Pages

Thursday, June 21, 2018

இளையராசா - இளமை இசையின் 75ஆம் பிறந்த நாள்

அம்மாவின் பாசத்தை விவரிக்க முடியுமா இல்லை அப்பாவின் அன்பை தான் அளவிடமுடியுமா. அது போலத்தான் இளையராசாவின் இசையும், அதை உணரமட்டும் தான் முடியும். உயிர் இருந்து உடலை இயக்குவது போல் உள்ளத்தில் இருந்து மனதை இயக்கும் மந்திரம் அவரின் இசை. நீண்ட நெடுந்தூர பயணம் கூட அதுக்குள் முடிந்துவிட்டதா என்று உணரவைக்கும் பாடல்கள் என்னுடன் இருக்கும் வரையில். அடடா இன்னும் இவ்வளவு பாடல்கள் இருக்கின்றதோ எப்போது கேட்டு முடிப்போம் என்று இருக்கும்.

காலை மாலை இரவு அதிகாலை என்று பிரித்தாலும் வருவது என்னவோ இவரது இசையே. பின் இரவில் மட்டும் கருப்புவெள்ளை பாடல்கள் இல்லை என்றால் விடியும் வரை விழித்து இருப்பது உறுதி. பலமுறை முயன்று பார்த்த தோல்வியின் பாடங்களாய் கருப்புவெள்ளை பாடல்கள் பின்னிரவில் மட்டும்.

வயது எல்லாம் ஒரு எண்ணிக்கையே, படைப்புகள் என்றால் அது வயதாக இருப்பதே படைப்புகள். இளையராசாவின் இசை அந்த வரிசையில் சேர்ந்து பல பத்தாண்டுகளை கடந்துவிட்டது. இரண்டு தலைமுறை என்று மட்டும் எழுதுகிறார்கள். அது இன்னும் எத்தனை தலைமுறையை கடக்கப்போகின்றது என்று இருந்து பார்க்கவேண்டும் போல் இருக்கிறது..........