Pages

Saturday, April 30, 2011

இனியும் ஒரு போர் வேண்டாம்!


இனியும் ஒரு போர் வேண்டாம்!

 

 

ஈழ நண்பர் அனுப்பிய மெயில் ..அனுபவங்களை கவிதையாக சொல்லி இருக்கிறார் ..எனக்கு கவிதையாக தெரியவில்லை, ஈழ வாழ்வின் துயரங்கள் தான்  தெரிகிறது..

அன்றொரு நாள் அன்பொழுக
அனைவருமே ஒன்றாக இருந்தோம்
ஊர் பிடிக்க, உறக்கமின்றிப்
பலர் வருகையிலோ
ஊரிழந்து, உடுத்த உடையுடனே
உணர்விழந்து அகதியானோம்,
சொந்த வீடு, உடு புடவை,
உறவுகளை தொலைத்தவராய்
கால் போன போக்கில்
நாம் நம்பினோர்
கைவிட மாட்டார்கள் எனும் நம்பிக்கையில்
ஒரு சிலரும்;
பாஸ் கிடைத்தால் ஆமியிடம்
போகலாம் பாஸ் கிடைக்காதா
எனும் அங்கலாய்ப்பில்
பலபேரும் ஓடத் தொடங்கினோம்!



ஒரு நாள் உறங்குதற்கு நேரமின்றி
ஒவ்வோர் ஊராய் இழந்தபடி
ஓடத் தொடங்கினோம்
கஞ்சியும், பருப்புக் கறியும்
சில நேரம் உணவாகக் கிடைப்பினும்
காணிகளில் கிடைக்கும்
இளநீரும், மாங்காய்களுமே
எம் பசியைப் போக்கின
ஆறுதலுக்கு யாருமின்றி
அழுது விழி நனைய
இறைவனிடம் மன்றாடினோம்,

நித்தம் நித்தம் எறிகணைகள்
நீண்ட தூரப் பல்குழல்கள்( multi barrel rocket launcher)
சுற்றி எங்கள் குடிசைகளில்
வீழும்,
வட்ட மிடும் விமானங்கள்,
வரிசையாக குண்டு வீசும்
நட்ட நடு இரவினை
பரா லைற் வெளிச்சமாக்கும்
குற்றுயிராப் பல உயிர்கள்
குருதி வெள்ளத்தில் பல உடல்கள்
செத்துவிடத் தோன்றிச்
சேடம் இழுக்கையிலோ
குடிநீரும் இல்லாது
உடல் அந்தரத்தில் தள்ளாடும்;

கால்கள் துண்டாகித் துடித்தபடி,
கைகள் இழந்து கதறியபடி
எங்கள் உறவுகள் கண்ணீர் வடிக்கையிலோ
இனியேன் இதெல்லாம்
என எண்ணத் தோன்றும்!
மருத்துவ வசதி ஏதுமின்றி
மரணத்தில் விளிம்பில்
நின்று மன்றாடி அழுதோம்,

இனியும் வாழ விடுங்கள்,
எங்களைப் போக விடுங்கள் என
இரஞ்சிக் கேட்டால்
காலால் உதை விழும்,
துவக்கால் துரத்தியும் அடி நிகழும்


உயிரைக் கையில் பிடித்து
உணர்விழந்து இருக்கையிலோ
காலையில் வானொலியில்
செய்தியறிக்கைக்கு முன்பதாக
நாடு இதை நாடாவிட்டால்
ஏது வீடு எனக்
கவிஞர் அவலத்தின்
மத்தியிலும் கவிதைப் புரட்சி செய்வார்!


உணவேதுமின்றி பட்டினியால் வாடி(ச்)
சாகும் தறுவாயில் இருந்து
சகோதரனை, தாயைத் தந்தையைத்
தங்கையினைக் குண்டு
துளைக்கியில் பார்த்திருந்து- ஓடிப்
போகும் வழியேதுமின்றி
போருக்குள் அகப்பட்ட எங்களுக்கா
போரிட மனம் வரும்?????!

வேண்டாம்!.................இனியும் ஒரு போர்  

Thursday, April 28, 2011

ராஜபட்சே......சே..... ..சே.......காலம் தான் தண்டிக்கவேண்டும்...


ராஜபட்சே......சே..... ..சே.......காலம் தான் தண்டிக்கவேண்டும்...

