அந்த ஒளிவட்டம் SUPERB..(Nice graphics)
இந்தியாவில இப்பவெல்லாம் இவனுங்க தொல்ல தாங்க முடியல. அட நம்ம காவி சாமியார் தொல்லை தான், முக்திய கொடுகிறேன், பக்திய கெடுக்கிறேன்னு, ஸ்ட்ரெயிட்ட சொர்கத்துக்கு கூட்டிகினு போயிட்றேன்அட்டகாசம் பண்றானுங்க. ஏதோ ஒரு ஆசிரம வச்சு செட்டீல் ஆகி தொலையிரானுங்கன்னு பார்த்தா, இப்பயெல்லாம் ராமர் கோயில கட்றேன், ஊழல ஒழிக்கிறேன்ன்னு சாமியாருங்க தான் முதல்ல கிளம்பிறானுங்க
இன்னும் ஊழல ஒழிக்க ஏத்துன மெழுகுவர்த்தி அணையக்கூட இல்ல அதுக்குள்ள கறுப்பணத்த ஒழிக்க பாபா ராம் தேவ் உண்ணவிரதம் இருக்கபோறாராம்.
பின்னால எல்லா டிவி கேமராவும் ரெடியாயிடிச்சி, இந்த IBNனும், NDTVயையும் நினைச்சாதான் பயமா இருக்கு இவனுங்க சும்மாவே ஆட்டம் ஆடுவானுங்க, இவனுங்க கால்ல சலங்கைய வேற கட்டிவிட்டுட்டா என்ன ஆவது ருத்தர தாண்டவம் தான்.
ராம் தேவ் ஜூன் 4ம் தேதி கிள்ம்ப்போறாரு இனி இந்தியாவுல எத்தன தல உருள போகுதோ?