ஈழத்தமிழனின் ஈடுகட்ட முடியாத இழப்புக்கு நீதி கேட்டு வெடித்திருக்கும் ட்விட்டர் புரட்சி
ஈழமக்களுக்கு இழைக்கப்பட கொடுமைகள் உலகம் முழுக்க கவனத்தை ஈர்க்க வேண்டும், அனைவருக்கும் அந்த கொடுமைகள் பற்றி அறியச்செய்ய வேண்டும் என்ற உந்துதலில் ட்விட்டரில் புரட்சி கோஷங்கள் எழுப்பப்படது.. என் அளவில் நான் எழுதியவை..
1.ஆங்கிலேயன் இந்தியாவை கொள்ளை அடித்தான், ஒரே ஒரு இத்தாலிப்பெண் ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தையே பலி ஆக்கினாள் #killingfields"
2. தமிழனை காட்டி கொடுக்கத்தயங்காதவன் கருணா,தமிழன் வெட்டி எரியப்பட்டபோதும் வேடிக்கை பார்த்தவர் கலைஞர் #killingfields"
3. திமுக கொடியின் நிறத்துக்கான விளக்கம்- ஈழத்தமிழனின் ரத்தமும்,அவன் எதிர்காலமுமா?-சிவப்பு,கறுப்பு #killingfields
4. தமிழக அரசியல் தலைவர்கள் அனைவர் சொத்துக்களையும் பறிமுதல் செய்து, எல்லாரையும் ஒரு வருடம் இலங்கையில் தங்கவைத்தால் என்ன?#killingfields"
5. சாப்பாட்டில் கை வைக்கும்போது இலங்கையில் ஓடிய ரத்த ஆறுதான் நினைவு வருகிறது, கை கழுவினால் அவர்கள் கண்ணீர் நினைவு#killingfields
7. தமிழ் இனத்தலைவர் என்றழைக்கப்பட்டவர் தமிழ் இனத்தை அழிக்கத்துணை போன தலைவர் என்று வரலாறு அழைக்கட்டும்#Killingfields
8. இந்தியா நான்கு எழுத்து,தமிழன் நான்கு எழுத்து,இலங்கை நான்கு எழுத்து,கலைஞர் நான்கு எழுத்து துரோகம் நான்கு எழுத்து#KillingFields
9. உயிரைக்கொடுத்து இன மானம் காக்க பலர்.. மானத்தைக்கெடுத்து,அடுத்துக்கெடுத்து பதவியைத்தக்கவைக்க சிலர்#Killingfields
10. இந்தியப்பெருங்கடல் நீர் மட்டம் உயர்ந்தால் அது ஈழத்தமிழர்களின் நிலை கண்ட நம் கண்ணீராய் இருக்கும்#Killingfields
11. அரசியல் லாபத்துக்காக ஒரு இனத்தையே பலியிடத்துணிந்த இரு குடும்பங்களும் மன உறுத்தல்களுடனே எஞ்சிவாழ்நாளை கழிக்கட்டும்#Killingfields
12. கடவுள் அரக்கனை கொன்ற நிகழ்வு சூரசம்ஹாரம், ஒரு அரக்கன் பல வீரர்களை சூழ்ச்சி செய்து தின்ற நிகழ்வு வீர சம்ஹாரம்#killingfields
13. இலங்கையில் ராகுலையும், கூடங்குளத்தில் பிரியங்காவையும் நிரந்தரக்குடி வைத்து விட வேண்டும்#KillingFields
14. அகதிகளின் கதி அதோ கதி, அனைத்தும் அரசியல் சதி, தமிழனின் நெற்றியில் பலவந்தமாக எழுதப்பட்ட விதி#KillingFields
------------------------------
15. கையில் இருப்பதை எல்லாம் கொடுத்தான் கர்ணன், கைக்கு அகப்பட்டவர்களை எல்லாம் கொன்றான் கர்ண கொடூரன் ராஜபக்சே#KillingFields
16. தமிழ்நாட்டைவிட்டு கலைஞர் , இந்தியாவை விட்டு சோனியா காந்தி 2 குடும்பமும் தள்ளி வைக்கப்பட்டால் நாடு சுபிட்சம் பெறும்#KillingFields
17. ஒரு ஊர் வாழ ஒரு குடும்பத்தை இழக்கலாம், ஆனால் ஒரு குடும்பம் வாழ ஒரு இனத்தையே அழிக்க வழி செய்தார் கலைஞர்#KillingFields
----------------------------------
