தாத்தா இருந்தவரை கதை சொன்னார்.தாத்தா இறந்தபிறகு தாத்தாவே கதையானார்
ஒன்பது முறை எழுந்திருக்க முயற்சி செய்தவனை பார்த்து படுக்கை சொன்னது..
இன்னும் அஞ்சு நிமிசம் தூங்கு என்று..!
மேகம் கறுக்காததால்
மனிதர்கள் கறுத்துவிடுகின்றனர்#கோடைவெயில்
ஊர், உலகமே சேர்ந்து துப்பினாலும்,
விற்பனையை நிறுத்துவதில்லை பற்பசை தயாரிப்பாளர்..!!
ஸ்மார்ட் ஃபோன்..
மனிதர்களை
ஃபோட்டோகிராபராக்கியது..
விமர்சகராக்கியது..
போராளியாக்கியது..
பாடகராக்கியது..
மீண்டும் எப்போது
மனிதராக்கும்.
எல்லா மொழியிலும் "அ "தான் முதலாயிருக்கிறது..
ஆனால் ஒவ்வொரு மனிதனுக்கும் முதலாய் இருக்கும்
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் முதலெழுத்தாகத்
தமிழைத்தவிர வேறுமொழிகளில் "அ"அமைந்திருக்கிறதா..
கத்தி எடுத்தவனுக்கு
கத்தியால்தான் கண்ணீர்
"வெங்காயம்"!
உலகம் நம்மிடம் கேட்பது
"என்ன சாதித்தாய்"
உறவுகள் நம்மிடம் கேட்பது
"என்ன சம்பாதித்தாய்"!
உறங்கும் நேரத்தை பொறுத்து, இரவின் நீளம் அமைகிறது
வாகன ஓட்டுனர்களை, ‘சக்கரத்தாள்வார்’ என்றும் அழைக்கலாம்!
ஸ்மைல் ப்ளீஸ்
சொல்லாமலே
சிரிக்க வைக்கிறது
"செல்போன்"
உண்மையிலயே செத்துட்டானா என ஊர்ஜிதம் செய்யவே பலர் பிணத்தை உற்றுப்பார்க்கின்றனர்
ஏன் அப்பாக்கள் காதலை எதிர்க்கிறார்கள்?
படைப்பாளியின் படைப்பை திருடினால் கோபம் வரத்தானே செய்யும்..
எப்படி இருக்கீங்க.? எனும் கேள்விக்கு மட்டும் எல்லோராலும் எளிதில் கூச்ச மில்லாமல் பொய் சொல்ல முடிகிறது.,!