இலங்கை அதிபர் ராஜபட்ச ஒரு போர்க் குற்றவாளி என்று தண்டிக்கப்படுவதற்கான அனைத்துக் காரணிகளும் இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன. இலங்கை அதிபர் ராஜபட்ச மீது சர்வதேச விசாரணை வேண்டும்.




ஆனால்  களத்தில் இறங்கிப் போராட வேண்டிய நேரத்தில், இவர்கள் சம்பந்தப்பட்ட வேறு விசாரணை நடந்து கொண்டிருக்கிறதே, இவர்கள் அதைப்பற்றித்தானே கவலைப்படுவார்கள்.


இவர்களே குற்றவாளிகளாக இருக்கிறபோது யாரைப் போர்க் குற்றவாளியாக்குவதற்காகப் போராடுவது?.............. :தினமணி 

Wednesday, April 27, 2011

தமிழர்களின் விருப்பம்...........


தமிழர்களின் விருப்பம்...........


தமிழகத்தில் உள்ள பல வீராவேச அமைபுகள் உடனே இலங்கைமீது போர் தொடுக்க வேண்டும் என்றெல்லாம் கதைத்தனர். வார்த்தைகளால் மக்களை உசுப்பேற்றும் கலையில் வல்லவர்கள் பலர் நடக்க முடியாதைதை எல்லாம் பேசினர்..அதனால் என்ன மிச்சம் .. அழிந்தது ஒரு இனம் தான் 
கண்ணுக்குகண், பல்லுக்குப்பல் கேட்கும் நிலையில் யாரும்மில்லை. இலங்கை அரசாங்கம் இழைத்த போற்குற்றத்தில் எம் இனம் இழந்தது கொஞ்சநஞ்சமல்ல. அதைவிட மிக முக்கியமானது இன்னும் தொடரும் இழப்பு உடனடியாக இத்தோடு நிறுத்தப்படவேண்டும்.பாதுகாப்பு வளையத்திற்குள் வந்தவர்களை, உலகின்மிகக்கொடூரமானதொரு முகாமிற்குள் அடைத்து வைத்து சிறுகச் சிறுக உடல்ரீதியாக, உளவியல்ரீதியாக சிதைக்கும் அவலம் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.

போரின்போது நடந்த மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையிலான திட்டங்களை அமல்படுத்த வேண்டும்.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இதில் சிறப்புக் கவனம் அளிக்கப்பட வேண்டும்.
விரைவில் அங்குள்ள தமிழர்கள் பாதுகாப்பான வாழ்க்கையைபெற்றிட
உலக நாடுகளின் நிர்பந்தத்தை இந்தியா கோரிட வேண்டும்.
இன்னும் முகாம்களில் எஞ்சி நிற்கும் மனித இனத்தை மீட்டெடுத்துக் காப்பாற்றவேண்டியது மிக மிக அவசரத்தேவையென்பதை மனிதாபிமானம் கொண்ட உலக நாடுகள் உணரவேண்டும்.
இவ்வளவு தூரம் பாதிக்கப்பட்ட மக்கள் இனியாவது சுதந்திரக்காற்றை சுவாசிக்கவேண்டும், அத்தோடு இனப்படுகொலை செய்த இராஜபக்‌ஷே (எ) இலங்கையின் குடும்ப அரசாங்க நிறுவனம்அதற்கான தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும். காலம் எல்லாவற்றினும் வலிமையானது….. பார்ப்போம்நல்லதே நடக்க(னு)ம்.

இது எனது விருப்பமும் கூட............தமிழனாக இல்லை ....................ஒரு மனிதனாக...........


....

Tuesday, April 26, 2011

ஒரு கற்பனைத்திறன்...!


 ஒரு கற்பனைத்திறன்...!


இதுவும் என்னுடைய சாப்ட்வேர் நண்பன் அனுப்பியதான் .. நம்பி பார்க்கலாம் 
மனிதனின் கற்பனைத்திறனுக்கு ஒரு அளவில்லை...
கீழே உள்ள ஒரு animationஐ பாருங்கள்.
ஒரு animatorம் அவரது படைப்பும் சண்டை போட்டுக்கொள்வதை
எவ்வளவு சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள்.





Monday, April 25, 2011

எப்படி சொல்வது...



எப்படி சொல்வது...






    

எல்லாவற்றையும்
சொல்லி விட முடிகின்றது..

