Pages

Thursday, March 17, 2011

காலம் தரும் வாய்ப்பு! -------வை.கோ

வைகோவை விடுதலை செய்த ஜெயலலிதாவுக்கு நன்றி!

.
ஏழு வருடங்களாக கூட்டணி தர்மத்தை மீறாமல், கடந்த தேர்தல்களில் அதிமுகவிற்காக கடும் பிரச்சாரம் மேற்கொண்ட வைகோவிற்கு அன்புச்சகோதரி காட்டியுள்ள மரியாதை, பாத்திரம் அறிந்து பிச்சை போடு என்ற பழமொழிக்கு எடுத்துக் காட்டாக ஆகியுள்ளது. 

வி..டு..த..லை...விடுதலை!
.

மதிமுகவின் பெரிய பலம் உற்சாகமான விசுவாசமான தொண்டர்கள். வைகோ என்ற தனி மனிதரின் மேல் உள்ள மரியாதையில் திரண்ட கூட்டம் அது. தேர்தல் வேலை செய்வதில் அவர்கள் காட்டும் தீவிரத்தைப் பார்த்து அசந்திருக்கிறேன். அந்த தொண்டர் படை இல்லாமல் தேர்தலைச் சந்திப்பது அதிமுகவிற்கு பேரிழப்பே.


திமுகவிற்கும் காங்கிரஸ்க்கும் இணக்கமான உறவில்லாத இந்தச் சூழ்நிலையில் வைகோ செய்ய வேண்டியதெல்லாம் காங்கிரஸ் நிற்கும் 63 தொகுதிகளிலும் தீவிரமாக எதிர்த்துப் போட்டியிடுவதே. அதற்கு சீமான் போன்ற இன உணர்வாளர்கள் உதவ வேண்டியது கடமையாகும். மீண்டும் தமிழின உணர்வுடன் ஒரு கூட்டணி இங்கு அமைக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

காங்கிரஸ் நிற்கும் தொகுதிகள் மட்டுமல்லாது கோவில்பட்டி, சிவகாசி, விளாத்திகுளம் போன்ற மதிமுக செல்வாக்கு பெற்ற தென்மாவட்ட தொகுதிகளில் நின்றால் நிச்சயம் மரியாதையான வெற்றியைப் பெற முடியும். குறைந்தது அதிக வாக்குகளைப் பெற்று கட்சி அங்கீகாரத்தையும் மீட்க முடியும். முதலில் காங்கிரசுக்கு மாற்றாகவாவது மதிமுகவை நிலை நிறுத்த முடியும்.

பொதுஜனங்கள் மத்தியில் ஜெயலலிதாவின் போக்கு கடும் அதிருப்தியை உண்டு பண்ணியுள்ளது.  வேறு வழியின்றி ஜெ.வை ஆதரிக்கத் துணிந்த தமிழின உணர்வாளர்களும் வைகோவின் நிலையைப் பார்த்து வருத்தப் படுகின்றனர். மதிமுக தொண்டர்களும் விட்டது சனியன் என உற்சாகமாக உள்ளனர். ஆனால் தலைவர் தயாரா?



வை. கோபால்சாமிக்கு மிக அருமையான ஒரு வாய்ப்பை மீண்டும் சூழ்நிலைகள் வழங்கி உள்ளன. காங்கிரஸ் நிற்கும் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட வேண்டும். சீமான் போன்றவர்களின் பிரச்சாரமும், தி.மு.க. வின் காங்கிரஸ் எதிர்ப்பும் ஒரு திருப்பு முனையை எற்படுத்தும். செய்வாரா வை.கோ? அல்லது வழக்கம் போல மீண்டும் தவறான முடிவை எடுத்து முந்தானையில் ஒளிந்துகொள்வாரா?