கனிமொழி சிறையில்.... கலைஞர் கண்ணீர்....
நேற்று தில்லியிலிருந்து சென்னைக்கு தன் மகள் கனிமொழியை திஹார் சிறையில் பார்த்து விட்டு வந்த தி மு க தலைவர் கருணாநிதி தன் மகள் சிறையில் வாடுவதாகவும் , அவரின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார், ஒரு தந்தையின் மனநிலையிலிருந்து பார்த்தோமேயானால் மிகவும் வருந்ததக்க செய்திதான், ஆனால் போராட்டம் பலகண்ட , தனிமை சிறையிலும் மனம் கலங்காத தளபதியாய் களம் பல கண்ட மு.கருணாநிதியா இவர் ??
இது அவரின் உடல் தள்ளாமையால் வந்த கலக்கமா இல்லை குடும்ப பாசத்தை தள்ளமுடியாமையால் வந்த கஷ்டமா தெரியவில்லை, எது எப்படி இருப்பினும் இது ஒரு நல்ல அரசியல் தலைவருக்கு அழகல்ல. கடந்த ஒரு மாதத்தில் தன் மகளை பார்க்க இரண்டு முறை தில்லி சென்ற கலைஞர் , முதல்வராய் இருந்த போது நம் மாநில நலனுக்காக எத்தனை முறை சென்றார்
மீனவர்கள் தாக்கப்பட்டு,சுடப்பட்டு இறந்த போது, இலங்கை தமிழர் பிரச்சனை கொழுந்துவிட்டு எரிந்தபோதெல்லாம் தில்லி செல்லாமல் இருந்ததேன்?
மாநில பாதுகாப்பை,நலனை உறுதிசெய்யும் முதல்வர்கள் மாநாட்டிலும் கலந்து கொள்ளாமல் சட்டத்துறை அமைச்சரையும், துணை முதல்வரையும் அனுப்பியதேன்?
சிறையில் இருக்கும் தன் மகளுக்காக இத்தனை துயரப்படும் கலைஞர், தன் கணவனை, தகப்பனை, சகோதரனை இன்னும் தன் மகனை இழந்த மீனவ தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் இவர் முதல்வராக இருந்தபோது கடிதம் எழுதுவதை விட வேறு என்ன அதிகமாக செய்தார், இது அவர் தமிழர்களுக்கு செய்த துரோகம் அல்லவா?
தனகென்றால் ஒருநீதி மற்றவர்களுகென்றால் ஒருநீதியா, இவரின் ஆட்சியில் பெண்களே கைது செய்யப்படவில்லையா அவர்களுக்கெல்லாம் குடும்பம் இல்லையா ??அல்லது இவரின் ஆட்சியில் எல்லா சிறைகளும் குளிரூட்டப்பட்டு இருந்தனவா??
இது மாதிரியான செயல்கள் ஒரு முன்னாள் முதல்வருக்கும் லட்சக்கணக்கான தொண்டர்களையும் கொண்ட பெரிய கட்சியின் தலைவருக்கு ஏற்புடையதா என்று பார்த்தோமேயானால் அவரை முதல்வராக தேர்தெடுத்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்??
இதையெல்லாம் தவிர்த்துவிட்டு திருமதி கனிமொழியின் நிலையை பார்த்தோமேயானால் , ஏன் இந்த நிலை அவருக்கு எல்லாமே பதவியின் மீதுள்ள ஆசையால் விளைந்தது தானே, அவர் தானுண்டு தன் கவிதை, இலக்கியம் உண்டென்று இருந்திருந்தால் இந்த நிலை அவருக்கு வந்திருக்காதே, தன் மகளும் பதவி, பட்டம், படாடோபம் பெறவேண்டும் என்ற திருமதி ராஜாத்தி அம்மாளின் எண்ணத்தில் தோன்றிய ஆசையின் விளைவுதானே இது ?? அரசியலில் ஆண் பெண் என்ற பேதமேது , அப்படி இருந்திருந்தால் கலைஞர் ஜெயலலிதாவை கைது செய்திருக்கவே கூடாதே ??
கலைஞரையும், அவரின் அரசியல் சாதுர்யத்தையும் , தமிழையும் என் தந்தையின் வழியே கேட்டு அவரை நேசித்தவர்களில் நானும் ஒருவன் ஆனாலும் இன்றைய காலக்கட்டத்தில் அவரின் மீதான இந்த கேள்விகளை என்னால் தவிர்க்கமுடியவில்லை.
அன்புடன்
J.குமார்
vijairam - madras,india
2011-06-21 16:30:37 IST
இதுதான் உண்மை. ஈழ தமிழர்களின் பாவம் சும்மா விடாது.நாங்கள் உங்களைத்தானே நம்பினோம் .
...
ஏ கிளாஸ் சிறையில் கொப்பளமா? 'ஐயோ கொல்றாங்களே' மாதிரி இதுவும் அனுதாபம் பெற அவிழ்த்து விடப்பட்ட புளுகு தான்! தமிழர்கள் இன்னும் ஏமாளிகள் இல்லை!