சொந்தங்கள்
ஆசையாக கட்டிய வீடு
பிறந்த மண்

விவசாயம் பார்த்த வயல்கள்..
எங்க ஊரு கோவில்கள் ..
படித்த பள்ளி.. விளையாடிய மந்தை..
சேகரித்த புத்தகங்கள்
குமிழ் போட்ட கதவு

என
எல்லாமே வந்து போகும்
நடுநிசியில்
அயல் நாட்டுக்கு வந்து
அகதியாய்
தவிப்பதை எப்படி சொல்வது ?
"ஏப்பா.. இங்கே வந்தோம்"
என கேட்கும் மகனிடம் ......
.......

(புகைப்படம் என் கிராமத்தில்எடுத்தது)

Sunday, April 24, 2011

ரசித்த சிலபாடல்கள்..


ரசித்த சிலபாடல்கள்.. 

1)தற்சமயம் கேட்ட வைரமுத்து பாடல்.. தாயை பற்றி அழகாக  சொல்லிருக்கிறார்.


2) சிறுவயதில் இலங்கை வானொலியில் அதிகமாக ஒலிபரப்பப்பட்ட பாடல்.. நீங்களும் கேளுங்களேன்..அழகான இசை.



tamil songs by jkumar

Saturday, April 23, 2011

ஊழலும்--தமிழினமும்...காங்கிரஸ்


ஊழலும்--தமிழினமும்...காங்கிரஸ் 
:: ராகுல் சார் நீங்க ஊழலை ஒழிக்கணும்னு சொல்லறீங்க, சீமான் காங்கிரசை ஒழிக்கணும்னு சொல்றாரு, நீங்க ரெண்டு பெரும் சொல்லறது ஒன்னு தான் போல? ...!
-------------------------------------------------------------------------------------------------------
என் நாட்டு மக்களை கொன்னா, கொன்ன நாட்டு மக்களை திருப்பி அடிப்பேன் னு பக்கத்துக்கு நாட்டை சொன்னா தேசிய பாதுகாப்பு சட்டம்

 என் கொடும்பாவிய எரிச்சா சொந்த தமிழ் நாடே பத்திகினு எரியும் என் அறிக்கையில் னு சொன்னா காங்கிரஸ் தலைவர் பட்டமா?
:: சார் அந்த வார்த்தையை (தமிழ் நாடே பத்திக்கினு எரியும்சத்தியமா, சீரியசாவசொன்னிங்க?

கேமரா இல்லாமல் போட்டோ எடுக்கும் அதிசய சாப்ட்வேர்


கேமரா இல்லாமல் போட்டோ எடுக்கும் அதிசய சாப்ட்வேர்

இதை நீங்கள் 230 வது நபராக வாசிக்கிறீர்கள்
Submit


எனது நண்பன் ஒருவன் ( விஜய்) அமெரிக்காவில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகின்றான் . அவர்கள் ஒரு அதிசய சாப்ட்வேர் தயாரிக்கின்றனர். அதாவது கேமரா இல்லாமல் போட்டோ எடுக்கும் ஒரு சாப்ட்வேர் . இவனும் அந்த குழுவில் ஒருவன் . அந்த சாப்ட்வேர் இன் மிக சிறிய மாதிரி ஒன்றை எனக்கு அனுப்பி இருந்தான் .

அதை பார்த்ததும் மிகவும் ஆச்சர்யப்பட்டேன் , அதிசயப்பட்டேன் . இதை நம் நண்பர்களுக்கு சொல்ல வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் உங்களுக்கு வழங்குகிறேன் . 

இந்த சாப்ட்வேர்ய் பயன்படுத்துங்கள் தயவு செய்து யாருக்கும் மெயில் செய்யவேண்டாம். விருப்பம் உள்ளவர்களை என் வலையில் இருந்து டவுன்லோட் செய்ய சொல்லுங்கள் .

சாப்ட்வேர் டவுன்லோட் CLICK செய்ய பண்ணவும்

Thursday, April 21, 2011

TWITTER


1)      twitter.com/rsekar
லோக்பால் மசோதாவுக்கு ஆதரவு : சோனியா பதில் # 
இது திருடனே போலீசுக்கு ஆதரவு மாதிரி இருக்கு... #TNfisherman #Defeatcongress

2) twitter.com/kolaaru 
ஜெயலலிதா மீது கருணாநிதி அவதூறு வழக்குகள் பரவாயில்லையே இப்ப இருந்தே எதிர்கட்சியா செயல்பட ஆரம்பிச்சுடீங்க .. வாழ்த்துகள் !!



