Pages

Wednesday, April 6, 2011

HOT TALKS...


மதுரை மேட்டர்  :-

எதிர்க்கட்சிகளைவிட தங்களுக்கு இடையூறாக இருக்கும் நேர்மையான ஆட்சியர் சகாயம் அவர்களை எதிரியாக நினைக்கும் இந்தத் தேர்தலில்…….. தேர்தல் என்பதை விட இந்தப் போரில் சகாயம் வெல்ல வேண்டும்.

எனது ஓட்டு மதுரை ஆட்சியர் சகாயம் அவர்களுக்கே!

உண்மையான அஞ்சா நெஞ்சன் இவர்தான்

திருச்சி மேட்டர் :-  தினமலர் நியூஸ்.. 

5 கோடி ரூபாயை துணிச்சலாக மடக்கிப் பிடித்தார் பெண் அதிகாரி:

திருச்சி : ஷெட்டில் நின்றிருந்த தனியார் ஆம்னி பஸ்சின் மேற்கூரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 5.11 கோடி ரூபாயை, திருச்சி ஆர்.டி.ஓ., சங்கீதா, தனி ஆளாக சென்று பறிமுதல் செய்து, சாதனை படைத்துள்ளார்.. 

பல்வேறு வேற்றுமைகளிலும் ஒற்றுமை கண்டு இந்தியா என்கிற ஒரு நாடு ஜனநாயக நாடாக இன்றளவிலும் நீடித்திருப்பதற்கு காரணம் சங்கீதா போன்ற நேர்மையான அதிகாரிகளை நாம் கொண்டிருப்பதால் தான்...பாரதியார் கண்ட புதுப் பெண், வாழ்த்துக்கள்

 


இளம் தலைமுறைக்கு எமது வாழ்த்துக்கள் ...இந்த நாடு உங்களை போன்றவர்களை தான் நம்பி உள்ளது .....