Pages

Saturday, June 11, 2011

உண்மை க(வி)தை ---அந்த நாலு பேர்


உண்மை க(வி)தை 


நிஜ மரணம்


மூச்சு நிற்கும்
இந்தக் கணம்
எந்தன் மரணம்
நிகழவில்லை, மகனே!
முன்பே உன்னால்
முதியோர் இல்லத்தில்
மனம் ரணமாக
முதலடி வைத்த போதே
நிஜ மரணம் எனக்கு
நிகழ்ந்து விட்டது.
எனவே என் மரண நாளாக
அதையே நீ குறித்துக் கொள்!


அந்த நாலு பேர்




வாழ்ந்தேன்
வயிறெரிந்தார்கள்
வீழ்ந்தேன்-நான்
வீண் என்றார்கள்
இவர்கள் தொல்லை தாளாமல்
இறந்தேன்
இடுகாடு வரை வந்தழுகிறார்கள்
இனி நாம் விமரிசிக்க
இவன் இல்லையே என்று!

நன்றி: -என்.கணேசன்