குமார்
எதுவும் சுலபம் அல்ல .... ஆனால் எல்லாம் சாத்தியம் தான்...
Pages
Home
Tuesday, May 24, 2011
எல்லாம் புரிந்தவள்
எல்லாம் புரிந்தவள் - வல்லமையில்..
மகளின் மழலைக்கு
மனைவியே அகராதி.
அர்த்தங்கள் பல
முயன்று தோற்று
‘அப்பா
அம்மாவாகவே முடியாதோ..’
திகைத்து வருந்தி நிற்கையில்
புரிந்தவளைப் போல்
அருகே வந்தணைத்து
ஆறுதலாய் முத்தமிட்டு
எனக்கு
அம்மாவாகி விடுகிறாள்
அன்பு மகள்.
Newer Post
Older Post
Home