update kani mozhi twitees
TWITTEES…
கனிமொழி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு-ஜூன் 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு-
25 நாள் ஆச்சா ? அப்ப வெள்ளிவிழா கொண்டாடி விடுவோம்.--@venkat
பெயில் எதுக்குமா...தமிழ் நாடு climate சரியில்லே......அப்பாவுக்கு நேரம் சரியில்லே.....அம்மா கோவமா இருக்காங்க...கொஞ்ச நாள் திகார் வாசம் உனக்கு நல்லது......என்ன வரட்டா ......@gana
ஆமா..... ஜாமீன் கொடுக்காமலிருந்தால் இம்முறை சென்னை சங்கமம் நடத்தபோவது யாரு? ஆகவே சென்னை சங்கமம் நடத்தப்பட வேண்டிருப்பதால் கனிமொழிக்கு ஜாமீன் அனுமதிக்க வேண்டுமென கனம் கோர்ட்டார் அவர்களை கேட்டுக்கொள்கிறேன் .... ஹி ஹி ஹி—nithu
ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பார், ஆனால் கைவிடமாட்டார். கெட்டவங்களுக்கு அள்ளி குடுப்பார். இப்பிடித்தான் கழட்டி திகார் ஜெயில்ல விட்டுடுவார்..-@kali
200 கோடிக்கு வெறும் 25 நாள் தானா..? நானும் ஒரு வாரம் இருந்துட்டு வரலாம் ...........ஜஸ்ட் 1 c குடுங்க....!!--@venkat
இப்ப வெளியே வந்து என்ன பண்ண போறீங்க?..... பேசாம உள்ளே இருந்து அடுத்து என்ன ஊழல் செய்யலாம் ன்னு யோசிங்க ப்ளீஸ்............@raju
உலகத்தில வேற எங்கேயாவது ஜாமீன் தர்ற கோர்ட் இருந்தா விலாசம் அனுப்பி வையுங்கள் பிளீஸ்.--@ritua
வேலூர் ஜெயிலில் நளினி என்றொரு அம்மணி இருபத்தைந்து வருடங்களாக சிறைவாசம் இருக்கிறார். கருணாநிதி சிறிதளவு இரக்கம் காட்டியிருந்தால் அனுபவித்த தண்டனை போதும் என்று விடுதலை செய்திருக்கலாம். ஆனால் கருணாநிதி இரக்கம் காட்டவில்லை. தந்திரமாக பாராமுகமாயிருந்தார். இன்று அதே போன்று பாராமுகம் கனிமொழி விஷயத்திலும் காட்டப்ப்படுகிறது காங்கிரஸால். விதி வலியது. இது வலிக்கிறது.--@karuppu
கனிமொழி நெஞ்சுவலிக்குது என்று பொய் சொல்லி ஜாமின் வாங்குவதை தவிர்த்தவர். சட்டப்படி ஒரு விசாரணை கைதியாக இருப்பவரை அவரது நடவடிக்கைக்கு தகுந்தவாறு உச்ச நீதிமன்றமாவது விரைவில் விடை சொல்லும்.--@duetaat
தவறுதான் !...தமிழ் இனம் உன்னிடம் எதிர் பார்த்தது தவறு தான் !.... பெற்ற மகளினை திகார் ஜெயிலிலிருந்து மீட்க முடியாதவனிடம்....தமிழ் இனத்தினை சிங்களனின் கொட்டடியிலிருந்து மீட்டுவிடுவாய் என்று எதிர்பார்த்தது தவறுதான் ! !!! @ rajasji
டி ஆர் பாலு:தலைவரே வஞ்சிர மீன் இருந்குகுறான் வால மீன் இருக்குன்குறான் ஆனா ஜாமீன் மட்டும் இல்லையாம்--@RAMESH
கிடைக்கும்.. ஆனா கிடைக்காது…..@KUMAR
உடன்பிறப்பே, எங்கள் குடும்பம் ஏதோ மூட்டை மூட்டையாக பணம் வைத்திருப்பது போல ஒரு மாயை உருவாக்கி, களங்கம் உண்டாகிவருகிறது ஒரு கூட்டம். நாங்கள் மிகவும் ஏழை. நாங்கள் படும் கஷ்டம் எங்களுக்குத்தான் தெரியும். ஒரு தமிழறிஞர் மாதிரியும், நல்ல அரசியல் வாதி மாதிரியும் பல வருடங்களாக நடிப்பது எத்தனை கஷ்டம்? இலக்கியவாதி போலவும், கவிஞர் போலவும் நடிப்பது கனிக்கு எவ்வளவு கஷ்டம்? இதையெல்லாம் விடு, கணவன் மாதிரியே நடக்க முயற்சிப்பது அரவிந்தனுக்கு எத்தனை கஷ்டம்?-@murthu