Pages

Sunday, April 17, 2011

கருணாநிதியை விட மிகப் பெரிய தீயசக்தி



என் நண்பன் பால்ஸ்  அனுப்பிய மெயில்.. 

சவுக்கு இணையதளதிலிருந்து

கருணாநிதியை விட மிகப் பெரிய தீயசக்தி:-

கருணாநிதி எத்தனை பெரிய தீய சக்தி என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் கருணாநிதியை விட மிகப் பெரிய தீயசக்தி ஒன்று இருக்கிறது. அது எதுவென்றால், கேடி சகோதரர்கள் என்று அழைக்கப் படும் கலாநிதி மற்றும் தயாநிதி சகோதரர்கள். இவர்கள் எப்படி கருணாநிதியை விட மிகப் பெரிய தீய சக்தியாக ஆக முடியும் என்றால் காரணம் இருக்கிறது.


தன்னால் வளர்ந்து சாம்ராஜ்யத்தை கட்டியவர்கள், தன் சொந்த மகனை ரவுடி என்று தொலைக்காட்சியில் செய்தி போட்டதை மறக்கக் கூடிய அளவுக்கு கருணாநிதி என்ன பெருந்தன்மை படைத்தவரா ?
நிச்சயமாக இல்லை.   கேடி சகோதரர்களைப் பார்த்து கருணாநிதி பயந்தார் என்பதுதான் உண்மை.   கேடி சகோதரர்களோடு பிணக்கு ஏற்பட்டவுடன், தயாநிதி மாறனை மந்திரி பதவியை விட்டு ராஜினாமா செய்ய உத்தரவிட, கட்சியின் செயற்குழுவை கூட்டி முடிவெடுத்த கருணாநிதி, குடும்பம் ஒன்று சேர்கையில் வசதியாக செயற்குழுவை கூட்ட மறந்து விட்டார்.   “இதயம் இனித்தது, கண்கள் பனித்தனஎன்று ஒற்றை வார்த்தையில் முடித்து விட்டார்.   ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று எழுந்த கேள்விக்கு, “அது முடிந்து போன விவகாரம்என்று முற்றுப் புள்ளி வைத்தார்.



கருணாநிதி, இந்தத் தேர்தல் முடிந்தவுடன் தளர்ந்து போய் விடுவார். அவருக்கு பாராட்டு விழா நடத்தி, காக்காய் பிடிக்கும் ஜால்ராக் கூட்டங்கள் அவரை விட்டு விலகிப் போய் விடும். கருணாநிதியின் கண்ணுக்கு கண்ணாக, உயிருக்கு உயிராக இருந்து ஜாபர் சேட், ஏற்கனவே அதிகாரம் இழந்து நிற்கிறார். ஆகையால், தேர்தலுக்குப் பின், கருணாநிதி தமிழக மக்களுக்கு பெரிய ஆபத்தாக இருக்கப் போவதில்லை. ஆனால், கேடி சகோதரர்கள் ?
திமுக தொண்டர்களின் உழைப்பால் பிடித்த ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, பகாசுர வளர்ச்சி கண்டவர்கள்.

1996. இதற்குப் பிறகுதான், மாறன் சகோதரர்களின் அசல் முகம் தெரியத் தொடங்கியது.   கருணாநிதி ஆட்சியைப் பிடித்தவுடன், சன் டிவி எடுக்கும், நெடுந்தொடர்களுக்கு திரைப்பட நடிக நடிகையரை மிரட்டுவதில் இருந்து, சன் டிவிக்கு விளம்பரம் தருமாறு, தனியார் நிறுவனங்களை மிரட்டுவதில் தொடங்கி கேடி சகோதரர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது.   திமுக ஆட்சி என்பதால் தனியார் நிறுவனங்களும், திரைத் துறையினரும், வாய் மூடி மவுனிகளாக இருந்தனர்.
அறிவாலயத்தில் தனது அலுவலகத்தை வைத்திருந்த சன் டிவி, மெல்ல மெல்ல, அறிவாலயத்தையே தன் வசம் கொண்டு வந்தது. அறிவாலயத்தில் ஒரு அலுவலகம் வைத்திருந்த, வேலூர் எம்எல்ஏ காந்தியை, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி காலி செய்ய வைத்தார் கலாநிதி மாறன்.

