தி.மு.க ஜெயித்தால் வடமாவட்டங்கள் ஸ்டாலினுக்கு இலவசம்,
தென் மாவட்டங்கள் அழகிரிக்கு இலவசம்...அம்மா ஜெயித்தால்
சசிகலா உறவினர்களுக்கு தமிழ்நாடே இலவசம்..மொத்தத்தில் தமிழன்
எப்பவும் கோவணாண்டி...
--------------------------------------
ஆனாலும் தலைவரே நீங்க ரொம்ப உசார்தான்..மறந்தும் கூட
டிஷ் ஆண்டனா இலவசம் நு அறிவிக்க மாட்டீங்களே..அறிவிச்சிட்டா..
குடும்ப தொழில் பாதிக்கப்படுமே
------------------------------------------------
இலவச திட்டத்தையே நம்பி ஆட்சி நடத்தும் ஒட்டுண்ணிகளே ! நரேந்திரமோடி யை போல உண்மையையும் நாட்டின்
வளர்ச்சியில் அக்கறையும் கருத்தில் கொண்டு அவரைப்போல
இலவசம்
இல்லை என தைரியமாக தேர்தல் அறிக்கை விடுபவர்களை கண்டிப்பாக
தமிழ் மக்கள் ஆதரிப்பார்கள்
-------------------------------------------------------------------------
தமிழகத்தின் மூலதனத்தினைப் பெருக்குவதற்கான
வழியினை சொல்லாமல் வெறும் இலவசங்களை மட்டும் சொல்லி
வோட்டு கேட்பவர்களும், அதனை நம்பி வோட்டு போடுபவர்களும்
நிகழ்காலச் சுகத்திற்க்காக எதிர்காலத்தினை இழப்பதற்க்குச் சமம்.
புழுக்களை இரையாக்கி மீனைப் பிடிக்கலாம், ஆனால் திமிங்கலங்களை
பிடிக்க முடியுமா? முடியும் என்கிறது இந்த தேர்தல் அறிக்கை.
சிந்தியுங்கள் மக்களே. இலவசத்திற்கு மயங்காதீர்கள், தேர்தலை வியாபாரச்
சந்தை ஆக்காதீர்கள்
---------------------------------------------------------------------
தினமும் இட்லி ,கொதுபோரோட்டா ,சிக்கன் 65,மட்டன்,
மீன் ப்ரி ,பக்கோடா, ஆகியவையும், புதுமண தம்பதிகளுக்கு
தேனிலவும், ஆஸ்பத்திரி செலவு அத்தனையும் செய்தல்
இந்தமுறை நீங்கள் வெற்றிபெறலாம் ,அனால் பதிவி எட்டபிறகு
அடுத்த தேர்தலில் என்ன ப்ரீ ஆக குடுக்கலாம் என்று இப்பவே
யோசிக்க வேண்டும்
---------------------------------------------------------------
-----------------------------
இதெல்லாம் அரசு பணத்தில் இருந்து குடுக்கிறீங்க! நீங்க
குடும்பத்தோட சேர்ந்து அடிச்ச 2G கொள்ளையில் இருந்து
எவ்வளவு கொடுக்கப்போறீங்க? தேர்தல் என்கிறதை
கேலிகூத்தாக அடித்து ஜன நாயக அமைப்பை இந்த
மாதிரி இலவசங்களை தந்து சிதைத்த அந்த ஒரு காரணம்
போதும் உங்களை தூக்கி எறிய! வெட்கக்கேடு!
உங்களுக்குத்தான் எப்படியும் மின்னணு வோட்டு பதிவு
இயந்திரம் இருக்கே? அதுவும் 1 மாதம் உங்க custody இல
தானே இருக்கப்போவுது, அதுல விளையாடினா போதாதா??
-------------------------------------------------------------
இவனுகளிடமிருது மிக்சி அல்லது கிரைண்டர் வாங்கித்தான் தோசை
சட்னியை பார்க்க முடியும் என்ற நிலையில் பிச்சைகாரர்கள்
இருக்கும்வரை இலவசங்கள்
தொடரும். இவற்றை இயக்க மின்சாரம் எவனிடம்
----------------------------------------------------------------
மானியம்,இலவசம் தேவை.. மாற்று கருத்து கிடையாது.. அவற்றால்
என்ன பயன் என்பதை மக்களுக்கு விளக்கவேண்டும்.. காமராஜர்
கொண்டு வந்த இலவசகல்வி, மதிய
உணவு திட்டதால் என் தந்தை படித்தார்... என் குடும்பம் பயன் பெற்றது...
