Pages

Saturday, June 11, 2011

எதிர்பாராது வரும் விடுமுறைகள்

எதிர்பாராது வரும் விடுமுறைகள்
==============================
சில பேருக்கு இருக்கும் நகைச்சுவை உணர்வை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது. 
ஒரு கவிதையை ரசித்து படிதேன்..ஆனால் கிழே இருந்த comments  அந்த கவிதையைவிட ரொம்ப பிடிச்சிருந்தது..உங்களுக்காக..எழுதிய பின்னூட்டத்தைப் பார்த்தால் உங்களுக்கே விளங்கும்


கவிதை

எதிர்பாராது வரும் விடுமுறைகள்
எவ்வளவு அழகாக இருக்கின்றன?
வீடு திரும்பி வந்து
குழந்தைகளுடன் விளையாடலாம்...
தோட்டத்துச் செடிகளுக்குத்
தண்ணீர் ஊற்றலாம்..
தொலைக்காட்சி சீரியல்களின்
அபத்தங்களைப் பார்த்துப் புன்னகைக்கலாம்..
காலையில் அவசரமாகப்
புரட்டிய செய்தித்தாள்களை
ஆசுவாசமாய்ப் பார்க்கலாம்..
மனைவியின் சமையலை
நேரலையாய் கண்டு ரசிக்கலாம்..
நண்பனுக்குப் போன் பேசி
நலம் விசாரிக்கலாம்...
நெடுநாளாய் நின்றிருக்கும்
ஒட்டடைகளை நீக்கலாம் ...
ஒரு சிறுவனாய் மாறி
கிரிக்கெட் விளையாடலாம்...

இப்போது இதன் பின்னூட்டம்:

நிஜ வாழ்க்கையில், நடப்பவை எல்லாம் மனைவியின் பதில் களாக!

எதிர்பாராது வரும் விடுமுறைகள்
எவ்வளவு அழகாக இருக்கின்றன?

வீடு திரும்பி வந்து
குழந்தைகளுடன் விளையாடலாம்...
அன்பு மனைவி - ஏங்கஇன்னிக்கி லீவு தானகொஞ்சம் குழந்தைய பார்த்து கிட்டு 

தூங்கவைச்சிடுங்களேன்

தோட்டத்துச் செடிகளுக்குத்
தண்ணீர் ஊற்றலாம்..
- சும்மாவே இருக்க மாட்டீங்களாநேத்து தான் தண்ணி ஊத்துனேன்இதுல மழை வேற 

பெஞ்சது.உதவி பண்ணலனாலும் உபத்திரவம் பண்ணாம இருக்கலாம் ?

தொலைக்காட்சி சீரியல்களின்
அபத்தங்களைப் பார்த்துப் புன்னகைக்கலாம்..
அன்பு மனைவிஎதுக்கு இப்போ சிரிக்கிறீங்க? சீரியல்ல வர்ற பொண்ண 

கூட சைட் அடிக்கனுமா?

காலையில் அவசரமாகப்
புரட்டிய செய்தித்தாள்களை
ஆசுவாசமாய்ப் பார்க்கலாம்..
அன்பு மனைவிஒரே நியூஸ் பேப்பர எத்தன தடவ படிப்பீங்கஇந்த பழைய 

பேப்பர் எல்லாம் அடுக்கிவைச்சீங்கன்னபோட்டு எவர் சில்வர் பாத்திரமாவது 
வாங்கலாம்.

மனைவியின் சமையலை
நேரலையாய் கண்டு ரசிக்கலாம்..
அன்பு மனைவி - வந்து கிச்சன்  வேடிக்கை பாக்குறத விடஇந்த தேங்காய் கொஞ்சம் 

உடைச்சி குடுங்க.

நண்பனுக்குப் போன் பேசி
நலம் விசாரிக்கலாம்...
அன்பு மனைவி - இன்னிக்கி ஒரு நாள் எதோ லீவுஇன்னிக்காச்சும் போன் ஆப் பண்ணி வைங்கஎப்பபார்த்தாலும் பேச வேண்டியதுஅப்படி என்னத்த தான் பேசுவீங்களோ?
நெடுநாளாய் நின்றிருக்கும்
ஒட்டடைகளை நீக்கலாம் ...
அன்பு மனைவி - என்னங்கஅது பக்கத்துக்கு வீடுநம்ம வீட்ட விட்டுட்டு வேற 

எல்லாத்துலயும்ஒட்டடை அடிங்க...கடவுளே.. (தலையில் அடித்து கொள்கிறார்)

ஒரு சிறுவனாய் மாறி
கிரிக்கெட் விளையாடலாம்...
அன்பு மனைவிஅதான்உங்களுக்கு வராதுல்ல...அப்புறம் என்ன இன்னும் 

சின்ன பையன்மாதிரி..மானம் போகுதுப்ளீஸ் வீடுக்குள்ள வாங்க.

என்ன தான் சொன்னாலும்
வழக்கமான விடுமுறைகளை விட
எதிர்பாராது வரும் விடுமுறைகள்
எப்போதும் அழகாய் இருக்கின்றன,,

அன்பு மனைவிஅதெப்படி அழகா இல்லாம போகும் னு கேக்குறேன்வேல வெட்டி எதுவும் இல்லாம,நாள் பூரா சாப்டுட்டு தூங்கிட்டு இருந்தாஇப்படி லாம் கவிதை வேற வரும்எல்லாம் எங்க அப்பா சொல்லணும்இப்படி ஒருத்தர எங்க தான் தேடி பிடிச்சி.....
--------- அன்பு மனைவி