அழகிரி, அதிரடி அரசியல் செய்து தனது பெயரை கெடுத்துக் கொண்டார் என்றால், கேடி சகோதரர்கள், அழகிரி செய்வதைப் போல பத்து பங்கு செய்தாலும் வெளியில் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.   கேடி சகோதரர்களைப் போல திமுக ஆட்சியின் அதிகாரத்தை பயன்படுத்தியவர்கள், கருணாநிதி குடும்பத்தில் ஒருவருமே இல்லை.
தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது நடந்த மற்றொரு முக்கிய நிகழ்வு டாடா ஸ்கை தொடர்பானது. டாடா நேரடியாக வீட்டுக்கே தொலைக்காட்சி சேவையை வழங்கும் டாடா ஸ்கை என்ற ஒளிபரப்பை துவக்க உத்தேசித்தது. இதற்கான அனுமதியை வழங்க வேண்டியது தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம்.   டாடா ஸ்கை தொடங்க அனுமதி வழங்குவதை தொடர்ந்து தாமதித்தார் தயாநிதி மாறன்.


இந்த கேடி சகோதரர்கள், இந்து பத்திரிக்கையின் பங்கை வாங்குவதற்கு முயற்சி எடுத்தார்கள் என்ற செய்தி உங்களில் பல பேருக்கு அதிர்ச்சியாக இருக்கும். கேடி சகோதரர்கள் சன் டிவி பங்குச் சந்தையில் நுழைந்த காலத்தில், அதன் மூலம் வந்த பெரிய வருவாயை வைத்து, இந்து பத்திரிக்கையில் பங்கை வாங்க முயற்சித்து, அது நிறைவேறாமல் போனது.
சன் டிவி உள்ளிட்டு, கேடி சகோதரர்கள் மொத்தம் 20 சேனல்களை பல்வேறு தென்னிந்திய மொழிகளில் நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டைப் போல, ஏகபோகம் அங்கே இல்லாவிட்டாலும், தமிழகத்தில் உள்ள, தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசும் மக்களின் ஒட்டு மொத்த கவனத்தையும் ஈர்த்து அதன் மூலம் பெரிய வருவாயை ஈட்ட கடுமையாக முயற்சித்து வருகிறார்கள்.
கேடி சகோதரர்களின் வெற்றிக்கு ஒரு முக்கியமான காரணம், வியாபார தந்திரம். ஒரு விஷயத்தை வியாபார ரீதியாக வெற்றி பெற வைக்க நூதனமான பல்வேறு தந்திரங்களை கையாளுவதில் கேடி சகோதரர்கள் சமர்த்தர்கள். தினகரன் நாளிதழை வாங்கியதும், வடிவமைப்பை மாற்றி வண்ணத்தில் கொண்டு வந்ததோடு, அதை வியாபார ரீதியாக வெற்றி பெற வைக்க மிகச் சிறந்த தந்திரத்தை கையாண்டார்கள். தினத்தந்தி 3 ரூபாய்க்கும், தினமணி 3 ரூபாய்க்கும், தினமலர் 3 ரூபாய்க்கும் விற்றுக் கொண்டிருந்த காலத்தில், தினகரனை 1 ரூபாய்க்கு வழங்கினார்கள். 1 ரூபாய் என்றதும், வியாபாரம் கொடிகட்டிப் பறந்தது. குறுகிய காலத்திலேயே சர்குலேஷன் பல மடங்கு உயர்ந்ததும், பத்திரிக்கை விலையை 2 ரூபாய் ஆக்கி விட்டு இன்று தமிழகத்தின் 2வதாக அதிகம் விற்பனையாகும் நாளிதழாக ஆக்கியிருக்கிறார்கள்.
.
இதற்கு அடுத்து கேடி சகோதரர்கள் இறங்கிய தொழில் திரைப்படத் தயாரிப்பு.   இவர்கள் திரைப்படத் தயாரிப்பில் இறங்கிய பிறகு, சன் டிவி தங்கள் வியாபாரத்துக்கான எத்தனை பெரிய அயோக்கத்தனத்தில் வேண்டுமானாலும் இறங்கும் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.


