Pages

Wednesday, May 4, 2011

மலரும் நினைவுகள்......

 மலரும் நினைவுகள்......





வேலமுள் காற்றாடிகள்,
ணங்காயில் வண்டிசெய்தும்,
தைரியமாய் 'தும்பி' பிடித்தும்,
ன ஓலையில் ஃபேன் செய்து ஓடவிட்டும்,
த்தை ஓடு திறந்து நகர்வதைச்
சத்தம் இல்லாமல் உற்று நோக்கியும்
ஞ்சாங்கால், ஏழாங்கால்  பல்லாங்குழிகளை 
ஐம்பது வயது பாட்டிகளோடு விளையாடியும்,
நாவல்  பழங்களை ஏறிப்பறித்தும்,
புளிய மரம் உலுக்கி விளையாடியும்
மீன் பிடிக்க சட்டை  கழற்றி 
வெள்ளத்தில் விட்டுவிட்டு 
வீடு சேர வேட்கிப் போனதுமான
என் மழலை நாட்கள்...

ன்று
என் மகனோ 
கணினி  இயக்கியும்,
படப்புத்தகமும்,
கரடி பொம்மையுமாய்....!