வல்லரசாகப் போகும் கிரேட் இந்தியாவில் நடப்பதென்ன?
1.வல்லரசாகப் போகும் இந்தியாவில் வயிற்றுக்கு போடும் அரிசி விலை அதிகமில்லை ரூ.40 தான் ஆனால் செல்லுக்கு போடும் சிம்கார்டு இலவசம்தான்.
2. உடல் நலத்தையும் மனிதனையும் காக்கும் ஆம்புலன்ஸ், போலிஸ் வரும் வேகத்தை விட மனித உடல் நலத்தை கெடுக்கும் பிட்ஸா அதி விரைவில் வந்து விடும்.
3. படிக்க ஆசைப்படும் ஏழை வாங்கும் கடனுக்கு வட்டிவிகதம் ரொம்ப அதிகமில்லை 12% ஆனால் ஊர் சுற்றி வரப் ஆசைப்படும் பணக்காரன் வாங்கும் காருக்கு வட்டிவிகிதமோ ரொம்ப குறைச்சல் அல்ல 5 % தான். பாருங்க வல்லரசாகப் போகும் எங்க பாரத நாட்டை.
4. மக்களுக்காக கஷ்டப்பட்டு உழைக்க வேண்டிய தலைவர்கள் கஷ்டப்படாமல் அமர்ந்து விவாதிக்க வேண்டிய அசம்பளி கட்டிடங்கள் கோடிக்கணக்கான செலவில் ஓரே ஆண்டில் கட்டி முடிக்கப்படுவதும் ஆனால் கஷ்டப்படும் மக்கள் கஷ்டப்படாமல் இருக்க உதவும் ஃபப்ளிக் போக்குவரத்து துறை, பாலங்களுக்கான குறைந்த செலவில் தீட்டப்பட்ட திட்டங்களை முடிக்க பல ஆண்டுகள் எடுத்தாலும் முடிக்காமல் இருப்பது இந்த வல்லரசாகப் போகும் பாரத திருநாட்டில் மட்டுமே.
5. எல்லா இந்திய மக்களுக்கும் புகழ் பெற்றவர்களாக ஆக ஆசை ஆனால் புகழ் பெற வேண்டிய நல்ல வழிகளில் நடப்பதற்கு மட்டும் பிடிக்கவில்லை.
6. பணக்கார மில்லியனர்கள் ஏழைகளுக்கு சமுக தொண்டாற்றும் நிறுவனங்களுக்கு டொனேஷன் தருவதற்கு பதிலாக கிரிக்கெட் குழுக்களை அதிக விலைக்கு வாங்குவார்கள்.
7. ஊழைலை ஒழிக்க பேசி போராட வேண்டிய படித்த இளைய சமுதாயம் கிரிக்கெட் வெற்றி தோல்விகளைப் பற்றி பேசி சண்டை இட்டு கொள்கின்றனர்.
8. அதிகம் படிக்காத 45% மாணவர்கள் கோட்ட சிஸ்டத்தின் மூலம் நல்ல கல்லூரிகளில் நுழைவதும் நல்ல முறையில் படித்து மெரிட்டில் படித்து பாஸாகிய 90% மாணவர்கள் நுழைய முடியாத நல்ல சிஸ்டம் உலகின் வல்லரசாக போகும் இந்திய திருநாட்டில் மட்டுமே காணமுடியும்..
GREAT INDIA...... THINK ABOUT IT!