Pages

Tuesday, March 22, 2011

வை கோ வுக்கு ஒரு கடிதம்...


புலியென இருந்த உங்களை அஞ்சு வருடமாக   பூனையாக கத்த வைத்துவிட்டார்களே.


எது எப்படியாயினும் இது உங்களுக்கான நேரம்,
திமுக அப்புறம் அதிமுக என மாறிமாறி உங்களை வாயிற்காப்பானாக பயன்படுத்திக்கொண்டவர்களை தண்டிக்க உங்களுக்கு ஒரு வாய்ப்புக்கிடைத்திருக்கிறது. செஞ்சோற்று கடன் தீர்த்தது போதும்,
உங்களை புலியென, வேங்கையென நிரூபிக்க இன்னும் கூட அவகாசம் இருக்கிறது.

ஈழத்தமிழர்கள் மட்டுமில்லாது உலகமெங்கும் உள்ள தமிழர்களுக்கு உணர்வூட்ட, போராட உங்களுக்கு இன்னும் வாய்ப்பிருக்கிறது. 

காங்கிரஸை எதிர்க்கும் போரில் இறங்க ஏன் இன்னும் தயக்கம் உங்களுக்கு.

அரசியல் களத்தை பொறுத்தவரை நீங்கள் நல்ல அரசியல்வாதியாக இருக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் இன்றும் என்றும் நீங்கள் நல்ல பேச்சாளர்தானே?

அரசியல்வாதியாக நீங்கள் இந்த தேர்தலை புறக்கணியுங்கள் தவறில்லை, ஆனால் தமிழ் உணர்வாளராக ஏன் இந்த தேர்தலில் தமிழர்க்கு துணை நிற்கக்கூடாது?

இனி நீங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில், எல்லாம் இழந்து நிற்கும் தமிழர்களுக்காக ஏன் நீங்கள் போரிடக்கூடாது?

குறைந்தபட்சம் காங்கிரஸை காலி செய்யவாவது நீங்கள் களம் காணக்கூடாதா?

வைகோ, சீமான். நாஞ்சில் சம்பத். நெடுமாறன் என நீங்கள் ஒருங்கிணைத்து குரல் கொடுத்தால், 63 தொகுதிகளில் காங்கிரஸ் நடுநடுங்காதா?

அங்கீகாரம் பெறுவதற்கு 21 தொகுதிகளை கேட்கிறீர்கள். இங்கே 63 தொகுதிகள் உங்களுக்காக காத்திருப்பதை ஏன் மறந்து விட்டீர்கள்?



ஆகவே தமிழனத்தை வஞ்சம் செய்த காங்கிரஸை தமிழகத்திலிருந்து விரட்டுவதற்காவது, அதிமுக, திமுக என அலையாமல்
 நீங்கள் வேங்கையென நிரூபியுங்கள்.

வை கோ முகவரியை தேடினேன் கிடைக்கவில்லை,யாராவது வைகோ முகவரி தெரிந்தால் forward பண்ணவும்...

டிஸ்கி:

பேருந்து பயணத்தின் போது புலம்பிய ஒரு தமிழனின் குரல் பகிர்தலுக்காக..