தமிழர்களின் விருப்பம்...........
தமிழகத்தில் உள்ள பல வீராவேச அமைபுகள் உடனே இலங்கைமீது போர் தொடுக்க வேண்டும் என்றெல்லாம் கதைத்தனர். வார்த்தைகளால் மக்களை உசுப்பேற்றும் கலையில் வல்லவர்கள் பலர் நடக்க முடியாதைதை எல்லாம் பேசினர்..அதனால் என்ன மிச்சம் .. அழிந்தது ஒரு இனம் தான்
கண்ணுக்குகண், பல்லுக்குப்பல் கேட்கும் நிலையில் யாரும்மில்லை. இலங்கை அரசாங்கம் இழைத்த போற்குற்றத்தில் எம் இனம் இழந்தது கொஞ்சநஞ்சமல்ல. அதைவிட மிக முக்கியமானது இன்னும் தொடரும் இழப்பு உடனடியாக இத்தோடு நிறுத்தப்படவேண்டும்.பாதுகாப்பு வளையத்திற்குள் வந்தவர்களை, உலகின்மிகக்கொடூரமானதொரு முகாமிற்குள் அடைத்து வைத்து சிறுகச் சிறுக உடல்ரீதியாக, உளவியல்ரீதியாக சிதைக்கும் அவலம் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.
போரின்போது நடந்த மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையிலான திட்டங்களை அமல்படுத்த வேண்டும்.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இதில் சிறப்புக் கவனம் அளிக்கப்பட வேண்டும்.
விரைவில் அங்குள்ள தமிழர்கள் பாதுகாப்பான வாழ்க்கையைபெற்றிட
உலக நாடுகளின் நிர்பந்தத்தை இந்தியா கோரிட வேண்டும்.
இன்னும் முகாம்களில் எஞ்சி நிற்கும் மனித இனத்தை மீட்டெடுத்துக் காப்பாற்றவேண்டியது மிக மிக அவசரத்தேவையென்பதை மனிதாபிமானம் கொண்ட உலக நாடுகள் உணரவேண்டும்.
இவ்வளவு தூரம் பாதிக்கப்பட்ட மக்கள் இனியாவது சுதந்திரக்காற்றை சுவாசிக்கவேண்டும், அத்தோடு இனப்படுகொலை செய்த இராஜபக்ஷே (எ) ”இலங்கையின் குடும்ப அரசாங்க நிறுவனம்” அதற்கான தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும். காலம் எல்லாவற்றினும் வலிமையானது….. பார்ப்போம்… நல்லதே நடக்க(னு)ம்.
....