Pages

Tuesday, March 15, 2011

மக்களே உணமையான வேட்பாளர் கிடைத்திருக்கிறார் - dont miss him..வாக்களியுங்கள்


வீட்டுக்கு ஒரு வாஷிங் மெஷின்! - இது மன்சூரலிகானின் வாக்குறுதி

Mansoor Ali Khan

வரும் தேர்தலில் காங்கிரஸை எதிர்த்து மட்டுமே போட்டியிடுவேன். ஜெயித்தால் வீட்டுக்கு ஒரு வாஷிங் மிஷின் அரசிடம் பெற்றுத் தருவேன் என்று கூறியுள்ளார் நடிகர் மன்சூரலிகான்.


வருகிற தமிழக சட்டமன்ற தேர்தலில் சுயேச்சையாப் போட்டியிடப் போவதாகத அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

வருகிற சட்டசபை  தேர்தலில் காங்கிரஸ்  போட்டியிடும் 63 தொகுதிகளில், ஏதேனும் ஒரு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவேன். காரணம் காங்கிரஸ் கட்சி தமிழரின் விரோதி.

நான் செய்கிற பிரசாரத்தில் மக்கள் நிச்சயம் வாக்களிப்பார்கள். யார் ஆட்சி அமைக்கிறார்களோ, அவர்களோடு சேர்ந்து நான் போட்டியிடும் தொகுதி மக்களுக்காக பாடுபடுவேன்.

போலியான, பொய்யான வாக்குறுதிகளை தர நான் விரும்பவில்லை. நான் வெற்றி பெறுகிற தொகுதியில் அனைத்து வீடுகளுக்கும், குடும்பத்துக்கு ஒரு வாஷிங் மிஷின் கொடுக்கச் செய்வேன்," என்று கூறியுள்ளார்.