Pages

Thursday, March 22, 2012

மனம் கவர்ந்த பாடல்கள்

என்னதான் இப்பவர  பாட்டு கேட்டாலும்..ராஜா இசை என்றாலே சுகம்தான்


மனம் கவர்ந்த பாடல்கள்
சை பற்றி எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது.
நல்ல இசை என்பது, கேட்பவரை மனம் லயிக்கச் செய்வதாக இருக்க வேண்டும். அவ்வளவுதான் தெரியும்!
ராகதேவன் நம் இசை சக்கரவர்த்தி இளையராஜா அவர்களின் இசை இனிமையில் நான் ரசிக்கும் மற்றுமொரு பாடல்


ஓ வெண்ணிலாவே வா ஓடி வா …..
ஆனந்தக்கும்மி என்று ஒரு படம் அனேகமாக வருடம் 1983-ல் வெளியானது. அந்தப் படம் பலருக்கு இன்று நினைவில் இல்லாமல் இருக்கலாம்… ஆனால் பாடல்கள்… காலத்துக்கும் மறக்க முடியாதது!
இந்த படத்தில் வரும் ஓ வெண்ணிலாவே வா ஓடி வா …..
என்ற பாடல் என்னை மிகவும் கவர்ந்தது.
இந்த பாடல் ‘ஆனந்த கும்மியடி கும்மியடி ….’ என்று பெண்கள் கோரஸ் குரலில் ஆரம்பிக்கும் அது முடிந்தவுடன், தன் இசை ராஜாங்கத்தை ஆரம்பித்திருப்பார் இளையராஜா.
அப்படியே ஒரு அமைதியான கிராமத்தில், நிலவின் ஒளியில் மின்னும் பின்னிரவுக்க, நம்மை இழுத்துச் செல்லும் அந்த இசை.
தொடர்ந்து வரும் பல்லவி,
ஓ வெண்ணிலாவே வா ஓடி வா…
அதற்குப் பின் பாடலின் இரண்டாவது சரணத்திற்கு முன்
ஜானகியின் குரலில் வரும் ‘லா லி லா லி லா லி….’ நம்மை சுகமாய் தாலாட்டும்.
இந்த பாடலை எனது 18 வயதில் கேட்டிருக்கிறேன்.
இந்த வயதிலும் கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். மனதில் இளமையின் நினைவுகள்…
என் மனதை மயக்கும் பாடல்களில் ஒன்று..கேட்காதவர்கள் கேட்டுத்தான் பாருங்களேன்!

ஊமை நெஞ்சின் ஓசைகள்…, ஒரு கிளி உருகுது…, …, திண்டாடுதே ரெண்டு கிளியே (இளையராஜா) என மற்ற பாடல்களும் மகா இனிமையானவை.
பாடல் பாடியவர்கள் S.P. பாலசுப்ரமணியம்,S.ஜானகி
பாடலை எழுதியவர்: வைரமுத்து


சலங்கை ஒலியில் ராஜா இசை மனதை மயக்கும்....ராஜா இசை என்றாலே சுகம்தான் 



இசையுடன்
J.குமார் .