தீக்குச்சி உரசும்போது
கந்தகம் கருகும் வாசத்தை
எல்லோரும் உணர்கையில்
அதற்கு மருந்து சுமந்த
அரும்புகளின்
கனவுகள் கருகும் வாசத்தை
உன்னால் உணர முடிகிறதா?
அசைவ உணவை
அசைபோட்டபடியே
மீன் குழம்பில்
உப்பு அதிகமாய் இருக்கிறது என்று
எல்லோரும் யோசிக்கையில்
வலை வீசிய மீனவனின்
வேர்வையாய் இருக்குமோ
என நீ யோசிக்கறாயா?
கை கொடு நண்பா
நீ ஒரு கவிஞன்தான்...!
கவிஞனேதான்...!