Pages

Tuesday, May 10, 2011

...+2 Result........




முதல் மூன்று இடங்களையும் பிடித்து தனியார் பள்ளிகள் சாதனை

நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில், மாநில அளவிலான, முதல் மூன்று இடங்களையும், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பிடித்து சாதனை படைத்துள்ளன. அரசு பள்ளியோ, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இருந்து ஒரு மாணவர் கூட, மாநில அளவிலான இடத்தை பிடிக்கவில்லை. இதன்மூலம், "தரமான கல்வியை வழங்குவது தனியார் பள்ளிகளே என்ற வாதம்' எடுபட்டுள்ளது.

........................Dinamalar news...........................

ஆனால் வருடத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் வாங்கிக்கொண்டு இந்த மதிப்பெண்களை தனியார் பள்ளிகள் "வாங்கிக்கொடுத்திருக்கிறார்கள்" என்பது தான் உண்மை.
பத்தாம் வகுப்பில் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களை சேர்க்காமல் கழித்து கட்டி விட்டுநானூறு அல்லது நானூற்று ஐம்பது மதிப்பெண்களை விட அதிகமான மதிப்பெண்களை பெற்றவர்களை மட்டுமே அட்மிஷன் கொடுத்து, அவர்களை பிளஸ் டூ-வில் அதிக மதிப்பெண்களை பெற வைப்பது தான் சாதனையா?
தனியார் பள்ளிகளால் மட்டுமே சாதிக்க முடியும் என்பது உண்மையல்ல. அரசுப்பள்ளி மாணவர்களும் சாதித்திருக்கிறார்கள்.

இன்று டி.வி.பேட்டிகளில் கொடுத்துகொண்டிருக்கும் வசதி வாய்ப்புக்களின் பாதுகாப்போடு ஜெயித்தவர்களை விட,வாழ்க்கையோடும், அது தந்த கசப்புக்களோடும் போராடி,வறுமையோடு போராடி, மிக சாதாரணமாக மதிப்பெண்கள் பெற்ற அரசுப்பள்ளி மாணவனே உண்மையான சாதனையாளன்.

எவ்வளவு உயரம் வந்திருக்கிறான் என்பதை விட, எவ்வளவு பள்ளத்திலிருந்து இந்த உயரம் வந்திருக்கிறான் என்பதை பாருங்கள் சாமானியனின் சாதனைக்கான அர்த்தம் புலப்படும் உங்களுக்கு.

என் எண்ணங்கள்..