.இப்போது குடுக்கபோகும்
கிரைண்டர் அல்லது மிக்சிyal என்ன பயன்??....விளக்க வேண்டும்..
இல்லை எனில் எங்கள் வரி பணம்
வீணாக்கபடுகிறது..இதை தடுக்க எதாவது வழி உண்டா? சட்டம்
தெரிந்தவர்கள் உதவுங்கள்.....Please.....
----------------------------------------------------
இனி கொள்ளை அடிக்க இந்தியாவிலேயே பணமே இல்லையே
இன்னமுமா ? அட தாங்காதுட சாமி...உங்களுக்கு இருக்க திறமைக்கு
நீங்க பேசாம அமெரிக்க
அதிபர் பிரிட்டன் அதிபர் என போட்டியிடலாமே..அப்பதான்
உலத்தையே
சுரண்டலாம்...
நீங்க கொடுக்கிற இலவசம் எல்லாம் எங்களுக்கு வேண்டாம்
எங்களுக்கு
பொண்ணு தான் கிடைக்க
மாட்டேங்குது, பேசாம அறிக்கைல அதையும் சேத்துருக்கலாமே..
அதோட தினமும் ராத்திரி ஒரு குவாட்டர்
சேத்துருங்க ப்ளீஸ்...
---------------------------------------------
ஒரு மிக்சியோ கிரைண்டரோ 1500 ரூபாய்க்கு வாங்கி விடலாம் .
ஆனால் விலைவாசியால் நமக்கு ஆகும் மாதசெலவை கணக்கில்
பார்த்தால் வருடத்திற்கு 28800 ரூபாய்.
இந்த இருபத்திஎட்டாயிரத்து என்னூரில் கிரைண்டர் ,மிக்சி ,
வாஷிங் மிஷின் ,எல்சிடி டிவி அனைத்தையுமே
வாங்கலாம். அதுமட்டுமில்லாமல் அரசு நடத்தும் டாஸ்மாக்கில்
குறைந்தபட்சம் ஒரு பாட்டிலுக்கு
ஒரு ரூபாய் உயர்த்தினால் கூட ஒரேநாளில் கோடிக்கணக்கான ரூபாய்
கிடைக்கும்.இந்தப்பணம்
யாருடையது எங்கிருந்து வருகிறது என்று பாருங்கள் .எல்லாம் அன்றாட
கூலி வேலை பார்க்கும்
பாமரனிடமிருந்து தான்.எனவே படித்தவர்கள் மற்றும்
சிந்தனையாளர்கள் இதனை பாமரனுக்கு
உணர்த்தி சிந்தித்து செயல்பட வைக்க வேண்டும் என்பதே எனது
வேண்டுகோள் .இலவசத்தால் எந்நாளும்
வெற்றிபெற முடியாது?..
--------------------------------------------
ஓட்டுக்கு காசு குடுக்க வந்தா,. வாங்காதிங்க..கம்மியா வாங்காதிங்க
..... ஒரு ஓட்டுக்கு 5000 ருபாய் கேளுங்க ...நம்மகிட்ட கொள்ள
அடிச்ச
பணம் தான் ..யாருக்கு வேணும்
கேவலம் 1000 ரூபா கிரைண்டர் ? குடுத்த டிவி , ஒரு மாசம் தாங்கல..
ஓட்ட கிரைண்டர்
கொடுத்து, எங்க குடும்பம் ஷாக் அடிச்சு சாவரத்துக்கா ? உங்க எஸ்டே
எல்லாத்தையும் வித்தாலே
விட்டுக்கு ஒரு மாருதி கார் குடுக்கலாமே .நாங்களும் பல
தலைமுறைக்கு வாழ்த்துவோம..
-----------------------------------------------
தமிழனை பிச்சைக்காரனாகவே வைத்திருந்து, இனாம் கொடுத்து
ஏமாற்றி ஓட்டுக்களை பறித்துச் செல்ல திட்டம் வகுக்கும் டாக்டர்
கலைஞர் அவர்களே. மக்கள் ஏமாற
தயாரில்லை என்பதை தேர்தல் முடிவுகளில் அறிவீர்கள்.
தமிழனைக் கொல்ல இந்தியா மிகவும் உதவியது என்று
விக்கிலீக்ஸ் கூறியிருப்பது தங்கள் அரசையும் உள்ளடக்கியதே.
