Pages

Wednesday, June 8, 2011


கலைஞரின் கண்ணிரும் எனது கேள்வியும்;

திருவாரூரில் நடந்த நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் கலைஞர் தன் மகள் சிறையில் வாடுவதை எண்ணி கண்ணீர் சிந்தினார்..எந்த தவறும் செய்யாத அப்பாவி கனிமொழி என்றார்..ஆச்சர்யமாக இருக்கிறார்..பொதுவாழ்வில் எத்தனை போராட்டம்,வழக்குகளை சந்தித்திருப்பார் கருணாநிதி..தவறு செய்யாதவர்களை தண்டிக்கும் நீதிமன்றத்தை இவர் இவர் மகள் விசயத்தில் இப்போது கண்டுபிடித்திருக்கிறாரே..இது தமிழுக்கு நேர்ந்த துயரம் அல்லவா..தமிழின தலைவருக்கு ஏற்பட்ட துரோகம் என தமிழக மக்கள் ஏன் பொங்கவில்லை..?

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இன்றும் சிறையில் இருக்கும் நளினியும் ஒரு பெண் தானே..? விடுதலைப்புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டனர் என இலங்கை அரசு தெரிவித்தபின்னும்,பிரபாகரனே கொல்லப்பட்டுவிட்டதாக இலங்கை அர்சு சொன்னபின்னும் 5 வருடங்களாக அவரை விடுதலை செய்யக்கூடாது என அரசு தரப்பில் மறுத்துக்கொண்டே இருந்தாரே கலைஞர்..அந்த பரிதாப நிலைதான் இன்று இவர் பெண்ணிற்கு வந்துள்ளது...கொஞ்ச நாளைக்கே கலங்காதீர்கள் அய்யா...இன்னும் நாள் இருக்கிறது!


ஏன்னா தமிழனுக்கு தெரியும்..தப்பு செஞ்சவன் தண்டனை அனுபவிக்க வேண்டும்....பணம் மட்டும் வேணும்..ஆனா சிறை கூடாதாம் என்னய்யா அநியாயமா இருக்கு!

மலரை போன்ற மென்மையான கனிமொழியை சிறையில் அடைத்து வாடவிடுகிறார்கள் என்கிறார் கலைஞர்.
40 வயது பெண்மணியை மலர் என்பவர் உண்மையான மலர்கள் பிஞ்சு குழந்தைகள் மீது வெடிகுண்டுகளை வீசி சிங்களப்படைகள் நாசம் செய்ததே..அப்போது கண்ணீர் விட்டாரா..? என்ன சுய நலம் பாருங்கள் மக்களே!

அடுத்தவனுக்கு ஆப்பு வைக்கும்போது நமக்கு வலிக்கலை..நமக்கு ஆப்பு வைக்கும்போது வலிக்குது...!
தமிழக முதல்வர்னா தமிழன் எங்கே அடிபட்டாலும் ,போராடணும்...மீட்கணும்..அதுக்குதான் தமிழ்க முதல்வர்..எவனாவது காப்பத்துவான்...இருக்ககூடாது!அப்படி இருந்தால் இப்படித்தான் ..

வரவேற்க்கதக்கது:- 
தமிழர்களைத் தாக்கிய இலங்கை ஒரு போர்க்குற்றவாளி. அந்த நாட்டை வழிக்குக் கொண்டு பொருளாதார தடை விதிப்பதே ஒரே வழியாகும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஈழ தமிழர் நலனில் அக்கறைகொண்டு சுயநலம் இல்லாமல்  கூறியதற்காக  எனது நன்றிகள்..
உங்களைதான் நம்புகிறோம்,கைவிடமாட்டிர்கள் என்று இருக்கிறோம்.. எனது ஈழ நண்பனின் புலம்பல்..