் மூலம் தெரிந்து கொண்டு, அந்த நபருக்குத் தேவையான பர்சனலைஸ்ட் விளம்பரங்களைக் கொடுக்கின்றன.
இவை வெறும் விளம்பரங்களை அனுப்புகின்றன எனுமளவில் இதில் பெரிய ஆபத்து இல்லை. ஆனால் அது உங்களைப் பிந்தொடர்ந்து உங்கள் தகவல்களையெல்லாம் சேமிக்கிறது என்பதும், தொடர்ந்து உங்களைக் கண்காணித்துக் கொண்டே இருக்கிறது என்பதும் தான் ஆபத்தானது.
‘ஃபேஸ் ரிககனிஷன்’ எனப்படும் முகத்தை வைத்து அடையாளம் காணும் தொழில்நுட்ப யுத்தியின் படி உங்களுடைய படம் எங்கெல்லாம் இருக்கிறது, யாருடைய தளத்திலெல்லாம் இருக்கிறது, அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு, அவர்களுடைய ரசனைகளுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு போன்றவையெல்லாம் தகவல் அறிவியல் அலசும். பிறகு, ‘உங்க பிரண்டுக்கு புடிச்ச இந்த கார், இந்த விலைல வருது.. நீங்க வாங்கலையா’ என ஆசையைத் தூண்டும்.
இதில் அச்சப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் இந்த தகவல்களும், டேட்டா சயின்ஸும் சேர்ந்து கொண்டு இல்லாத ஒரு பிம்பத்தை இருப்பது போல ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க முடியும். இதை உளவியல் யுத்தம் எனலாம். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட பத்திரிகை தான் உலகிலேயே பெஸ்ட் பத்திரிகை எனும் தோற்ற மயக்கத்தை இதால் உருவாக்க முடியும். ஒரு தேர்தலின் முடிவை மாற்றியமைக்க முடியும் !
பேஸ்புக் தளத்தை விளம்பரம் இல்லாத பணம் கொடுத்து பயன்படுத்தும் தளமாக மாற்றலாமா எனும் யோசனையை நிறுவனர் நிராகரிக்கிறார். அதனால் அவருக்கு ஏகப்பட்ட பயனர் இழப்பு ஏற்படும் என்பதும். இப்போது கிடைத்து வருகின்ற மிகப்பெரிய லாபம் நிச்சயம் கிடைக்காது என்பதும் தான் அதன் காரணம்.
இப்படி மற்றவர்களுடைய தகவல்களை சுருட்டி விளையாடும் மார்க், தனது தகவல்களை மிக ரகசியமாக வைத்திருக்கிறார். அவருடைய பாதுகாப்புக்காகவும், அவருடைய தகவல்களின் பாதுகாப்புக்காகவும் கடந்த ஆண்டு மட்டும் அவர் செலவிட்ட தொகை சுமார் 48 ஆயிரம் கோடி ரூபாய்கள் !
கடைசியாக, பேஸ்புக் உட்பட எந்த சமூக வலைத்தளமும் பாதுகாப்பானது என சொல்ல முடியாது. எதைப் பயன்படுத்தினாலும் அதிக பட்ச செக்யூரிடி ஆப்ஷனைத் தேர்ந்தெடுங்கள். முடிந்தவரை இணையத்தில் தகவல்களைப் பகிராமல் இருப்பது பாதுகாப்பானது ! டிஜிடல் உறவை விட்டு விட்டு, நிஜ உறவுக்குள் வருவது மனிதத்துகும், பாதுகாப்புக்கும் மகத்தானது !
நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்.
1. பேஸ்புக் கணக்கு உங்களிடம் இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள், அதை நீங்கள் டெலீட் செய்தாலும், டி ஆக்டிவேட் செய்தாலும் உங்களுடைய தகவல்கள் அழிக்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை !
2. நீங்கள் வாங்கும் பொருட்களோ, நீங்கள் செல்லும் பயணங்களோ உங்களுடைய நண்பர் வட்டாரத்தில் இருப்பவர்களுக்கு தெரிவிக்கப்படலாம். அது வியாபார யுத்தி. உங்களுடைய தனிமைக்கு எதிரி ! உங்கள் தகவல்களை பிற நிறுவனங்களுக்கோ, ஏன் அரசுக்கோ கூட பகிர்ந்து கொடுக்கலாம்.
3. உங்களுடைய ரசனைகள், உங்களுடைய விருப்பங்கள் போன்றவற்றை உங்களுடைய போட்டோவுடன் சேர்த்து பல இடங்களுக்கும் அனுப்பப்படலாம். நீங்கள் வெளிப்படுத்த விரும்பாத விஷயங்கள் உட்பட.
4. நீங்கள் பேஸ்புக்கை விட்டு வெளியே வந்தாலும் கூட உங்களுடைய இணைய நடமாட்டத்தைக் கவனித்து குக்கிகளில் சேமித்து, பின்னர் நீங்கள் பேஸ்புக் நுழையும் போது அவை பேஸ்புக் தளத்துக்கு பரிமாறப்படலாம்.
5. நீங்கள் ஒரு பொருளை இணையத்தில் தேட ‘டைப் செய்கிறீர்கள்’ பிறகு மனதை மாற்றிக்கொண்டு அதை டெலீட் செய்து விடுகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அந்த தகவலும் சேமிக்கப்பட்டு உங்களைப் பிந்தொடரலாம்.
*வலை பதிவில் கிடைத்தது -பகிர்ந்தது 

