Pages

Saturday, May 7, 2011

திமுகவின் முகம் !



திமுகவின் முகம் !



ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: ராசா தான் முழுப் பொறுப்பு: கனிமொழிக்கு ஜாமீன் தர வேண்டும்-ஜேத்மலானி வாதம் - என்றத் தகவலைப் படித்ததும், மனுநீதி சோழன் கதை தான் நினைவுக்கு வந்தது, ஒருவேளை கற்பனைக் கதை என்றாலும் கூட ஒரு விலங்கிற்கு வேண்டுமென்று அநீதி அளித்தது கூட தண்டனைக்குரியதே என்கிற தகவலுடன் அரசன் உறவுகள் பார்க்காது நீதியை நிலைநாட்டவேண்டும் என்கிற நீதிக்கதை, இன்றளவும் தமிழகத்தில் நிலைத்து நிற்கிறது.


ராசா தலித் என்பதால் பார்ப்பன ஊடகங்கள் ஸ்பெக்டரம் ஒதுக்கீடை வைத்து ஊழல் கதை எழுதி ஊதிப் பெருக்கிவிட்டன, ராசா குற்றமற்றவர் என்று தெரிவித்துவந்ததுடன், வீரமணி உள்ளிட்ட தனது நலவிரும்பிகள் மூலம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஊடகத்திற்கு அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார் கருணாநிதி. 
மகளுக்கு சிபிஐ சம்மன் என்றதும் பிரபல 'கிரிமினல்' வழக்கறிஞர் பார்பனர் ராம்ஜெத்மலானியின் கையைப் பிடித்து கொஞ்ச......ஸ்பெக்ட்ரம் ஊழல்: ராசா தான் முழுப் பொறுப்பு கனிமொழிக்கு ஜாமீன் தர வேண்டும் என்று மலானி நீதிமன்றத்தில் தெர்விக்கிறார். ஸ்பெக்ட்ரம் ஊழல் நீதிமன்றத் தலையீட்டால் வேறு வழியின்றி காங்கிரஸ் - திமுகவினால் பலியிடப்படும் ராசா இன்றும் .ஜெத்மலானி 'ராசா தான் முழுப் பொறுப்பு' என நீதிமன்றத்தில் தெரிவிக்கப் போவதாக திமுகவினரிடமோ, கருணாநிதியிடமோ சொல்லி இருக்கமாட்டார் என்று நம்புவதற்கு இல்லை. ராசா பகிரசங்கமாகவே காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளார்.



இவர்களிடம் என்ன எதிர்ப்பார்க்க முடியும் ? அழகிரியும் - மாறன் சகோதர்களும் மீண்டும் இணைந்த போது முன்பு தினகரன் அலுவலகத்தில் கொல்லப்பட்ட மூவரை முற்றிலுமாக மறந்து இனித்த இதயமும் பனித்த கண்களும் தானே இவர்களது. மனைவியைக் காப்பாற்ற தொலைகாட்சி இயக்குனர் சரத்குமார், மகளைக் காப்பாற்ற ராசா பொறுப்பேற்கிறார்கள்,
திமுகவை திராவிடக் கட்சி என்றும், திமுகத் தலைவரை தமிழினத் தலைவர் என்றும் ஒருகாலத்தில் நான் கொண்டாடியதை நினைத்தால் மிகவும் அருவெறுப்பாக இருக்கிறது. பாவம் ராசா !