யார் நம்மை ஆளலாம்
காமராஜர், கக்கன் போன்ற தன்னலம் கருதாது மக்கள் சேவையே மகேசன்சேவை
என இருப்பவர்கள் .
என இருப்பவர்கள் .
அப்படி யாரும் தற்சமயம் இங்கில்லை. இனி ஏதாவது ஒரு தேவகுமாரன் வானிலிருந்து
இறங்கி வந்தால்தான் உண்டு.
இறங்கி வந்தால்தான் உண்டு.
அதுவரை ஊழல் திளைத்த கட்சியில், கொஞ்சமா ஊழல் அடித்த கட்சிக்கு என் தேர்ந்தெடுப்பதே நமக்கு கிட்டிய வாய்ப்பு
யாருக்கு ஓட்டு போடக்கூடாது
எக்காரணம் முன்னிட்டும் ஈழத்து தமிழ் இன ஒழிப்பு கொலைகாரன்காங்கிரஸுக்கு கூடவே கூடாது
அடுத்து
மாநிலத்தை தன் குடும்பத்திற்கு குத்தகை விட்டு, தன் குடும்பத்தினர்களை சிற்றரசர்களாய் முடி சூட்டியவருக்கு,
மூத்தவர் பிள்ளைகள் அனுபவிக்கிறார்களே என துணைவியார் புழுங்க‘நான் வளர்கிறேனே மம்மி’ என மகள் விசுபரூபமெடுத்தன் விளைவுநாட்டுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி நட்டம் - இவர்களை அனுமதித்தகுடும்ப தலைவருக்கு
மாநிலத்தை இருளாக்கியவருக்கு
ஊடத்துறையை போலவே திரைப்படத்துறையையும் கபளீகரன்செய்தவருக்கு
ஒரு குடிகார தலைமுறையையே உருவாக்கி தந்தவருக்கு
ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் எனக்கூறி ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருப்பவருக்கு
அயல் நாட்டு ராணுவ அராஜகத்தால் 550 தமிழக மீனவர்கள் படுகொலை
செய்யப்பட்டபோது கண் காது பொத்தி இருந்தவருக்கு
கூப்பிடு தூரத்தில் கொத்து கொத்தாக நம் சகோதரர்கள்கொலையுண்டானபோது கொலையாளி காங்கிரஸுக்கு வாய் பொத்திசேவகம் செய்தவருக்கு
யாருக்கு ஓட்டு போடலாம்
சுயேட்சையாய் நிற்கும் நல்லவர்களுக்கு
புதிதாய் களத்தில் நிற்கும் தேமுதிகவினருக்கு
ஊழலின் கறை படியாமல் எளிமையாய் வாழும் கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு
………………………………………..
ஆனால் தொங்கு சட்டசபை வராமல் குதிரை பேரத்திற்கு இடம்கொடுக்காமல் உடனடி இன்னொரு தேர்தல் வேண்டாமென்றால் அதிமுககூட்டணிக்கே வாக்களியுங்கள்
(வை கோ வை கூட்டணியில் இருந்து வெளியேற்றினது வருத்தம் தான்.
அதற்காக (கலைஞர்)துரோகியை வளரவிடகூடாது)
திமுகவைவிட அதிமுக எந்த விதத்தில் உயர்ந்தது
இன்றைய நிலைவரை ஜெஜெ யின் பெரிய கொள்ளை 60 கோடி கலைஞர்தரப்போ 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி
ஈழப்பிரச்சினையில் ஜெஜெ எதிரி கலைஞர் துரோகி எதிரியை விடதுரோகிதான்
ஆபத்தானவன்
மீண்டும் திமுக வந்தால்
ஸ்பெக்ட்ராம் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படாது. மாறாக தா.கிருஷணன், தினகரன் ஊழியர்கள் வழக்குகள் போல அந்தரத்தில்
மறைந்து விடும்
ஊடத்துறை, திரைப்படத்துறை போல இன்னும் என்ன என்ன துறைகள் அவர் குடும்பத்தினரால் கபளீகரம் செய்யப்படுமோ.
ஏற்கனவே மகள் வளர்ந்து விட்டேன் என்று காட்டவே நாடு 1 லட்சத்து 76ஆயிரம் கோடி நட்டம் கண்டது .இன்னும் 5 வருடத்தில் வளர்வதற்குஅவரின்பேரன் பேத்திகள் தயார் அதுக்கு இன்னும் எத்தனை கோடி கோடி கோடி யோ
அதிமுகவும் மீண்டும் ஊழலில் இறங்கினால்
இருக்கட்டுமே அடுத்த 5 வருசத்தில் இந்த திருடன் வரட்டும்னு கலைஞருக்காக கொடுப்போம்