        3)    Pattapatti பட்டாபட்டி 
           விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி#சே. தங்கபாலுவை ஏற்றி   விட்டிருக்கலாம்.
        வடை போச்சே..!!
4) twitter.com/j.kumar

நான் ஒரு அறிக்கைவிட்டால் தமிழகமே பற்றி எரியும்: 
கே.வி.தங்கபாலு - எறியும்னு எழுதறதுக்கு எரியும்னு போட்டுட்டாய்ங்களோ
 #டவுட் - K
 
5) twitter.com/g_for_guru

சொத்துக்களை ரம்லத்துக்கு எழுதிக் கொடுத்தார்
பிரபுதேவா!#சொத்த வித்து செகண்ட் ஹான்ட் வண்டி வாங்குன முத கூமுட்ட நீதான்ய்யா!!!
6)twitter.com/ vel 

கடவுள் ஒருவனைத் தண்டிக்க விரும்பினால் அவனுக்குத் 
திருமணம் பற்றிய நினைப்பை உண்டாக்குவார் !

7) twitter.com/tamiltel

ஒரு மணி நேரத்தில் உடம்பு இளைக்க வழி # 
போட்டோஷாப் கத்துக்கங்க ..

எனக்கு பிடித்த பாடல்.

எனக்கு பிடித்த பாடல்.. அழகான இசை..
என்னுடைய சிறுவயதில் இலங்கை வானொலியில் அதிகமாக ஒலிபரப்பப்பட்ட பாடல்.. நீங்களும் கேளுங்களேன்..



001 by jkumar


Tuesday, April 19, 2011

"முதல்வர்"ஜெயலலிதாவுக்கு காத்திருக்கும் ஆப்புக்களும்,மங்குனி அமைச்சரின் ஆலோசனைகளும்



முதல்வர்"ஜெயலலிதாவுக்கு காத்திருக்கும் ஆப்புக்களும்,
மங்குனி அமைச்சரின் ஆலோசனைகளும்

எனக்கு வந்த மெயில்..உங்களுக்காக..






"ஒரு வேளை" ஜெயலலிதா முதல்வரானால் காத்திருக்கும் சவால்கள்...


தமிழக அரசின் மோசமான நிதி நிலைமை. 
கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி அளவில் கடன் இருப்பதாக பேச்சு. (இலவசங்களை தொடர வேண்டிய கட்டாயம் இருப்பதால் நிதி நிலைமை இன்னும் மோசமாகும்)


தொடர்ந்து நீடித்து வரும் மின்சார பிரச்சனைகள்.


விஷம் போல அதிகரித்து வரும் விலைவாசி.


நலிந்து வரும் விவசாயமும், விவசாயிகளின் வாழ்வும் (ஏற்றம் என்பது விவசாயின் வாழ்வில் வரும் போது தமிழகம் நிரந்தரமாக முன்னேற்றப்பாதையில் நடைபோட ஆரம்பிக்கும்)


நிரந்தர பிரச்சனைகளாக இருக்கும், முல்லை-பெரியாறு, காவிரி பிரச்சனை, தமிழக மீனவர்கள் சிங்கள ராணுவத்தால் அடிக்கடி தாக்கப்படுவது.


எல்லா மட்டங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழல்.


அரசின் நடைமுறைகளில் அதிகரித்திருக்கும் தனிப்பட்ட சிலரின்அதீததலையீடுகள்.




மங்குனி அமைச்சரின் "தில்லாங்லங்கடி" ஆலோசனைகள்: 



விடுங்கம்மா, ஆட்சிக்கு வந்த முதல் நாளே "கஜனா காலி, கருணாநிதி அத்தணையும் சுரண்டி விட்டு போய் விட்டார்" என்று டெரர் அறிக்கை வெளியிட்டு மக்களை முன்கூட்டியே உஷார் பண்ணிவிடலாம். பயபுள்ளைகளும் கொஞ்சநேரம் அழுதுட்டு தூங்கிருவாங்க.


நிதி நிலைமையை சீராக்க, டாஸ்மார்க் நிறுவனத்தில், நம்ம மிடாஸ் கம்பெனி தயாரிப்புகளில் நிறைய புதிய வகைகளை உருவாக்கி, விற்பனையை அதிகமாக்கி, கஜானாவை நிரப்புதல்.


