எளிய முறையில் "ஆப்பு" வைக்க ஏழு யோசனைகள்
1. எல்லோருக்கும் இலவசமாய் தொலைக்காட்சி கொடுத்துவிட்டு
பார்க்க விடாமல் கரண்ட் கட் செய்வது.
அதே தொலைகாட்சியில் ஸ்பெக்ட்ரம் பத்தி மக்கள் தெரிஞ்சிகிட்டது.
2. ஈழத் தமிழனுகோ, இந்திய மீனவனுக்கோ பிரச்சினை என்றால்
கடிதம் எழுதுவது.
அதே தன் மகளுக்கு பிரச்சினை என்றால் இந்தியாவின்
அதிக விலை வக்கீலை வாதாட வைப்பது.
3. தேர்தல் முடிந்தபிறகு அ.தி.மு.க அப்படீன்னு ஒரு கட்சியே
இருக்காதுன்னு சவால் விடுவது.
தேர்தல் முடிந்தபின் தன் கட்சி உயிரோடு இருக்கா? என்று தேடுவது.
4. 13 ந்தேதி என்ன பண்றேன்னு பாருங்கன்னு BUZZ, TWITTER, BLOG
எல்லாத்திலயும் சவால் விடுறது.
ஆனா அபீட்டாயிட்டு அடுத்த அஞ்சு வருசத்துக்கப்புறம்
நாமதான்னு அவங்களுக்கு அவங்களே (நமக்கு நாமே திட்டம் மாதிரி௦)
ஆறுதல் சொல்லிக்கிறது.
5. கருணாநிதி பி.ஜெ .பி க்கு சப்போர்ட் பண்ணப்ப சூப்பர் என்பது.
சீமான் மோடிய பத்தி சொன்னா கரசேவைக்கு செங்கல் தூக்குறார்
என கிண்டல் அடிப்பது.
6. எல்லோரும் தமிழில் படிக்க வேண்டும் எனப் பேசுவது. எஞ்சினியரிங் உட்பட..
ஆனா தனது பேரப் பிள்ளைகளை தமிழ் ஆங்கிலவழிக்
கல்வி பயில அனுப்புவது.
7. பணம் கொடுத்துட்டா ஒட்டு போடுவானுங்கன்னு நெனச்சது.
மக்கள் பணம் வாங்கிட்டு மாத்தி ஒட்டு போட்டது.