Pages

Saturday, March 26, 2011

சுயநல ஜனநாயகம் --மக்களை ஏமாற்றும் அறிவிப்புகள்..


பிச்சைக்காரர்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடா?

தேர்தல் என்று அறிவுப்பு வந்துவிட்டாலே, மாநிலக்கட்சிகள் தேர்தல் அறிக்கைகள் வெளியிடுவது வழக்கம்தான்..அதில் சில பல கவர்ச்சித் திட்டங்கள் இடம்பெற்றிருந்தாலும், மக்கள் நலத்திட்டங்களே முதலிடம் பிடிக்கும்..
ஆனால் தற்போதைய காலகட்டங்களில், மக்கள் நலத்திட்டங்கள்முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு, வெறும் கவர்ச்சித்திட்டங்கள்மட்டுமே வெளியிடப்படுகின்றன..அத்தனையும் மக்களைஏமாற்றும் அறிவிப்புகள்..

ஒட்டு வாங்குவதற்கு இந்த அரசியல் வியாதிகள் சொல்லும் அறிவுப்புகளைப்பார்த்தால், தமிழகம் மட்டுமே ஏழைகளும், பிச்சைக்காரர்களும் நிறைந்த ஒரு மாநிலம்போல காட்டபடுகிறது..தமிழகமக்கள் எல்லாரும் இலவசத்துக்அலைவதுபோலவும்ஒவ்வொருவரின் தேர்தல் அறிவுப்பும் உள்ளது..இந்த இலவசத்திர்காக, ஒரு அரைமணிநேரம் செலவழித்து ஒட்டுபோட்டுவிட்டு ஐந்தாண்டுகள் அடிமையாகவும், ஒட்டாண்டியாகவும் வாழ பெரும்பாலும் தமிழர்களும் தயாராகத்தான் உள்ளனர்.
ஏழைமக்கள் படிக்க வரவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட "மதிய உணவுத்திட்டம்" எம்ஜியாரால் "சத்துணவு திட்டம்" என்ற கவர்ச்சி திட்டமாக மாற்றப்பட்டு,அசைக்கமுடியாத முதலமைச்சராக இருந்தார்..மற்றபடிஎம்ஜியார் எந்த ஒரு நன்மையையும் தமிழகத்திற்கு செய்ததாகத் தெரியவில்லை..

சினிமாக்காரர்களின் அடிமைகளாகிவிட்ட தமிழர்கள் இன்றுவரை அந்த மாயைகளிலிருந்து விடுபட்டதாக தெரியவில்லை..சினிமாவில் சற்று பிரபலாகிவிட்டால் எப்போ அரசியலில் குதிப்பாய் என்று பத்திரிக்கைக்காரன் கேட்பதும், அதைப் பற்றிய செய்திகளாகவெளியிட்டு காசு பார்ப்பதும், இங்குள்ள முட்டாள்களும் எதோ அவன் அரசியலுக்கு வந்துவிட்டால் இந்தியாவே வல்லரசாகிவிடும் என்பது போலவும் அவன் பின்னால் நாயாய் அலைவதும், இது தமிழ்நாட்டின் சாபக்கேடாகி விட்டது.


இப்படி அறிவித்து ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் இவரகளது உள்நோக்கம் என்னவாக இருக்கும்? தமிழ்நாட்டுக்காரனை பிச்சைக்காரனாக்கி, இன்னும் சுரண்டுவதர்க்குதானே..
ஹொகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு ஜப்பான் நாட்டில் பிச்சை எடுக்கும் இவர்களுக்கு இந்த இலவசங்களுக்கு மட்டும் எங்கே இருந்து பொருளாதாரம் வருகிறது..?

எல்லாம் கருணாநிதி வீட்டு பணமும், ஜெயலலிதா வீட்டுப் பணமுமா? 
அதனால்தான் கருணாநிதி அறிவிக்கும் இலவசங்களை நேரடியாக எதிர்க்க துணிவில்லாமல் அதற்க்கு போட்டியாக இன்னும் இலவசங்களை ஜெயலலிதா அறிவிக்கிறார்..
ஊரெங்கும் சாராயக்கடைகளை திறந்து வைத்து எல்லாரையும்குடிகாரனாக்கி அதிலிருந்து வருமானம் பெற்று நமக்கேதிரும்பத்தரும் ஏமாற்று வேலை..
இன்னும் அனைத்து தொழில் துறைகளிலும் அரசியல்வாதிகளின் குடும்பத்தினரின் ஆதிக்கத்தை புகுத்தி கோடிகோடியாக சம்பாதிக்கின்றார்கள்..இன்னும் எங்கும் லஞ்சம் ஊழல் என்று நிர்வாகம் சீரழிந்து கிடக்கிறது..
காங்கிரசின் அனைத்து மிரட்டல்களுக்கும் பணிந்து..இன்று
கூனிக்குறுகி நிற்கிற திமுக மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள
முயற்ச்சிப்பது ஏன்?

கருணாநிதியிடம் இருந்து ஆட்சியைப் பறிக்க ஜெயலலிதா
 என்னன்னேம்மோ செய்கிறார்..கஜானா காலி என்று
சொல்லிக்கொண்டே இலவச திட்டங்களை அறிவிப்பது ஏன்?

மாபெரும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஒருபக்கம் நடவடிக்கை
அதே கட்சியுடனேயே பிடிவாதமாக காங்கிரஸ் கூட்டு வைப்பது ஏன்?

பூரண மதுவிலக்கு கொண்டுவர வற்புறுத்துவோம் என்று
சொல்லிக்கொண்டே பாமக திமுகவுடன் கூட்டணி அமைப்பது ஏன்?

அடுத்த முதலமைச்சர் என்று சொல்லிக்கொண்டு 41 சீட்டுகளுக்காக ஜெயலலிதாவின் வீடு தேடி விஜயகாந்த் செல்வது ஏன்..?
இதில் மக்கள் நலம் என்று என்ன உள்ளது..
அனைவரும் கொள்ளைக்காரர்கள்தான்..ஏமாற்றுக்காரர்கள்தான்..
இறுதியில் இலவசங்கள் மூலம் தமிழ்நாட்டு மக்களை நிரந்தர சோம்பேறிகளாகவும் பிச்சைக்காரர்களாகவும் ஆக்கிவிட முயற்ச்சிக்கும் இந்த அரசியல்வியாதிகளிடம் இருந்துதமிழ்நாட்டுக்கு எப்போதுதான் விடுதலை?
நாளைக்கு ஆளுக்கொரு கார், பஸ், டிரையின் இன்னும் விமானம் 
என்று இலவச அறிவிப்பு செய்துவிடுவார்களோ ............?