மின்சார தட்டுப்பாட்டிற்கு, கேரளா மற்றும் கர்நாடக அரசுகளுடன் கருணாநிதி, ரகசிய ஒப்பந்தம் போட்டுக்கொண்டதால் தான் மின்சார தட்டுப்பாடு வந்தது என்று முழங்கலாம்.


சீசன் பிரச்சனைகளாகிய காவிரி, முல்லை-பெரியாறு பிரச்சனைகளில் அந்த நேரத்துக்கு ஏற்ப, தபால்-தந்தி, உண்ணாவிரதம் என ஏதாவதுடிராமா நடத்தி அப்போதைக்கு ஆறப்போடுவது.


ஊழலை ஒழிக்க என்று தனி அமைச்சகம் அமைத்து. முந்தைய அரசுகளின் கள்ளத்தனங்களை விசாரணை கமிஷன் மூலம் பெரிய தலைகளை, நள்ளிரவில் உருட்டி மக்களின் பிற கவலைகளை மறக்க வைத்தல். 


ரஜினிகாந்தை கொஞ்சம் வம்புக்கு இழுத்து, தமிழக ஊடகங்களை நிரப்பி, வெறும் வாயை மெல்லும் மக்களுக்கு, அவல் கொடுத்து,யதார்த்தங்களை மறக்கடிப்பது.


நிழல் அரசாங்கம் நடத்தும் மன்னார்குடி ராஜவம்சத்துக்கு அதிக அதிகாரம் கொடுப்பதற்க்காகவே சசிகலாவை துணை முதல்வராக்குவது.




மதியூக அமைச்சரின் யதார்த்த ஆலோசனைகள்:


அதிக செலவு வைக்கும் அத்தியாவசியமில்லாத இலவச திட்டங்களை இரண்டு வருடங்களுக்கு நிறுத்தி வைத்து, அரசின் பயனுள்ள நலத்திட்டங்களுக்கு மட்டும் நிதியை ஒதுக்கி, நிலைமையை சீராக்கலாம்.


இயன்ற வரை இலவசங்களை குறைத்து, அந்த பணத்தினை மக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு உபயோகப்படுத்தலாம்.


காற்றாலைகள் உருவாக்குதல்,  மரபு சார எரிபொருள்கள் மூலம்மாற்று வழிகளின் மூலம் மின்சார தேவைகளை ஈடுசெய்யலாம்.


நதிகள் பற்றிய பிரச்சனைகளுக்கும், ,மீனவர் பிரச்சனைகளுக்கும் வெறுமனே டிராமா நடத்திக்கொண்டிருக்காமல் நிரந்தர தீர்வை உண்டாக்க, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தல்.


ஊழலை எந்த மட்டத்திலும் அனுமதிக்காமல் முன்னுதாரணமாகஇருத்தல்.


தனிப்பட்ட ஒரு குடும்பத்தாரின் நிழல் அரசாங்கத்திற்கு, வழி விட்டுவிட்டு, ஜெயலலிதா நல்லவர், சசிகலா தான் கெட்டவர்  என்று உங்களுக்காக யார் பரிந்து பேசினாலும் அது எடுபடபோவதில்லை.

(பொழுது போக்க வளர்ப்பு செல்லப்பிராணிகள் மட்டும் உங்களிடம் இருக்கட்டும் - வளர்ப்பு மகன்களும் வேண்டாம், அவர்தம் திருமண கூத்தும் வேண்டாம்.)


பழிவாங்கும் நடவடிக்கைகளிலு, திரைப்பட துறையினரின் பாராட்டு விழாக்களிலும் நேரத்தை வீணாடிக்காமல், எளிய ,மக்களுக்கான ஆட்சி நடத்தி, பெண் எம்.ஜி.ஆர் என அடித்தட்டு மக்களிடம் பெயர் வாங்க வேண்டும்.


மக்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது, தடாலடி நடவடிக்கைகளை அல்ல,நம்பகத்தன்மையை மட்டும் தான். எல்லோருக்கும் இணக்கமான அரசை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இப்போது கூட தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்று நீங்கள் சொன்னது உங்கள் தன்னம்பிக்கையை காட்டினாலும், கூட்டணி கட்சிகளுக்கு பூச்சாண்டி  காட்டி,கலவரப்படுத்தாமல், அவர்களின்ஆலோசனைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  
ஜெயலலிதாவுக்கு ஒரு வார்த்தை:


நீங்கள் எதையெல்லாம் கலைஞரின் குறைபாடுகள் என்று சுட்டிக்காட்டி, 
மக்களின் ஓட்டுக்களை வாங்கினீர்ளோ, அதே தவறுகளை நீங்களும் செய்யாமல் இருக்கவேண்டும் என்பதே சாமானிய மக்களின் எதிர்பார்ப்பு.



