Pages

Friday, April 15, 2011

அஞ்சலி


அஞ்சலி

பலமொழி பாடகி சின்னகுயில் சித்ரா'வின் குழந்தையின் மறைவுக்கு என் ஆழ்ந்த அஞ்சலிகள்....


பதினைந்து வருடம் தவமிருந்து பெற்ற பிள்ளை, எனக்கு நெஞ்செல்லாம் பதறுகிறது. ஆண்டவா அக்குடும்பத்திற்கு ஆறுதல் கொடு. அடுத்த
வெள்ளிகிழமை திருவனந்தபுரத்தில் புதிதாக கட்டியுருந்த வீட்டில் குடியேற இருந்தாராம் சித்ரா. வீட்டின் பெயர் "நந்தனம்" மகளின் பெயர் "நந்தனா"...


அசாம் சட்டசபை தேர்தலில், பிரதமர் மன்மோகன் சிங் ஓட்டளிக்காதது கவலை அளிக்கிறது' என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறினார்.


பிரதமருக்குதான் காதே கேக்காதே.....




மும்பை: "ஓட்டு வாங்குவதற்காக பணம் கொடுத்து, வாக்காளர்களின் பெருமையை சீர்குலைத்ததற்கு, அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சித் தலைவர்களுமே பொறுப்பேற்க வேண்டும். அரசியல்வாதிகள் முறைகேடாக, ஏராளமாக கறுப்புப் பணம் ஈட்டுகின்றனர். ஆனால், அந்த கறுப்புப் பணத்தில், குறிப்பிட்ட சிறிய தொகையை மட்டுமே வாக்காளர்களுக்கு கொடுக்கின்றனர்' என, காந்தியவாதியும், சமூக சேவகருமான அன்னா ஹசாரே கூறியுள்ளார்.


சரியா சொன்னீங்க ஐயா....