Thursday, June 21, 2018

இளையராசா - இளமை இசையின் 75ஆம் பிறந்த நாள்

அம்மாவின் பாசத்தை விவரிக்க முடியுமா இல்லை அப்பாவின் அன்பை தான் அளவிடமுடியுமா. அது போலத்தான் இளையராசாவின் இசையும், அதை உணரமட்டும் தான் முடியும். உயிர் இருந்து உடலை இயக்குவது போல் உள்ளத்தில் இருந்து மனதை இயக்கும் மந்திரம் அவரின் இசை. நீண்ட நெடுந்தூர பயணம் கூட அதுக்குள் முடிந்துவிட்டதா என்று உணரவைக்கும் பாடல்கள் என்னுடன் இருக்கும் வரையில். அடடா இன்னும் இவ்வளவு பாடல்கள் இருக்கின்றதோ எப்போது கேட்டு முடிப்போம் என்று இருக்கும்.

காலை மாலை இரவு அதிகாலை என்று பிரித்தாலும் வருவது என்னவோ இவரது இசையே. பின் இரவில் மட்டும் கருப்புவெள்ளை பாடல்கள் இல்லை என்றால் விடியும் வரை விழித்து இருப்பது உறுதி. பலமுறை முயன்று பார்த்த தோல்வியின் பாடங்களாய் கருப்புவெள்ளை பாடல்கள் பின்னிரவில் மட்டும்.

வயது எல்லாம் ஒரு எண்ணிக்கையே, படைப்புகள் என்றால் அது வயதாக இருப்பதே படைப்புகள். இளையராசாவின் இசை அந்த வரிசையில் சேர்ந்து பல பத்தாண்டுகளை கடந்துவிட்டது. இரண்டு தலைமுறை என்று மட்டும் எழுதுகிறார்கள். அது இன்னும் எத்தனை தலைமுறையை கடக்கப்போகின்றது என்று இருந்து பார்க்கவேண்டும் போல் இருக்கிறது..........

Wednesday, June 20, 2018

ஓஷோ சொன்ன குரங்குக் கதை!



ஓஷோ சொன்ன குரங்குக் கதை!

சுவாங்தஸூவுக்கு மிகவும் பிடித்த கதை இது.

ஒரு குரங்கு வளர்ப்பவன் குரங்குகளுக்கான உணவு திட்டத்தை குரங்குகளிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.