டிஸ்கி:
மங்குனி அமைச்சர் சொல்வதை ஜெயலலிதா கேட்பாரா அல்லது மதியூக அமைச்சர் சொல்வதை ஜெயலலிதா கேட்பாரா என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

A.D.M.K. க்கு வாக்களித்தவனின்  எதிர்பார்ப்பு..   

அரசியல் TWITEES.....



 அரசியல் TWITEES...........


TBCD டிபிசிடி 
<ஊழலை ஒழிப்பதில் அமைதியாக சில பணிகளைச் செய்து கொண்டிருக்கிறேன்-ராகுல் காந்தி> அம்மாவைக் கூட்டிட்டு இத்தாலிக்கு மொத்தமா போறீங்களா ?
  
J.KUMAR... குமார் 
தங்கபாலு #tnfisherman படுகொலையயைக் கண்டித்து போராடுறார் ! #இதை விட வேற ஒரு அவமானம் தமிழர்களுக்கு இனி வரபோவதில்லை.

இலங்கை தூதரகம் முன் ஆர்ப்பாட்டம். தங்கபாலு கைது #இப்ப இந்த ஓநாய்க எதுக்கு அழுகுதுனு தெரியலேயேப்பா.!

Kaniyen கனியன் மீனவர் படுகொலை கண்டித்து இலங்கைதூதரகம்முன் ஆர்பாட்டம் -தங்கபாலு#தமிழககாங்கிரஸ் பிரச்சனையை திசைதிருப்ப இதைவிட எனக்கு வேறு வழி தெரியவில்லை!
minimeens minimeens இலங்கை அரசிடமே போர் குற்ற விசாரணையை செய்ய சொல்ல ஐநா முடிவு #அதாவது நாம ஊழல் தடுப்புக்கு தலைவரா தாமஸை நியமிச்ச மாதிரி
J.KUMAR குமார்
திருவள்ளூர் அருகே பாமகவினரை தாக்கிய திமுகவினர் # ஜெயாவை மீண்டும் அன்பு சகோதரி என கூப்பிட மருத்துவருக்கு காரணம் கெடசிடிச்சு.
 agnipaarvai agnipaarvai 
இலவசங்களை கேலி செய்வோர் ஏன் டாடாவுக்கும் அம்பானிக்கும் கொடுக்கும் இலவசங்களை பற்றி கேட்பதில்லை?ஏன் அவர்கள் அரசின் இலவசங்களை மறுப்பதில்லை? 

J.KUMAR குமார்
மத்திய அமைச்சர் மீது செருப்பு, முட்டை வீச்சு # புதுசா ஏதாச்சும் யோசிங்கப்பா இதையே எவ்ளோ நாளைக்கு பண்ணுவீங்க போரடிக்குது

mayavarathaan 
மாயவரத்தான்.... 
நல்லவேளை... சச்சின் விளையாடினாலே இந்தியா தோற்று விடும் என்று புள்ளி விபர புளிகள் (கொ.எடுத்தது) இன்னும் புரளிவிடவில்லை.

minimeens minimeens 

அலுவலகத்தில் மேனேஜர் மிஸ்டர் என்று உங்கள் முழுப்பெயரையும் கூப்பிட்டால் நீங்கள் பிரச்னையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம் #வேலை விதிகள்

J.KUMAR குமார்
ஏதாவது ஒரு பெண்ணை ட்விட்டர்லயோ,ஃபேஸ்புக்லயோ ஃபாலோ பண்ண தயக்கம்# நீங்க ஏன் அவளை ஃபாலோ பண்றீங்க?@மனைவியின் கேள்வி



vedhalam அர்ஜுன் 
ஹோட்டலில் நாம் ஆர்டர் செய்த பின்பு அருகிலிருப்பவர் சாப்பிடுவதை பார்த்து "அட அதை ஆர்டர் பண்ணிருக்கலாமே" ன்னு தோன்றுவது #மனித_இயல்பு