Pages

Saturday, June 4, 2011

வம்பரங்கம் : கருணாநிதியின் மௌனம்.....?




தங்கள் கட்சியின் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது ஊழல் குற்றச்சாட்டு வந்தபோது ஆளுக்கு முதலில் அதை மறுத்து அறிக்கை விடுத்தார் கருணாநிதி. தி.மு.கவுக்கு எதிராக சதி என்று கேடயத்தைத் தூக்கிப் பார்த்தார்.

அடுத்து தனது மகள்  கனிமொழி மீது ஊழல் குற்றச்சாட்டு வந்த போது  தன் குடும்பத்துக்கு எதிரான சதி என்று பொங்கி எழுந்தார். உயர்நிலைக்குழுவை அவசரமாகக் கூட்டி வியூகம் வகுத்தார்.

இதோ... தயாநிதி மாறன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் ஒன்றன் பின் ஒன்றாய் அடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. சன் டிவியின் தகிடுதத்தங்களும் ஊரெல்லாம் பேசப்படுகிறது
.
மாறன் மத்திய அமைச்சர் மட்டுமல்ல. பேரனும் கூட.  ஆனால்  இப்போது மட்டும் கருணாநிதி  ஏன் வாயைத் திறக்க மாட்டேன்கிறார்?

ஈழ தமிழர்,மீனவர் பிரச்சினை தான் மக்கள் பிரச்சினை..அதற்குதான் வாயை திறக்கில... ஆனால் இது உன்மக்கள்(மகள்,பேரன்) பிரச்சினை..ஏன் இந்த மௌனம்..?உறவில் ஏன் இந்த விரிசல்..?


something.....something...