காலையில் மூன்று ரொட்டி,மாலையில் நான்கு ரொட்டி.அப்போழுது மாலை நேரம் என்பதால் எல்லா குரங்குகளும் ஒத்துக்கொண்டன.

சில நாட்கள் போனது.ஒரு நாள் காலை நேரத்தில் எல்லாக்குரங்குகளும் புரட்சி செய்தது.எங்களுக்கு காலையில் மூன்று போதாது.

குரங்கு வளர்ப்பவன் சொன்னான் அப்படியென்றால் காலையில் நான்கு மாலையில் மூன்று.

குரங்குகளுக்கு சந்தோசம் தங்களுடைய புரட்சி வெற்றியடைந்ததாக திருப்தியடைந்தது.எல்லா குரங்குகளும் ஒத்துக்கொண்டன.

குரங்கு வளர்ப்பவன் சிரித்துக்கொண்டான்.ஏனென்றால் அவனுக்கு தெரியும் எப்படி இருந்தாலும் மொத்தம் ஏழுதான் என்று.

இதன் அடிப்படைதான் மனிதனின் மனது.

இந்த குரங்கு மனங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்துதான் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கிறது.

பிறகு புரட்சி செய்து வேறு ஒரு ஆட்சி கொண்டுவருகிறது.

ஆனால் நான் சொல்கிறேன் ஆட்சியாளர்கள் மாறலாம் ஆட்சி மாறாது.மொத்தம் ஏழுதான்.

ஆனால் உங்கள் குரங்கு மனம் ஆட்சி மாற்றம் செய்துகொண்டேயிருக்கும்.
குரங்குகள் ஏமாற்றப்பட்டுக்கொண்டேயிருக்கும்.
குரங்கு வளர்ப்பவனை ஏமாற்றுவதாக நினைத்துக்கொண்டு

__ஓஷோ.

படித்ததில் பிடித்தது!

Monday, June 18, 2018

வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றுவது எப்படி?



வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றுவது எப்படி?

ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் தன் அறையில் தனியாக சோகமாக அமர்ந்து கொண்டு தன் துயரங்களை எழுதிக் கொண்டிருந்தார்:🤕🤕

சென்ற வருடம் எனக்கு ஒரு major surgery,,,gall bladder எடுக்க வேண்டிய சூழ்நிலை.நீண்ட நாள் படுக்கையிலேயே இருக்க வேண்டி இருந்தது.😚

அதே வருடம் 60 வயது ஆகிவிட்டதால் வேலையிலிருந்து retirement.😩😩😩

அதே வருடம் என் அன்பிற்குரிய தந்தை காலமானார்.😭😭😭

அதே வருடம் என் மகன் ஒரு கார் விபத்தில் மாட்டிக் கொண்டு medical examination எழுத முடியவில்லை. காரும் பயங்கர சேதாரம்.🤒🤒😷🤕

என்ன ஒரு மோசமான வருடம்,,, என்று வருத்தத்துடன் எழுதி முடித்தார்.🤧🤧

அவருடைய மனைவி அப்போதுதான் உள்ளே வந்தார். கணவர் சோகமாக அமர்ந்திருப்பதை பார்த்து பின்னால் இருந்து அவர் எழுதியதை படித்தார்.✍

பின் மெதுவாக வெளியே போய் இன்னொரு பேப்பரில் எதையோ எழுதி, கொண்டு வந்து, கணவர் எழுதிய பேப்பருக்கு அருகில் வைத்தார்.✍✍✍

சென்ற வருடம் gall bladder operation.நீண்ட நாட்களாக இருந்த வலியிலிருந்து விடுதலை பெற்றேன்.🙌

60 வயது ஆனதால் வேலையிலிருந்து ரிடையர்மெண்ட். இனி என் பொழுதை அமைதியாகவும், படிப்பதிலும், எழுதுவதிலும் செலவிடுவேன்.👍👍

என் அப்பா 95 வயதில் யாருக்கும் இனியும் பாரம் வேண்டாம் என்று அமைதியாக இறைவனிடத்தில் தஞ்சம் புகுந்தார்.👍👍

