Pages

Thursday, March 8, 2012

சங்கரன்கோவிலில் வைகோவின் நெத்தியடி


சங்கரன்கோவிலில் வைகோவின் நெத்தியடி.....

32 அமைச்சர்கள் சங்கரன்கோவிலில் முற்றுகையிட்டு தேர்தல் பணியை மேற்கொள்ளவிருக்கிறார்கள். தானே புயலில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டார்கள், அப்போது எத்தனை அமைச்சர்கள் அங்குபோய் முகாமிட்டு நிவாரன பணியை மேற்கொண்டார்கள்? முதலமைச்சரான ஜெயலலிதாவே பத்து நிமிடம் மட்டுமே செலவு செய்து தானே புயல் பாதிப்புகளை பார்வையிட்டார். இப்போது சங்கரன்கோவிலுக்கே தலைமைச்செயலகத்தையே மாற்றியிருக்கிறார்கள்

என்ன செய்வது? தானே புயல் பாதித்த பகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவில்லையே?


மின்வெட்டால் அனைத்து தொழில் கூடங்களும் இழுத்து மூடும் நிலைக்கு வந்துள்ளதே அதை பற்றி சிந்திக்க முதல்வருக்கு நேரமில்லை. மின்சாரம் போதவில்லையா கவலை இல்லை. நான்கு மணிநேர மின்வெட்டை பத்து மணி நேரமா கூட்டுங்க அதுவும் போதவில்லையா இருபத்தி நாலு மணி நேரமா மாத்துங்க நமக்கு என்ன இடை தேர்தல் தானே முக்கியம்.

இடைதேர்தலில் முதல்வரோ அமைச்சர்களோ பிரச்சாரத்துக்கு போவது அரசாங்கம் ஒரு கட்சிக்கு சாதகமாக நடப்பது போன்றது. முதல்வரும் அமைச்சர்களும் நாட்டுக்கு பொதுவானவர்கள். அவர்கள் ஒரு கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்திற்கு போக கூடாது. அப்படி போவதாக இருந்தால் தமது அமைச்சர் பதவிய ராஜினமா செய்து விட்டு கட்சி பிரமுகர் என்ற அடையாளத்துடன் தான் பிரச்சாரத்துக்கு போகவேண்டும் என்று சொன்ன காமராஜர் போன்ற தலைவர்கள் வாழ்ந்த தமிழ் நாட்டின் இன்றைய நிலையை பார்த்தீர்களா?

வாழ்க தமிழ்நாடு..வளர்க..இந்தியா