Pages

Monday, April 4, 2011

அரசியல் நகைச்சுவை


1) தலைவா..நம்ம ஆட்சியிலே தான் இந்தியா உலகக் கோப்பை ஜெயிச்சுதுன்னு அறிக்கை விடலாமா?


2)
ஆஃப் அடிச்சா ஆப்பு வைக்கலாம்னு சொல்றாரே..

அப்போ..கட்டிங்க் அடிச்சா..கூட்டணியிலே கட் பண்ணிடுவாங்களா


3)
தலைவர் இரவு 11 மணிக்குப் பிறகு என்ன செய்வார்னு அம்பலப்படுத்துவேன்னு பேசினீங்களே..அவர் அப்படி என்னதான் செய்வார்

ம்...தூங்குவார் ..அதைத்தான் சொன்னேன்



4)
சிரிப்பு நடிகர் ஓவரா பேசறாரே

நான்தான் அப்பவே சொன்னேனே அவருக்கு ஓவர் ஆக்டிங் தான் தெரியும்னு
6)போற இடமெல்லாம் அங்க நம்ம தலைவரோட குடும்பத்தைப் பத்தியே பேசறாங்களே..

அதுக்கு என்ன செய்யறது..எதைப் பேசினாலும் அதில தலைவரோட குடும்பத்தைச் சேர்ந்தவங்க யாராவது இருக்காங்களே!



7)தலைவா..இப்படி இலவசம்..இலவசம்னு கொடுத்தா..அதைக் காரணம் காட்டி நம்ம முக்கியமான திட்டங்களுக்குக் கூட வேர்ல்ட் பேங்க் கடன் கொடுக்கமாட்டாங்க

அதனாலென்ன..நம்ம சாமான்யன்..ங்கறதால வேர்ல்ட் பேங்க் கடன் கொடுக்காம சதி செய்யறாங்கன்னு சொல்லிடலாம்.



8) தலைவா..49ஓ ங்கறது..என்ன செக்க்ஷன் தலைவா.
.சிவிலா..கிரிமினலா..