தமிழர்கள் பதிலளிப்பார்கள்.
2GS ஊழல் குறித்தும் மக்கள் கவலையடைந்துள்ளனர். இம்முறை
இலவசம் எடுபட 99%
வாய்ப்புகள் இல்லை. Changes have நோ change -
------------------------------------------------
நம் இந்திய திருநாட்டில் அதிகமானோர் பேசக்கூடிய மொழியான
ஹிந்தி மொழியை முதலில் நம் பள்ளிகூடத்தில் கற்றுக் கொடுங்கள்.
பின்பு நம் பல்கலைகழகங்களில்
பிரெஞ்சு, ஜெர்மன், அரபி போன்ற அந்நிய நாட்டு மொழிகளை
கற்றுக் கொடுக்கலாம். ஹிந்தி மொழி
தெரியாமல் நம் தமிழர்கள் வட இந்தியாவில் மிகவும் கேவலப்
பட வேண்டிய நிலை இன்றும் உள்ளது.
--------------------------------------------------
20 ஆண்டுகளுக்கு மேல் முதுகலை பட்டதாரிகள் வேலைவாய்ப்பு
அலுவலகத்தில் பதிவு செய்து 10 ஆண்டுகளுக்கு மேல் அரசின்
நியமன தடை உத்தரவால் எந்த
தேர்விலும் பங்குபெற முடியாமலும் உச்ச வயதுவரம்பை
தாண்டி எதாவது அரசின் உதவி கிடைக்கும் என்று
எதிர்பார்ப்புடன் இன்றும் பதிவை தக்கவைத்திருக்கும் முதகலை
பட்டதாரிகளுக்கு எந்த வார்த்தையும்
வராத தேர்தல் அறிக்கை ஒரு உப்பு சப்பு இல்லாத தேர்தல் அறிக்கை.
வீடு தோறும் திருக்குறள்
புத்தகம் வழங்காமல் திருக்குறளை தேசியமாக்கி என்ன பயன்.
பலரை ஏமாற்றும் பழைய பல்லவியும்
சரணமும் நிறைந்த காண பாட்டுபோல் உள்ளது..
---------------------------------------
இத்தனை நாள் ஏன் கண்மாய்கள் ஆறுகள் தூர் வாரவில்லை?
படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற நடவடிக்கை
எடுக்கப்படும், கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனை பேருக்கு
வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது? கடந்த ஐந்து வருடத்தில்
மின்வெட்டு ஏன் இருந்தது? சூரிய ஒளியில் இருந்து தாயாரிக்கும்
மின்சாரம் ஏன் கடந்த ஐந்து வருடத்தில் செயல்படுத்தப் படவில்லை?
எதிர் கட்சிகள் பல போராட்டங்கள், கண்டன ஆர்பாட்டங்கள் நடத்திய
பிறகு இந்த
புத்தி வந்துள்ளதோ, இல்லை இது தேர்தலுக்கு மட்டும் அறிக்கையோ?
இந்த தேர்தல் அறிக்கையில்
நாங்கள் அடித்த ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை திரும்ப ஒப்படைப்போம்
என்று கூறியிருந்தால் நன்றாக
இருந்திருக்கும். கடந்த ஐந்து வருடமாக என்னத்த
கிழித்து கொண்டிருந்தீர்கள்? எதிர் கட்சிகள் வாய் கிழிய
கத்தினார்கள், உங்கள் காதுகளில் பஞ்சியை வைத்து அடைதிருந்தீர்களா?
இதுக்கு பேர் தான் கதாநாயகி
தேர்தல் அறிக்கையா? இந்த தேர்தல் அறிக்கை ஒரு சிறு குழந்தை கூட
செய்யுமே? ஆட்சியில் இருந்த
போது இவற்றை எல்லாம் செய்ய தோன்றவில்லை, ஸ்பெக்ட்ரம் ஊழல்,
மணல் கொள்ளையை
தவிர, ஆட்சி பறிபோகின்ற நேரத்தில் இதையெல்லாம் செய்வாராம்,
அப்படியே மக்கள் மகிழ்ச்சியில்
திளைதிருப்பார்கலாம். நாளை வரும் அதிமுக தேர்தல் அறிக்கை,
அது தான் கதாநாயகியின் தேர்தல்
அறிக்கை...
------------------------------------------------------
நன்றி-தினமலர் இணையதளம்
நன்றி-தினமலர் இணையதளம்