20. காந்தியின் பெயரை தன் பெயருடன் கொண்டிருந்தும் அவர் குணங்கள் எதுவுமே வரப்பெறவில்லை எனில் எதற்கு அந்த பதவி?#KillingFields
------------------------------------------------------------------
23. எட்டு மணி நேர மின்வெட்டையே தாங்கிக்கொள்ள முடியாதவன் தமிழகத்தமிழன், 24 மணிநேரமும் மனித வெட்டை சந்திப்பவன் ஈழத்தமிழன்#KILLINGFIELDS
24 இல்பொருள் உவமை அணிக்கு மிகக்கொடூரமான உதா”ரணம்” கருணையே இல்லாத துரோகி கருணா#Killingfields
25. ஈழத்தமிழனின் வீட்டில் அரிசி உலை கொதிப்பதில்லை,எந்த சிங்களனும் அவர்களை மதிப்பதில்லை#KillingFields
---------------------------------26. அமைதிக்கான நோபல் பரிசை தருவதற்கு முன் அட்டூழியத்துக்கான அகோர தண்டனை ராஜபக்சேவுக்கு அளிக்கப்பட வேண்டும்#KillingFields
------------------------27. இறந்தான் இறந்தான் ஈழத்தமிழன் இறந்தான், மறந்தான் மறந்தான் தமிழகத்தலைவன் தாய் நாட்டை நேசிக்க, காப்பாற்ற மறந்தான்#KillingFields
28. ஈழத்தில் பிறந்து ஈழத்தில் அழிந்த பிரம்மபுத்திரர்கள்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாய் பிரம்மபுத்ரா நதியே வற்றிவிட்டதாம்#KillingFields
----------------------------------29. வெண்ணைகள் எல்லாம் அன்னைகள் ஆகின்றனர்,தலை எடுக்க விடாமல் துரத்தப்பட வேண்டியவர்கள் தலைவராக இருக்கிறார்கள்#KillingFields
--------------------------------
30. உயிருடன் ஈழத்தமிழனை எரித்த ராஜபக்சேவுக்கு விருந்து வை, கண்டனம் தெரிவிக்க உருவ பொம்மை எரித்தால் சிறையில் வை #KillingFields
----------------------------------
31. ஈழத்தமிழனுக்காக போராடிய புலிகளை அரசியல் லாபத்துக்காக வஞ்சித்தன தமிழக நரிகள் #killingfields
------------------------------32. கடல் கடந்து ஈழத்தில் தமிழன் மண்டையைப்போட்டுக்கொண்டிருக்கிறான்.இங்கே நாம் கடலை போட்டுக்கிட்டு இருக்கோம் :( #killingfields
--------------------------------------33. ஓ! தமிழர்களே! நீங்கள் அனைவரும் கடலில் மூழ்கி இறந்தாலும் நான் கவலைப்பட மாட்டேன், எனக்கு என் குடும்பம் தான் பெருசு #KillingFields
34. ஈழத்தில் சாதம் வடிக்க வழி இல்லாமல் தமிழன், இங்கே சச்சின் சதம் அடித்தால் என்ன? அடிக்கா விட்டால் என்ன? #killingfields
---------------------------35. எந்த குடுகுடுப்பைக்காரராலும் நம் நாட்டுக்கு நல்ல காலம் எப்போ பிறக்கும்னு சொல்லவே முடியலை :( #killingfields
------------------------------36. தமிழக அரசியல் தலைவர்களில் முதல்வராக இருந்தவர்களில் எம் ஜி ஆர் மட்டுமே ஈழத்தமிழனுக்கு ஏதாவது செய்ய நினைத்தவர் #killingfields””
'தெய்வம் நின்று கொல்லும்’ என்ற தீர்ப்பின் மீது நம்பிக்கை வைப்பதைத் தவிர தமிழனுக்கு வேறு வழி இல்லை!
'தெய்வம் நின்று கொல்லும்’ என்ற தீர்ப்பின் மீது நம்பிக்கை வைப்பதைத் தவிர தமிழனுக்கு வேறு வழி இல்லை!