Pages

Saturday, May 14, 2011

2016 ல நம்ம ஆட்சி தான்


2016 ல நம்ம ஆட்சி தான் 


இந்த தேர்தல மிக பெரிய ஒரு மக்கள் இயக்கம் ஒண்ணு புறக்கணிச்சிரிச்சி அப்படின்னு சமுக ஆர்வலர்கள் யாருமே பொங்கி எழல அப்படிங்கறது தான் என்னோட ஒரே மன குமுறல் :( 
நம்ப தலைவர் பிரஸ் மீட் கூட்டினார் கூட்டினாரா ??? ஆரம்பத்துல அமைதியா தான் சொன்னாரு அப்புறமா ஒரு நிருபர் திடீர்ன்னு வந்து உசுப்பெத்தினாறு தல டென்சன் ஆயிட்டாரு ;)
அப்போ சொன்னாரு பாருங்க …. ஒரு வார்த்தை .. எங்க கட்சியோட கூட்டணி வைக்க எத்தனையோ கட்சிகள் அலைமோதி கிட்டு இருக்கு .. வேண்டாம் .. எங்களுக்கு வேண்டாம் … “
தலைவரோட பரந்த மனப்பானமைய நாம கண்டிப்பா பாராட்டியே ஆகணும் ….
ஓரளவுக்கு நான் யார பத்தி சொல்றேன்னு கணிச்சிருப்பிங்க ;) 
அவரே தான் … THE ONE AND ONLY … TR ….

எவ்வளவு நாளைக்கு தான் இவங்க ரெண்டு பேரும் மாத்தி மாத்தி தமிழ் நாட்ட ஆளுறது ??? தலைவா ஏன் இந்த தேர்தல புறக்கணிச்ச ???
தொலைநோக்கு பார்வை கொண்டு  2016 ஆட்சி நம்ம கையில தான் #லதிமுக 
இப்பவே சொல்லிகிட்டதான் ,அப்ப 2016ல சொல்ல முடியாதுல..