சன் பிக்சர்ஸ் சார்பில் எடுக்கப் பட்ட முதல் படம் காதலில் விழுந்தேன்’. அந்தப் படத்தில் ஒரு டப்பாங்குத்து பாடலை தவிர்த்து வேறு எதுவுமே இல்லை. மிகச் சுமாரான வசூலைப் பார்த்த அந்தப் படத்தை சன்டிவி டாப் டென் திரைப்படங்களில் முதலிடத்தை பிடித்ததாக தொடர்ந்து பல வாரங்களுக்கு ஒளிபரப்பியது, சன் டிவியின் மோசமான ஊடக தர்மத்தை வெளிப்படுத்தியது.
எந்திரன் என்ற ரஜினிகாந்த் நடித்த படத்துக்காக பெரிய பரபரப்பை ஏற்படுத்தி, இந்தியாவுல் ஏதோ யுகப்புரட்சி நடந்து விட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார்கள் கேடி சகோதரர்கள். இந்தத் திரைப்படம் எதிர்ப்பார்த்ததைப் போல ஓடவில்லை, விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தியது என்று ஒரு செய்தி போட்டதற்காக டெக்கான் க்ரானிக்கிள் மற்றும் தினமணி செய்தித் தாள்களை மிரட்டும் விதமாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியவர்கள் இந்த கேடி சகோதரர்கள் என்பதை மறந்து விடக் கூடாது.   அப்போது சவுக்கும் இதைப் பற்றி கண்டித்து எழுதியது
அடுத்ததாக கேடி சகோதரர்கள் இறங்கிய தொழில் விமான சேவை. ஸ்பைஸ் ஜெட் விமான சேவை நிறுவனத்தில் பெரும்பான்மை பங்குகளை வாங்கி இன்று அந்த நிறுவனத்தை தங்களுக்குச் சொந்தமானதாக ஆக்கிக் கொண்டுள்ளனர் கேடி சகோதரர்கள்.   சமீபத்தில் ஜெயா டிவியில் வெளி வந்த செய்தி கேடி சகோதரர்களின் அயோக்கியத்தனத்துக்கு ஒரு சான்று.

   திமுக சார்பாக, வாக்காளர்களுக்கு கொடுக்கப் படுவதற்காக பல்வேறு மூட்டைகள் ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் சரக்குகளாக தூத்துக்குடியில் வந்திறங்கி சோதனையில் அந்தப் பார்சல்கள் கைப்பற்றப் பட்ட செய்தி, அவ்வளவாக வெளியில் தெரியாமல் போனது.
சமீபத்திய உதாரணம், அன்னா ஹசாரேவின் பட்டினிப் போராட்டம். அன்னா ஹசாரே பட்டினிப் போராட்டத்தை தொடங்கியதிலிருந்து, தேசிய காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் இந்த செய்திக்கு கொடுத்த முக்கியத்துவத்தையும், அதையொட்டி, நாட்டில் உள்ள படித்த வர்க்கம் அனைத்தும் கிளர்ந்தெழுந்ததும் நம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம்.
 ஆனால் சன் டிவி, இது போன்ற ஒரு சம்பவமே நடக்காதது போல, வடிவேலுவின் பேச்சை ஒளிபரப்பிக் கொண்டிருந்தது என்றால், எத்தனை பெரிய அயோக்கியத்தனம் என்பதை நினைத்துப் பாருங்கள்.   நாடே பற்றிக் கொண்டு எறியும், ஒரு செய்தியை, அந்தச் செய்தி தேர்தலை பாதிக்கும் என்பதால், வெளியிடாமல் இருப்பது எத்தனை பெரிய துரோகம் ? அயோக்கியத்தனம் ?
நான்கு வருடங்களாக அமைதியாக இருந்து விட்டு, இன்று திடீரென கருணாநிதி குடும்பத்தை உறித்து தொங்க விட்டுக் கொண்டிருக்கும் விகடன் குழுமத்திலும், கணிசமான பங்குகளை கேடி சகோதரர்கள் வாங்கியிருக்கிறார்கள் என்பது பரவலாக பத்திரிக்கையாளர்கள் மத்தியில் உலவும் செய்தி.   திமுக குடும்பத்தைப் பற்றி இத்தனை செய்திகள் வெளியிட்டாலும், விகடன் குழுமம், கேடி சகோதரர்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல், கவனமாக மவுனம் சாதிப்பது, இந்தத் தகவலை உறுதிப் படுத்துகிறது.

கருணாநிதி ஆட்சி வீழ்த்தப் பட வேண்டியதன் அவசியம், கருணாநிதி மற்றும் அவர் குடும்பத்தினரின் அட்டூழியங்கள் மட்டுமல்ல…..   கேடி சகோதரர்கள் என்ற ஆக்டோபஸ், தமிழகத்தை கபளீகரம் செய்யாமல் இருப்பதற்காகவுமே…..

கட்டுரை நீளமாக இருப்பதால் சுருக்கியுள்ளேன் ,விவரமாக பார்க்க savukku.net க்கு செல்லவும்