Pages

Tuesday, April 12, 2011

ஓட்டுப்போடப் போவதற்கு முன்பு ஒரு நிமிடம்…


ஓட்டுப்போடப் போவதற்கு முன்பு ஒரு நிமிடம்


·                       குப்பை லாரியில் வைத்து,
·                       கார் ஸ்டெப்னியில் வைத்து,
·                       108 ஆம்புலென்சில் வைத்து,
·                       சவம் சுமக்கும் அமரர் ஊர்தியில் வைத்து,
·                       காவல்துறை வாகனத்தில் வைத்து,  
·                       காய்கறி மூட்டைக்குள் வைத்து,
·                       பஸ்ஸில், லாரியில், அரிசி மூட்டையில்......என இடம் விட்டு     இடம் விதவிதமாய் பணம் கடத்தியாகிவிட்டது.

       இம்புட்டு சிரமப்பட்டு எனக்குன்னு தேடிவந்து காசு தர்றியே,அவ்வளவு      நல்லவனா நீ!!!?// இது ஏது ராசா?, எங்க ராசா இத்தன காசு சம்பாதிச்ச?

களை பறிச்சியா? கரும்பு வெட்டினியா? கல்லு ஒடைச்சியா? கட்டிடம் கட்டுனியா? ஆட்டோ ஓட்னியா? ரிக்‌ஷா ஓட்னியா? விவசாயம் பண்ணினியா? ஆடு மேச்சியா? மாடு மேச்சியா?  தண்ணி பாச்சினியா?
என்ன வேலை செஞ்ச சாமி? இதெல்லாம் செஞ்ச  நான்,உங்கிட்ட காசு வாங்குற நிலைமையில்  கை ஏந்தி நிக்கிறனே!
ஆமா, இத்தன கஷ்டப்பட்டுஎப்டியாவது எனக்கு காசு குடுத்து, எனக்கு நல்லது செய்யணும்னு நினைக்கிறியே, அவ்வளவு நல்லவனா நீ!!!?” என என்று, இந்தச் சமூகம் ஒன்றுபட்டு குரல் உயர்த்துகிறதோ, அன்று கிடைப்பார்கள் நல்ல ஆட்சியாளர்கள்.
சீமான் பேச்சு ..............