அதே வருடம் என் மகன் கடவுள் கருணையால் மீண்டும் புது வாழ்வு கிடைத்தது. என்னுடைய கார் சேதாரமானாலும் என் மகன் எந்த குறைபாடும் இல்லாமல் மீண்டு வந்தான்🤷♂🤷♂

இந்த வருடம் எனக்கு நல்ல வருடம்.கடவுள் என் மீது தன் கருணையை பொழிந்தார்.☺☺

படித்த கணவர் நன்றி பெருக்கால் தன் மனைவியை அணைத்துக் கொண்டார்.☺

என்ன அற்புதமான மனதிற்கு வவிவூட்டும் வாக்கியங்கள்.☺☺☺☺

ஒவ்வொரு நாள் வாழ்க்கையையும், மகிழ்ச்சிகரமான கணங்களாக மாற்றிக் கொள்வது நமது கையில்தான் உள்ளது.☺☺

படித்ததில் பிடித்தது

Tuesday, June 12, 2018

உணவு

அரசியல்
-------------

அரசியல் என்றால் என்ன என்று சிறுவன் கேட்டான்.

அப்பாவும் விளக்கமாகக் கூறத் தொடங்கினார்.
நான் செலவுக்குப் பணம் ஈட்டி வருகிறேன் ஆகவே முதலாளி.
ஈட்டிய பணத்தை செலவு செய்யும் உன் தாய் அரசு
தாத்தா எல்லாவற்றையும் கவனிக்கிறார் யூனியன் எனலாம்
வீட்டு வேலைக்காரி தொழிலாளி என்று சொல்லலாம்
எல்லோரும் பாடுபடுவது உனக்காக, ஆக நீ பொதுஜனம்
உனக்கு அடுத்துப் பிறந்த குட்டிப் பாப்பா எதிர்காலம்

மகனே-இங்கு நடப்பதைப் புரிந்து கொண்டால் அரசியல்
என்ன என்று விளங்கும் ஓரளவு தெரிந்து கொள்வாய்.
புரிந்ததைக் கொஞ்சம் எனக்குக் கூறு என்று கேட்டார் தந்தை.
ஒரு இரவு அசைபோட அவகாசம் கேட்டான் தனையன்.

உறங்கச் சென்ற சிறுவன் தம்பியின் அழுகுரல் கேட்டு விழித்தான்.
ஒன்றுக்கும் இரண்டுக்கும் போய் முடை நாற்றத்தில் மிதந்தான் தம்பி
செய்வதறியாது பெற்றோரின் படுக்கையற்க்குச் சென்றான் இவன்.
ஆழ்ந்த உறக்கத்தில் தாய், அருகே தந்தை இல்லை.
தாயை எழுப்ப முயன்று தோற்ற தனையன் வேலைக்காரி
இருக்குமிடம் சென்று பார்த்தால் தந்தையின் பிடிப்பில்
கட்டுண்டு கிடப்பவளை பலகணி வழியே ரசிக்கும் தாத்தா.
இவன் வந்ததே தெரியாமல் அவரவர் பணியில் அவரவர்.
ஏதும் செய்ய இயலாமல் இவனும் மீண்டும் உறங்கப் போனான்

மறுநாள் மகனிடம் தந்தை கேட்டார். அரசியல் பற்றி அறிந்தது கூற.
அறிந்தது புரிந்தது என்று மகனும் விளக்க முற்பட்டான்.
“முதலாளி தொழிலாளியைக் கசக்குகிறான். யூனியன் கண்டும்
காணாமல் இருக்கிறது அரசு உறக்கத்தில் இருக்கிறது.
பொதுஜனம் புறக்கணிக்கப் படுகிறது. எதிர்காலமோ
முடை நாற்றத்தில் மூழ்கிக் கிடக்கிறது.

