Pages

Saturday, March 5, 2011

பயோடேட்டா - தேர்தல் கூட்டணி ...

பயோடேட்டா - தேர்தல் கூட்டணி ...





பெயர்                                  : தேர்தல் கூட்டணி
இயற்பெயர்                        : கொள்ளை(கை)க் கூட்டணி
தலைவர்                            : பெரீய்ய கட்சித் தலைவர்கள்
துணை தலைவர்              : சாதி மற்றும் சிறியகட்சித் தலைவர்கள்
மேலும் 
துணைத் தலைவர்கள்    : லெட்டர்பேட் கட்சிகள் (இதயத்தில் மட்டும் இடம் பிடிப்பவர்கள்)
வயது                                : ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் வயது
தொழில்                         : ஒற்றுமையாய் நாமம் குழைப்பதும், தனித்தனியாய் குழி பறிப்பதும்
பலம்                                 : சதவீதக் கணக்குகள்
பலவீனம்                          :மக்களின் மனக்கணக்குகள்
நீண்ட கால சாதனைகள் : கூசாமல் கொள்கை பேசுவது
சமீபத்திய சாதனைகள்   :தொகுதி உடன்பாடு எனப் பெயர் மாற்றியது
நீண்ட கால எரிச்சல்         : டெபாசிட்டுக்கு வக்கத்தவன்லாம் பத்து சீட்டு கேட்பது
சமீபத்திய எரிச்சல்          : ஆட்சியில் பங்கும், குறைந்தபட்ச பொது செயல்திட்டமும்
மக்கள்                                : ஓட்டுப் போடும் 'மா'க்கள்
சொத்து மதிப்பு                : ஒவ்வொரு சாதிக்கும் ஒன்றரைக் கோடிப்பேர்
நண்பர்கள்                          : கூட்டணியில் இருப்பவர்கள் அல்ல
எதிரிகள்                            : சீட்டு கிடைக்காத சொந்தகட்சிக்காரர்கள்
ஆசை                                : லோக்கல்ல 234, எஸ்.டி.டில 545
நிராசை                              : மைனாரிட்டி அரசு
பாராட்டுக்குரியது            : தேசியக்கட்சிகளின் கொட்டத்தை அடக்கியது
பயம்                                 : கருத்துக்கணிப்புகள்
கோபம்                             : தேர்தல் கமிஷன் மற்றும் "அப்ப அப்டி பேசுன,
                                              இப்ப இப்படி பேசுற?" டைப் கேள்விகள்
காணாமல் போனவை    : வெட்கம், மானம், சூடு, சொரணை மற்றும் மாநில சுயாட்சி
புதியவை                        : புதிய இலவசங்களோடு வரப்போகும் தேர்தல் அறிக்கைகள்
கருத்து                             : நரிக்கு நாட்டாமை கொடுத்தா கெடைக்கு எட்டாடு கேக்குமாம்
டிஸ்கி                              : மறதி மன்னர்களான மக்களுக்கு எத்தனை டன்
                                             வல்லாரை லேகியம் தேவைப்படுமோ?!!!!