உணவு 
------------
நண்பனுக்கு ஜெர்மனியில் வேலை கிடைத்ததாம்..அதனைக் கொண்டாடும் முகமாக அங்கிருந்த இவருடைய நண்பர் “ ட்ரீட் “வேண்டி ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் சென்றாராம். இவரையும் சேர்த்து நான்கு நண்பர்கள் கூடியிருந்தனராம். அந்த ஓட்டலில் உணவுக்கு வந்திருந்தவர்கள் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்ததாம். அப்படி உண்பவர் மேசைகளிலும் குறைந்த அளவே தட்டுகள் இருந்ததாம். ஒரு வெகு சாதாரண ஓட்டலுக்கு வந்து விட்டோமோ என்னும் எண்ணம் அவர்களுக்கு எழுந்தது. எப்படி இருந்தால் என்ன.. நாம் நன்றாகச் சாப்பிட்டு அனுபவிப்போம் என்று இவர்கள் விதவிதமான உணவுப் பொருட்களும் அதிக அளவிலும் ஆர்டர் செய்தனர். முடிவில் ஆர்டர் செய்த பல பொருட்கள் உண்ணப் படாமலேயே விரயமாயிற்றாம். பார்ட்டி முடிந்து பில் வந்தபோது பில்லில் அபராதத் தொகை என்று ஒரு கணிசமான தொகையும் இட்டிருந்தார்களாம். அபராதம் எதற்கு என்று கேட்டபோது தேவைக்கு மீறி ஆர்டர் செய்து விரயமாக்கியதற்கு என்று பதில் வந்ததாம். “ எங்கள் பணம். நாங்கள் உண்போம் இல்லை வீணாக்குவோம், அதை நீங்கள் எப்படிக் கேட்கலாம் “என்று இவர்கள் கேட்டதற்கு அவர்கள் “பணம் உங்களுடையதாக இருக்கலாம். பொருட்கள் இங்கிருப்பவர்களின் மூலப் பொருட்களிலிருந்து (RESOURCES) “ வந்தவை. . அதை விரயம் செய்வது குற்றம் என்றனராம். நாம் விரயமாகும் எந்தப் பொருளைப் பற்றியாவது சிந்திக்கிறோமா.?

மன அமைதிக்கு 
------------------------------
இது ஒரு கேட்ட கதை .பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு முறை புத்த பகவான் தன் சீடர்களுடன் சென்று கொண்டிருந்தார்.தாகமாயிருக்கவே சீடன் ஒருவனிடம் குடிக்க நீர் கொண்டு வருமாறு பணித்தார்.அவன் அருகில் இருந்த குளத்துக்குச் சென்று நீரை எடுத்து வரப் போனான்.அவன் குளத்தை அடையும் நேரம் அங்கே சிலர்   துணிகளை துவைத்துக்கொண்டிருந்தனர்அப்போது ஒரு மாட்டு வண்டி குளத்தை கடந்து   சென்றதுகுளத்து நீர் கலங்கி சேறாய்த் தெரிந்ததுசீடன் திரும்பி வந்து நீர் குடிக்கத்    தகுதியில்லாமல்   கலங்களாய் இருக்கிறது என்றான்.

ஒரு அரைமணி நேரம் கழிந்து புத்தர் அதே சீடனிடம் நீர் கொண்டு வரச்சொன்னார்இம்முறை குளத்து நீர் தெளிந்து இருக்கவே அவன் புத்தருக்கு நீர்கொண்டு வந்து கொடுத்தான்.

” நீர் தெளிய நீ என்ன செய்தாய்அதை அப்படியே இருக்க விட்டாய்அதுவும்தெளிந்ததுநம்   மனமும் அது போல்தான்குழம்பிப் போயிருக்கும்போதுஅப்படியே விட்டு விட வேண்டும்   அதை தெளிவிக்க எந்த முயற்சியும் தேவைஇல்லைதானாகத் தெளியும்.மன நிம்மதி பெற   எந்த முயற்சியும் தேவை இல்லை. உள்ளம் அமைதியாய் இருந்தால் அது இருக்கும்    சூழலையும்அமைதியாக்கும்.